விஸ்கி விளம்பரத்தில் விஜய் பட ஹீரோயின்.; ரசிகர்கள் கண்டனம்

விஸ்கி விளம்பரத்தில் விஜய் பட ஹீரோயின்.; ரசிகர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய கவர்ச்சி படங்களை அடிக்கடி தன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவார்.

மாலத்தீவுக்கு சென்று வந்தபோது எடுத்த படங்களை பதிவிட்டு இருந்தார் பூஜா ஹெக்டே.

இந்த நிலையில் ஒரு மது விளம்பர வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஒரு பிரபல நிறுவனத்தின் மதுவை கிளாசில் ஊற்றி வைத்து விட்டு அதனருகே கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டுள்ளார் பூஜா.

மது குடிப்பதே தவறு. அதை இப்படி நீங்கள் செய்யலாமா? என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Vijay film heroine in controversial liquor ad

சிம்பு பட வில்லனுக்கு ஜோடியாகிறார் சூர்யா பட ஹீரோயின்

சிம்பு பட வில்லனுக்கு ஜோடியாகிறார் சூர்யா பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிவி. பிரகாஷ் உடன் சர்வம் தாளமயம் மற்றும் சூர்யா உடன் சூரரைப்போற்று ஆகிய படங்களில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி.

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் அபர்ணா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எந்த பட அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மலையாளத்தில் காமெடி நடிகர் நீரஜ் மாதவ்க்கு ஜோடியாக நடித்து வருகிறாராம் அபர்ணா. இந்த படத்திற்கு சுந்தரி கார்டன்ஸ் என்ற டைட்டில் வைத்துள்ளனர்.

கௌதம் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்து வருபவர்தான் இந்த நீரஜ் மாதவ் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actress Aparna Balamurali joins Neeraj Madhav next film

திருமணத்திற்கு தடை.; மீண்டும் அம்மன் சீசனை தொடங்க வரும் ‘உத்ரா’

திருமணத்திற்கு தடை.; மீண்டும் அம்மன் சீசனை தொடங்க வரும் ‘உத்ரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

25 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்திய சினிமாவில் அம்மன் பட சீசன் இருந்தது. தமிழகத்தில் இத்தனை விதமான அம்மன் சாமிகள் இருக்கிறார்களா? என்பதே அப்போதுதான் தெரிய வந்தது.

அதன்பின்னர் அம்மன் சீசன் முடிந்துவிட்டதோ என்னவோ.? தமிழ் இயக்குனர்கள் அம்மனை கண்டுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு உத்ரா என்ற பெயரில் அம்மன் படம் ஒன்று வெளியாகவுள்ளது-

இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரிக்க நவீன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். சாய்தேவ் இசை அமைக்க, ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் கௌசல்யா அம்மனாக நடிக்க உத்ராவாக ரக்ஷா நடிக்கிறார்.

இந்த படம் அடுத்த மாதம் டிசம்பர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கதைக்சுருக்கம்..

வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை. அங்கு திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.

அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன-? என்பதை சொல்ல இந்த படம் வருகிறது.

உத்ரா ரிலீசுக்கு பிறகு மீண்டும் அம்மன் சீசன் தொடங்குமா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Uthraa new tamil film will release on dec 10

சிம்பு ரிட்டர்ன்ஸ்..: ‘மாநாடு’ பட ரீமேக்.. ஓடிடி.. சேட்டிலைட் அப்டேட்ஸ்

சிம்பு ரிட்டர்ன்ஸ்..: ‘மாநாடு’ பட ரீமேக்.. ஓடிடி.. சேட்டிலைட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் நவம்பர் 25ல் ரிலீசானது.

முதல் நாள் முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அருமையான வரவேற்பைப் பெற்றுள்ளது.

படம் வெளியாக ரெண்டே நாளில் தமிழகத்தில் மாநாடு படம் 14 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே அறிவித்துவிட்டார்.

ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை படத்தை பார்த்த அனைவரும் சிம்பு. எஸ்ஜேசூர்யா, வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பட தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட தொடங்கியுள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் பெரும் தொகை கொடுத்து வாங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இத்துடன் இப்பட ஓடிடி டிஜிட்டல் உரிமத்தை Sony Liv வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவையில்லாமல் பலத்த போட்டிகளிடையே மாநாடு சேட்டிலைட் உரிமத்தை ஸ்டார் விஜய் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே கலைஞர் டிவி இப்பட உரிமைக்கு கடுமையாக போராடியாதாகவும் ஆனால் அதிக விலைக்கு விஜய் டிவி வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு 3 வாரங்கள் நிறைவான பின்னரே ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்பதும் படம் ரீலீசாகி மூன்று மாதங்களுக்கு பிறகே டிவி.,யில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்பதும் விதிமுறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu satellite and OTT rights updates

‘சிங்கம்’ சூர்யாவுடன் ‘யானை’ அருண் விஜய்யை மோதவிடும் ஹரி

‘சிங்கம்’ சூர்யாவுடன் ‘யானை’ அருண் விஜய்யை மோதவிடும் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் முதன்முறையாக அவரது மச்சான் அருண்விஜய் நடித்து வரும் படம் ‘யானை’.

இப்படத்தில் அருண்விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் யானை படத்தை பிப்ரவரி 4-ந்தேதி வெளியிட ஹரி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ஏற்கெனவே பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். ஆனால் ஹரிக்கும் சூர்யாவிற்கும் ஏற்பட்ட கருத்து மோதலில் சூர்யா அந்த படத்திலிருந்து விலகினார்.

இதன் பின்னரே அருண்விஜய்யை வைத்து யானை படத்தை இயக்க ஆரம்பித்தார் ஹரி. (ஒரு வேளை இந்த படம் அதே கதையா? என்பது தெரியவில்லை.)

சூர்யாவுக்கு சிங்கம் 1,2, 3 ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஹரி.

தற்போது தான் வளர்த்த சிங்கத்துடன் தன் யானையை மோதவிடவுள்ளார் டைரக்டர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Arun Vijay and Suriya films to clash on feb

தேசிய விருதை அடுத்து ‘அசுரன்’ தனுஷூக்கு ‘பிரிக்ஸ்’ விருது

தேசிய விருதை அடுத்து ‘அசுரன்’ தனுஷூக்கு ‘பிரிக்ஸ்’ விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் அடங்கிய சர்வதேச கூட்டமைப்பை ‘பிரிக்ஸ்’ என அழைத்து வருகிறோம்.

கடந்த 5 வருடங்களாக அதாவது 2016ம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் சார்பில் பிரிக்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்பட விழாவில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டும் விருதுகள் வழங்கப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில் கோவாவில் 52வது சர்வதேசத் திரைப்பட விழாவுடன் 6வது பிரிக்ஸ் திரைப்பட விழாவும் இணைந்து நடத்தப்பட்டது.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்கு தனுஷுக்கு வழங்கப்பட்டது.

ஏற்கெனவே, அசுரன் படத்திற்காக தேசிய விருதை பெற்றிருக்கிறார் தனுஷ் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த விருது பெற்றது குறித்து “ஒரு முழுமையான மரியாதை” என தனுஷ் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Dhanush wins Best Actor for Asuran at BRICS Film Festival

More Articles
Follows