விஜய்யுடன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்து வரும் படங்களை போலவே, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சுந்தர் சி இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, விஜய் நடிக்கவுள்ள ஒரு படத்தை இந்நிறுவனம் தயாரிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது.

மேலும் இப்படத்தை தெறி இயக்குனர் அட்லி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

பாலாவின் அடுத்த படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவர்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் நமக்கு அறிமுகமான நடிகர், நடிகைகளை வைத்தே படம் எடுப்பவர் பாலா.

தற்போது முதன்முறையாக புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.

இப்படத்தில் ஹீரோவாக சாட்டை படத்தில் நடித்த யுவன் நடிக்கிறார்.

ஹீரோயினாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரகதி நடிக்கவுள்ளார்.

பாலாவின் இந்த தேர்வு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

‘கீர்த்தி நல்லா விளையாட்றதே ஆச்சரியம்தான்’…கலாய்த்த ‘ரெமோ’ ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவந்து வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரிடம் பேசும்போது எவராயிருந்தாலும் கொஞ்சம் பார்த்துதான் பேச வேண்டும்.

கவுண்டர் மேல் கவுண்டர் கொடுத்து நம்மை சிக்கலில் மாட்டிவிடுவார்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் நடந்த கேம் ஷோவில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.

அதில் ஒரு உதவிக்காக சிவகார்த்திகேயனுக்கு போன் செய்துள்ளார்.

அப்போது அந்த தொகுப்பாளர் கீர்த்தி நன்றாக விளையாடுகிறார் என கூறினார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘அந்த பொண்ணு நல்லா விளையாட்றதே ஆச்சரியம்தான்’ என கூறி கலாய்த்தார்.

சினிமா பார்க்கும் போதே விமர்சனம் செய்பவர்களுக்கு சித்தார்த் நெத்தியடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது.

அது சினிமா ஆனாலும், அரசியல் ஆனாலும் அனைவரும் அதை விமர்சனம் செய்ய தகுதியானவர்களே.

தற்போது வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சாதனங்கள் நம் செல்போனிலே இருப்பதால் நொடிக்கும் நொடி, தாம் பார்க்கும் விஷயங்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதிலும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே படத்தின் காட்சிகளை விவரித்து, சூப்பர், மொக்கை என்றெல்லாம் விமர்சனம் செய்கின்றனர்.

இன்று வெளியாகியுள்ள இருமுகன் படத்தை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது…

“படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ட்வீட் செய்தால், படத்தை முழுமையாக பார்ப்பதற்கு என்றே தனி மூளை வேண்டும்.

உங்களுக்கு படம் பிடித்திருந்தால் பாராட்டுங்கள். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள்.
படத்தை பார்க்காதீர்கள் என்று சொல்லாதீர்கள்” என காரசாரமாக பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டுக்கள் இங்கே…

சிம்புவுடன் இணைந்த அனிருத்; இது ‘ரம்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய இளைஞர்களின் ஹாட் நாயகர்களான சிம்பு மற்றும் அனிருத் முதன்முறையாக ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ரம்.

இப்படத்தில் உள்ள ‘பேயோ போபிலியா’ என்ற பாடலை சிம்பு பாட, பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

பேய்களுக்கு நாம் பயப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை மையமாக கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

பேய்களை விட நாம் வாழுகின்ற இந்த உலகம் அதி பயங்கரமானது என்கிற கருத்தை இந்த பாடல் வலியுறுத்தும் என்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி இருக்கும் படம்தான் இது.

இதில் ஹ்ரி ஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நயன்தாரா கேரக்டரை இப்போ சொல்ல மாட்டாங்களாம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்நிதி நடிப்பில் பெரும் ஹிட்டடித்த படம் டிமான்ட்டி காலனி.

இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து, அதர்வா மற்றும் நயன்தாரா இணையும் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கவிருக்கிறார்.

ஆனால் இவர்கள் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதுகுறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது…

“போலீஸ் வேடத்தில் நயன்தாரா நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை. ஆனால் அவர் கேரக்டர் படு சஸ்பென்ஸ்” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows