மாஸ்டர் படத்துக்காக கெட் அப்பில் ரிஸ்க் எடுக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய 2 படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் `மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் முதன்முறையாக விஜய் மீசை இல்லாமல் நடித்து வருகிறாராம்.

கர்நாடக மாநிலம் சிமோகாவில் ஜெயில் அரங்கு அமைத்து, அதில் படப்பிடிப்பு நடந்தது. இங்கு படமாக்கப்பட்ட காட்சியில் தான் விஜய் மீசையில்லாமல் நடித்தாராம்.

Vijay goes for clean shaven look for Master

தர்பாரை திட்டிய ரஜினி ரசிகர்களை அலற விடும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் டைரக்டர் முருகதாஸ் முதன்முறையாக இணைந்துள்ள படம் தர்பார்.

லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்ற சும்மா கிழி என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.

இந்த படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.

இதனிடையில் இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் போதுமான விளம்பரங்களை செய்யவில்லை என ரஜினி ரசிகர்களை வசை பாடினர்.

ஆனால் நாள்கள் நெருங்க நெருங்க தர்பார் புரோமோசன்களால் இணையத்தை அதிர வைத்து வருகிறது லைகா.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போஸ்டர்களை வெளியிட்டு அதில் அதிரடியான வாசங்கள் பதிவிட்டு வருகின்றது. இது ரஜினி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

விமானங்களிலும் ரஜினியின் தர்பார் பட ஸ்டிக்கர்களை வரைந்து பறக்கவிட்டுள்ளனர்.

மேலும் படத்தின் இடம் பெற்றுள்ள வீடியோ காட்சிகளையும் 20 நொடிகளில் வெளியிட்டு வருகின்றது.

இதனால் லைகாவை திட்டிய ரஜினி ரசிகர்களே தற்போது மிரட்டு வருகின்றனர்.

Lyca Production doing promotion in vera level for Darbar

தளபதி 65 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்..? டைரக்டர் இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது.

இதில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய்யின் 65-ஆவது படம் தொடர்பான சில தகவல்கள் வருகின்றன.

அதாவது தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லி இவர்களில் யாராவாது ஒருவர் இந்த இப்படத்தை இயக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் நடித்த சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 65 movie will be produced by Sun Pictures

சூர்யா-தாணு-வெற்றிமாறன் கூட்டணியில் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஏப்ரலில் வெளியாகிறது.

இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இது சூர்யாவின் 40வது படமாகும்.

இந்த நிலையில், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வெற்றிமாறன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்.

Again GV Prakash team up with Suriya for Vetrimaaran direction

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் பட இயக்குனர் இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாக படத்தயாரிப்பை விட தான் நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

இவர் நடித்துள்ள பட்டாஸ் படம் ஜனவரி 16 திரைக்கு வருகிறது.

இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த நிலையில் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

ஆனால் பட இயக்குனர் யார்? என்பதை அறிவிக்கவில்லை.

தற்போது இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் துனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Who will be director of Dhanush 44 Here is hint

2020 ஆயுதபூஜைக்கு அதிரடியாக வரும் தலைவர் 168

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்பார் பட ரிலீசாவதற்குள் தன் அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்கி வருகிறார்.

ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

டி.இமான் இசையமைக்க இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் 2020 தீபாவளி இந்த படத்தை வெளியிடயிருந்தனர்.

ஆனால் தற்போது முன்கூட்டியே ரிலீஸ் செய்ய அதாவது இந்தாண்டு ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Sun picture plans to release Thalaivar 168 on Ayudha Pooja

More Articles
Follows