‘பைரவா’ படத்தின் கதை உண்மைச் சம்பவம்?

‘பைரவா’ படத்தின் கதை உண்மைச் சம்பவம்?

actor vijay photosபரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் பைரவா.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் நட்சத்திர கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா, பாப்ரிகோஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அண்மை காலமாக விஜய் தன் படங்களில் பாடல்களை பாடி வருகிறார்.

எனவே, இப்படத்திலும் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம்.

விரைவில் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதையானது கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம் எப்போது? என்ன கதை?

ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம் எப்போது? என்ன கதை?

aishwarya dhanush stills‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்தார்.

இந்த இரண்டும் படங்களும் இவரின் இயக்கத்திற்காக பேசப்பட்டது.

எனவே இவரது அடுத்த படம் என்ன? என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்தது.

இவரது அடுத்த படம் பெண்களை போற்றும் வகையில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

தற்போது பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருவதால், இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.

முதல் இரண்டு படங்களை போல், இதில் தனுஷ் நடிப்பாரா? என்பது குறித்த தகவல்கள் தற்போது இல்லை.

அரவிந்த்சாமியுடன் த்ரிஷா; ‘சதுரங்கவேட்டை-2’ வில் கூடுதல் ட்விட்ஸ்டுகள்

அரவிந்த்சாமியுடன் த்ரிஷா; ‘சதுரங்கவேட்டை-2’ வில் கூடுதல் ட்விட்ஸ்டுகள்

arvindswamy and trishaநடிகர் மனோபாலா தயாரிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல லாபத்தை கொடுத்தது.

எனவே, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவிருக்கிறார் இவர்.

முதல் பாகத்தில் கிராமம் சார்ந்த ஏமாற்று வேலைகளை காட்டியிருந்தனர்.

தற்போது உருவாகவுள்ள இரண்டாம் பாகத்தில் தகவல் தொழில்நுட்ப மற்றும் அதனைச் சார்ந்த பல ஏமாற்று வேலைகளை காட்டப்போகிறார்களாம்.

இப்படத்திற்கு வினோத், கதை வசனம் எழுத, சலீம் பட இயக்குனர் நிர்மல் இயக்கவிருக்கிறார்.

இதில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்க, நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘பாக்யராஜ் இல்லன்னா அய்யனார் வீதி இல்லை’ – ஜிப்ஸி ராஜ்குமார்

‘பாக்யராஜ் இல்லன்னா அய்யனார் வீதி இல்லை’ – ஜிப்ஸி ராஜ்குமார்

Bhagyaraj helped lot in Ayyanar Veethi project says Jipsy Rajkumarஜிப்ஸி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அய்யனார் வீதி.

சாட்டை யுவன் நாயகனாகவும், ஷாரா ரெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

கே.பாக்யராஜ் மற்றும் பொன்வண்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சிங்கம்புலி, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை உள்ளிட்டோரும் உண்டு.

யு.கே.முரளி இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீசாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல் தயாரித்திருக்கிறார்.

இப்படம் குறித்து ஜிப்ஸி ராஜ்குமார் கூறியதாவது…

“நான் ஒரு பத்திரிகையாளன். ஜிப்ஸி தியேட்டர் என்ற பெயரில் தெரு நாடகங்கள் நடத்தி வருகிறேன். அந்த அனுபவத்தில் சினிமா இயக்க வந்திருக்கிறேன்.

இப்படத்தை என் சொந்த ஊரான ராஜபாளையத்தில் இயக்கியிருக்கிறேன்.

ஒரு ஐய்யர், அய்யனாராவதுதான் இப்படத்தின் ஒன்லைன்.

கே.பாக்யராஜை படமாக்கியது என் பாக்கியம். அவர் ஸ்கிரிப்ட், வசனத்தில் நிறைய உதவிகளை செய்தார்.

அவர் இல்லாவிட்டால் இந்த அய்யானர் வீதி இல்லை” என்றார் ஜிப்ஸி ராஜ்குமார்.

தல-57 படங்கள் லீக்; ஆத்திரப்பட்ட அஜித்?

தல-57 படங்கள் லீக்; ஆத்திரப்பட்ட அஜித்?

actor ajith kumarசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 57 படத்தின் சூட்டிங் அண்மையில் ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்றது.

அப்போது இதுகுறித்த செய்திகள் அந்நாட்டு பத்திரிகைகளில் வெளியான செய்திகளை பார்த்தோம்.

மேலும் அந்த செய்திகளில் காட்சிகள், சூட்டிங் சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் வெளியானதாம்.

பலத்த பாதுகாப்பு இருந்தும் இந்த படங்கள் வெளியானது எப்படி? என படக்குழுவினரிடம் அஜித் ஆத்திரப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று (செப். 23) இதன் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் கதை இதுதானா?

தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் கதை இதுதானா?

dhanush and rajkiranராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கும் ‘பவர்பாண்டி’ படத்தை தனுஷ் இயக்கவிருக்கிறார்.

இதில் பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்டோர் நடிக்க, சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.

ராஜ்கிரணின் மனைவியாக நதியா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணிபுரியும் கலைஞர்களை பற்றிய படம்தான் இது என தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த கலைஞர்களுக்கு வயதான பிறகு அவர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் சொல்லவிருக்கிறார்களாம்.

இப்படத்தின் இயக்குனர் தனுஷை ராஜ்கிரண் செல்லமாக மருமகன் என்றுதான் அழைப்பாராம்.

More Articles
Follows