கன்னியாகுமரி தொகுதியில் கமல் கட்சி சார்பாக விஜய் படத்தயாரிப்பாளர் போட்டி

கன்னியாகுமரி தொகுதியில் கமல் கட்சி சார்பாக விஜய் படத்தயாரிப்பாளர் போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, கமல், சீமான் மற்றும் தினகரன் ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன.

(தேமுதிக தேர்தல் நிலைபாடு விரைவில் தெரிய வரும்..)

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் & சமத்துவ மக்கள் கட்சி & இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) ஆகிய 3 கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு விட்டது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் சரத்குமார் (சமக) மற்றும் ஐஜேகே ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கன்யாகுமாரி சட்டமன்ற தொகுதியில் கலப்பை மக்கள் இயக்க தலைவர், திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுகிறார்.

விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay film producer to contest in Kanyakumari

unnamed

விக்ரம் & துருவ் இணையும் படத்தில் சிம்ரன் & வாணி போஜன்

விக்ரம் & துருவ் இணையும் படத்தில் சிம்ரன் & வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் & அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சீயான் 60’ என அழைக்கின்றனர்.

இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று மார்ச் 10 முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணி புரியவுள்ளார்.

Chiyaan 60 movie starts with pooja today

விக்ரம் பிரபு & தமிழ் & எஸ்ஆர் பிரபு இணையும் ‘டாணாக்காரன்’

விக்ரம் பிரபு & தமிழ் & எஸ்ஆர் பிரபு இணையும் ‘டாணாக்காரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘டாணாக்காரன்’.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டரில் விக்ரம் பிரபு சுதந்திரத்திற்கு முந்தைய 1947 இந்தியாவைச் சேர்ந்த போலீஸ் யுனிபார்மில் காணப்படுகிறார் விக்ரம் பிரபு.

இந்த படம் குறித்து விக்ரம் பிரபு தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது…

“இந்த கதையில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கதைக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடின உழைப்பு தேவைப்படுகிறது.

ஆனால் எங்களிடம் சிறப்பான குழு இருக்கிறது. எனது முழு அணிக்கும் வாழ்த்துக்கள் மற்றும் எப்போதும் போல, உங்கள் அன்பும் ஆதரவும் தேவை” என தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை எஸ்ஆர் பிரபு சகோதரர்கள் தயாரிக்கின்றனர்.

Vikram Prabhu’s next film title is announced

காதல் பொய்.. காமம் நிஜம்… ; அதிர வைக்கும் ‘பூம் பூம் காளை’

காதல் பொய்.. காமம் நிஜம்… ; அதிர வைக்கும் ‘பூம் பூம் காளை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’..

இந்தப்படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.

காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும் என்கிறார் இயக்குனர் R.D.குஷால் குமார்..

‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்..

நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.. நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்தபின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே.. அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான்.

இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார்.

கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடிக்கின்றனர்..

மார்ச் 12 – ல் திரைக்கு வரும் இந்த படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ்’ உலகமெங்கும் வெளியிடுகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு: K.P.வேல்முருகன்

படத்தொகுப்பு: யுவராஜ்

இசை: P.R.ஸ்ரீநாத்

பாடல்கள்: S.ஞானகரவேல்

Tamil film Boom Boom Kaalai movie preview

மன்சூர் அலிகான் கேட்ட தொகுதியை தங்கச்சிக்கு கொடுத்துட்டேன்.. அதான் – சீமான்

மன்சூர் அலிகான் கேட்ட தொகுதியை தங்கச்சிக்கு கொடுத்துட்டேன்.. அதான் – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன் தன் கட்சி சார்பில் நிற்கும் 234 தொகுதி வேட்பாளர்களையும் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார் ‘நாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதற்கு முன்பு.. தேர்தலில் சீமான் தனக்கு தொகுதி ஒதுக்கவில்லை என அந்த கட்சியில் இருந்து விலகினார் மன்சூர் அலிகான்.

பின்னர் ‘தமிழ்த் தேசிய புலிகள் கட்சி’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்.

தேர்தல் நெருங்கி விட்டதாலும் தன் புதிய கட்சியை பதிவு செய்ய இயலாத நிலை (கால அவகாசம்) உருவானதாலும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றார் மன்சூர் அலிகான்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் விலகல் குறித்து பிரபல ஊடகத்திற்கு சீமான் பேட்டியளித்தார்.

அதில் சீமான் கூறியதாவது…

“தேர்தலில் போட்டியிட பட்டுக்கோட்டை தொகுதியை கேட்டார் மன்சூர் அலிகான்.

ஆனால், அங்கு ஏற்கெனவே தங்கச்சியை நிற்க சொல்லிட்டேன். அவரைத் திரும்ப பெறுவது என்பது இயலாத நிலை.

எனவே சேப்பாக்கம் தொகுதியில் நிற்க சொல்லி அந்த தொகுதியையும் கொடுத்து விட்டேன்.

ஒரு நாள் களத்திற்கு சென்று வேலை பார்த்தார். பின்னர் திடீரென்று புதுக்கட்சி தொடங்குகிறேன் என சென்றுவிட்டார். அதுதான் என் வருத்தம்” என சீமான் தெரிவித்துள்ளார்.

Seeman explains why manssor ali khan left NTK

தல – தளபதி பற்றி பேசிய ‘பனங்காட்டுப்படை கட்சி’ ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரி நாடார்

தல – தளபதி பற்றி பேசிய ‘பனங்காட்டுப்படை கட்சி’ ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரி நாடார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

8 விரல்களில் பெரிய மோதிரம்… கைகளில் 1 கிலோ தங்கம்… கழுத்து முதல் வயிறு வரை 3 கிலோ தங்க செயின்கள்.. நாடார் என்ற ஜாதி பெயரில் பெரிய டாலர்… நீண்ட தலை முடி… இதுதான் ஹரி நாடார் என்பவரின் அடையாளம்.

ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இத்துடன் வெளிநாட்டு கம்பெனிகளுடன் இணைந்து ‘கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

‘2கே அழகானது காதல்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்ழ் இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

மேலும் ‘பனங்காட்டுப்படை கட்சி’யின் ஒருங்கிணைப்பாளரான இவர் அந்த கட்சியின் சார்பாக ஆலங்குளம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

இவர் கட்சி சார்பாக (நாடார் ஓட்டுக்களை குறி வைத்து) 40 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் இவரின் சமீபத்திய பேட்டியில்…

“தல அஜித் & தளபதி விஜய் பற்றி பேசியிருந்தார்.

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காவிட்டாலும் கூட அஜித்தின் மனிதாபிமானம் பிடிக்கும். அவர்தான் என் ரோல் மாடல்.

அஜித் பிடித்தவராக இருந்தாலும் ‘சர்க்கார்’ படத்துக்கு பிரச்னை ஏற்பட்டபோது, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

Hari Nadar talks about Thala Thalapathy

More Articles
Follows