‘பைரவா’ தவிர விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து

‘பைரவா’ தவிர விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa vijay keerthy sureshபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில்தான் தெலுங்கானா, ஆந்திராவிலும் தெலுங்கு பதிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நாளில் விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் ரீமேக்கான கைதி எண் 150 படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவி. விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நேற்று மாலை இப்படத்தினி டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் மாபெரும் வெற்றிப் பெற்ற கத்தி படம் தெலுங்கில் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது? என்பதை காண விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்களாம்.

Vijay fans will have double treat on pongal 2017

‘மிக மிக அவசரம்’ ஆக பாக்யராஜ் இடத்தை பிடித்த சுரேஷ் காமாட்சி

‘மிக மிக அவசரம்’ ஆக பாக்யராஜ் இடத்தை பிடித்த சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh kamatchiஅமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தனது வி ஹவுஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ’மிக மிக அவசரம்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதன் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ள கோனேரிப்பட்டி பாலத்தில் நடைபெற்றுவருகிறது.

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு “பவுனு பவுனுதான்” படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது.

பாக்யராஜும், ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

மிக மிக அவசரம் படத்தில் இந்த கோனேரிப்பட்டி பாலம் முக்கிய இடம்பிடித்துள்ளதால் 23 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

நீண்ட காலத்திற்கு பின் படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.

இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்ட பவுனு பவுனுதான் படம் போலவே இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று வாழ்த்தி செல்கின்றனர்.

இதில் முக்கிய கேரக்டரில் சீமான் நடிக்கிறார்.

கதாநாயகனாக கோரிப்பாளையம் ஹரிஷ், கதாநாயகியாக கங்காரு, வந்தாமல ஸ்ரீஜா மற்றும் வழக்குஎண் முத்துராமன், சேதுபதி படத்தில் விஜய்சேதுபதியின் நண்பனாக நடித்த லிங்கா, ஆண்டவன் கட்டளை அரவிந்த், இயக்குநர் சரவண சக்தி, வீ.கே.சுந்தர்,வெற்றி குமரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

srija miga miga avasaram

மேலும் முக்கிய அம்சமாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு எபிக் வெப்பன் ஹீலியம் 8கே சென்சார் என்ற அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

இது 8கே ரெசொல்யூஷன் அடங்கிய கேமரா ஆகும். இதன் மூலம் காட்சிகளை மிக துல்லியமாக படம் பிடிக்கலாம்.

இந்த கேமரா இந்தியாவிலேயே முதன்முறையாக ’மிக மிக அவசரம்’ படத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Producer Suresh kamatchi became director for miga miga avasaram

ஜெயலலிதாவுக்காக கமல் செய்ததை ரஜினி செய்வாரா?

ஜெயலலிதாவுக்காக கமல் செய்ததை ரஜினி செய்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha rajini kamalகடந்த செப். 22ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி (2016) வரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால், தன் நவம்பர் 7ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கமல் கூறியிருந்தார்.

இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு ஜெயலலிதா காலமானார்.

தற்போதுவரை அந்த துயரத்தில் இருந்து மீளாத சோகத்தில் தமிழகம் உள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் அதாவது டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது.

எனவே ரஜினியும் கமலை பின்பற்றி தன் பிறந்தநாளை கொண்டாட்டங்களை தவிர்க்க ரசிகர்களிடம் சொல்லுவாரா? என்று பார்க்கலாம்.

சிங்கம் சூர்யாவுடன் மோதும் ‘தேசிய விருது’ நடிகர்

சிங்கம் சூர்யாவுடன் மோதும் ‘தேசிய விருது’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaசூர்யா நடித்துள்ள சி3 படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இத்துடன் சசிகுமார் நடித்துள்ள பலே வெள்ளையத் தேவா உள்ளிட்ட சில படங்களும் ரேஸில் இணைந்துள்ளன.

இவற்றைத் தொடர்ந்து, பாபி சிம்ஹாவின் பாம்பு சட்டை படமும் வெளியாக உள்ளதாம்.

ஜிகர்தண்டா படத்திற்காக பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆதம்தாசன் இயக்கியுள்ள பாம்பு சட்டை படத்தை மனோபாலா தயாரித்துள்ளார்.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் தாமிரபரணி பானுவும் நடித்துள்ளார்.

தற்போது இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அதிமுக-வில் தல…’ அஜித் தரப்பு ரியாக்ஷன் என்ன..?

‘அதிமுக-வில் தல…’ அஜித் தரப்பு ரியாக்ஷன் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vesti dhotiமுதல்வர் ஜெயலலிதா இறந்து இன்னும் முழுமையாக 3 நாட்கள் கூட நிறைவடையவில்லை.

இன்றும் அம்மையாரின் சமாதியில் பொதுமக்கள் வந்து பார்த்த வண்ணம் கண்ணர் விட்டு அழுகின்றனர்.

பல தொண்டர்கள் சமாதியருகே அமர்ந்து மொட்டையடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவில் அஜித் இணைய உள்ளதாகவும் அவர்தான் அடுத்த முதல்வர் என்ற செய்திகளை கேரளா மற்றும் ஆந்திரா, தெலுங்கானவைச் சேர்ந்த பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன.

தற்போது இது குறித்து அஜித் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்..

‘அஜித் ஒரு போதும் அரசியல் வாழ்க்கையை நினைத்து பார்த்தது இல்லை.

வாக்களிப்பது ஜனநாயக கடமை. அதை சரியாக செய்யவே விரும்புகிறார்.

இதுபோன்ற வதந்திகள் எப்படி ஆரம்பித்தது என்று எங்களுக்கே தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

Will actor Ajith join in ADMK party?

‘2.0’ படத்தை விட ‘பாகுபலி’க்கு பல மடங்கு வரவேற்பு

‘2.0’ படத்தை விட ‘பாகுபலி’க்கு பல மடங்கு வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali2 is 2017s most awaited Hindi film in Indiaஇந்திய சினிமாவே பிரமிக்கும் வகையில் தென்னிந்தியாவில் இருந்து ஷங்கரின் 2.0 மற்றும் ராஜமௌலியின் பாகுபலி-2 ஆகிய படங்கள் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் இப்படங்கள் வெளியாகவுள்ளன.

இந்த இரண்டு படங்களின் முதல் பாகங்கள் ரிலீஸாகி இந்தியளவில் பெரும் சாதனைகளை படைத்தது.

பாகுபலி2, அடுத்த வருடம் 2017 கோடை விடுமுறையிலும் 2.ஓ படம் 2017 தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் வெளியாக உள்ள படங்களில் எந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறீர்கள் என கருத்துக் கணிப்பை ஒரு வட இந்திய இணையத்தள நிறுவனம் நடத்தியுள்ளது.

அதில் பாகுபலி-2 படம் 51% வாக்குகளை பெற்றுள்ளது.

இதனையடுத்து, ஷாரூக்கானின் ரயீஸ், அக்ஷய்குமாரின் கோல்மால் 4, சல்மான்கானின் டியூப்லைட் படங்கள் உள்ளன.

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படத்திற்கு குறைந்த வாக்குகளே கிடைத்துள்ளன.

இவை இந்திப் படங்களுக்கான கருத்துக்கணிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Baahubali2 is 2017’s most awaited Hindi film in India

More Articles
Follows