கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், “உறியடி உறியடி2 எடுப்பதற்கான காரணம் என்ன?” என்பதற்கு அழகான பதிலைச் சொல்லி இருக்கிறார்.

“இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி2 வருவதற்கான காரணம்” என்கிறார் மற்றும் நடிகரான விஜய்குமார். மேலும் அவர் படம் பற்றி கூறும்போது,

“எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. ‘Of all the arts, for us cinema is the most important’னு லெனின் சொல்லியிருக்கார். ‘கலைகளில் சினிமா தான் பெருசு’ன்னு ஒரு கலைஞன் சொல்லியிருந்தா, அது தற்பெருமைன்னு சொல்லலாம். ஆனா இதைச் சொன்னவர் மாபெரும் புரட்சியாளர். சரி தவற்றைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதே சமயம் எனக்குள்ளே இருக்கிற படைப்பாளியைத் திருப்திப் படுத்தணும்.” என்றார்.

சூர்யா தயாரிப்பாளாராக வந்ததைச் சொல்லும் விஜய்குமார்,

“2டி ராஜசேகர் சாரை ஒருநாள் சந்திச்சேன். அப்போ உறியடி 2 கதையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவருக்கு அது பிடிச்சிருந்தது. உடனடியா முழுக்கதையையும் கேட்டார். கதையின் முதல் வெர்ஷனைச் சொன்னேன். அப்புறம் சூர்யா சாரைப் பார்த்தேன். அப்போ கதையை வலுப்படுத்தி அடுத்த வெர்ஷனைச் சொன்னேன். ஒருசில கேள்விகள் கேட்டார். ” எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, கண்டிப்பா படம் பண்ணலாம்”னு சொன்னதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. காரணம் உறியடி பட ரிலீஸ்ல ஏகப்பட்ட பிரச்சனைகள். பொருளாதார இழப்பை விட மனவலி அதிகமா இருந்தது. “உறியடி2″ படத்துக்கு இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கிடைச்சது நிம்மதியா இருக்கு. சூர்யா சாரும் ஒரு படைப்பாளிக்கு என்ன சுதந்திரம் கொடுக்கணுமோ, அதை எனக்குக் கொடுத்தார். ஷுட்டிங் முடியுற வரைக்கும் எந்தவிதமான பிரஷரும் இல்லாம முடிச்சிட்டோம். படம் சம்மர் ரிலீஸ்” என்றார் உற்சாகமாக.

சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சாதி அரசியலையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு அதற்கானத் தீர்வைச் சொல்லும் படமாக உறியடி2 வந்துள்ளது.

இந்தப்படம் முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடித்திருக்கிறார்கள். கூடவே யூட்யூப் மூலம் பலருக்கும் பரிச்சயமான மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகர் நடித்திருக்கிறார். உறியடியில் பணிபுரிந்த டெக்னிக்கல் டீம் அனைவரும் இதிலும் ஒன்றிணைந்துள்ளார்கள். அசுரவதம் படத்தில் தன் அசுரபலத்தைக் காட்டி, 96 படம் மூலமாக இன்ப ராகம் ஊட்டிய கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

“தீச்சுடர் குனியுமா?
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா?
எரிவா மேலே மேலே”

என ஆரமிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

“கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் சார் பாடிய பாடல் புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்” என ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை கிராமத்து பெண்களுடன் கொண்டாடிய கௌதமி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் வாழ்க்கையின் ஒவ்வாெரு நிலையிலும்
ஒரு தாயாகவாே, மனைவியாகவாே, மகளாகவாே, சகோதரியாகவாே, நண்பியாகவாே, தன்னை சுற்றியிருப்பவர் களின் நலனுக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் எந்த ஒரு எதிர்பார்ப்பு-மில்லாமல் செய்பவள் தான் பெண்…

எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய பாேர்க்களமானாலும் தன்னால் அன்பு பாராட்டப்படுபவர்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும் எந்த ஒரு முகச்சுளிப்புமின்றி செய்பவள் தான் பெண்ணெனும் அந்த உண்மையான ஹீரோ.

இந்த சர்வதேச மகளிர் தினத்தை முள்ளி, வளர்பிறை, முன்னுதிகுப்பம், கத்ரிச்சேரி, உளுத்தமங்கலம் பாேன்ற இடங்களின் அந்த அழகான ஹீரோக்களுடன் கொண்டாடுவது எனக்கு பெருமையளிக்கிறது.

தங்களின் ஆற்றலையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் எனக்கு உத்வேகம் அளித்ததற்கு நன்றி.
-கௌதமி

காஞ்சனா 3 படத்தை 2 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எத்தனையோ பேய் படங்கள் ரிலீஸ் ஆனாலும் லாரன்சின் பேய் படங்களுக்கு மவுசு அதிகம் தான்.

முனி படத்தைத் தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா-2 என படங்களை இயக்கி நடித்தார்.

தற்போது காஞ்சனா 3 படத்தையும் இயக்கி நடித்துள்ளார். இதில் வேதிகா மற்றும் ஓவியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் லாரன்ஸ்க்கு நல்ல மார்கெட் உள்ளது.

எனவே காஞ்சனா 3 படத்தை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

மே 1ந்தேதி இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

பிக்பாஸ் ரைசா இருந்தும் ஜிவி. பிரகாஷுக்கு ‘காதலிக்க யாருமில்லை’-யாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

ஒரு பக்கம் இசையமைப்பாளராக பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் படங்களில் நாயகனாக அதைவிட பிஸியாகவே வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் காதல் 100 சதவிகிதம், அயங்கரன், அடங்காதே, குப்பத்துராஜா, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி, காதலை தேடி நித்யானந்தா, ரெட்டை கொம்பு உள்ளிட்ட படங்கள் உள்ளன.

தற்போது மற்றொரு படத்திற்கு காதலிக்க யாருமில்லை என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்படதை கமல் பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்க பிக்பாஸ் புகழ் ரைசா நாயகியாக நடிக்கிறார்.

BREAKING ரஜினி-விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனை செலக்ட் செய்த சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த எந்திரன், பேட்ட, விஜய் நடித்த சர்கார் ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது. அதன் விவரம் வருமாறு…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படம் மே 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதற்கு அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயனை நாயகனாக சினிமாவில் (மெரினா படத்தில்) அறிமுகப்படுத்தியவரே இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows