உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்… தயாரிப்பாளர் ஹேமா

உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்… தயாரிப்பாளர் ஹேமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans waiting will be worth for Mersal Teaser says Producer Hema Rukumaniஏஆர்.ரஹ்மான், விஜய், அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் விரைவில் மெர்சல் டீசர் வெளியாகும் என தெரிவித்திருந்தார் அட்லி.

இப்படத்தை தீபாவளி தினத்தன்று வெளியிடவுள்ளதால் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் அட்லி.

இந்நிலையில் இப்பட டீசர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இதன் தயாரிப்பாளர் ஹேமா ருக்குமணி.

அதில்.. “டீசர் விரைவில் வெளியாகும், தேதி அறிவிக்கப்படும். ரிலாக்ஸாக இருங்கள், உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். தவறான எண்ணங்களை தவிருங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Vijay fans waiting will be worth for Mersal Teaser says Producer Hema Rukumani

mersal vijay nithya menon

பொதுப்பிரிவுக்கே தகுதியானவர் அனிதா… காலா இயக்குனர் ரஞ்சித்

பொதுப்பிரிவுக்கே தகுதியானவர் அனிதா… காலா இயக்குனர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala Director Ranjith makes his statement on Anithas suicideநீட் தேர்வு முறையால், மருத்துவம் படிக்காத முடியாத விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவுக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ் சினிமாவைச் சார்ந்த பல்வேறு இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் கலந்துக் கொண்டர்.

இந்த நிகழ்வின் போது பத்திரிகையாளர்களிடம் காலா இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது…

“சமூகத்தில் யார் படிக்கலாம்? யார் படிக்கக் கூடாது? என்பதை முடிவு செய்ய மருத்துவக் கல்வி கொள்கை இருக்கிறது என நினைத்து பார்க்கும்போது மிகுந்த வேதனையளிக்கிறது.

+2 தேர்வில் அனிதா 1176 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அவருக்கு பொதுப்பிரிவிலேயே இடம் கிடைக்க கூடிய தகுதி உள்ளது.

இடஒதுக்கீட்டில் சிலர் எளிதாக படிக்கிறார்கள் என பல கூறியதை கேட்டு அந்த பெண் எரிச்சலைடைந்து தன்னை இந்தளவுக்கு தயார் படுத்தியிருக்கிறார்.

மாணவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கேட்டறிய வேண்டும்.” என்று இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார்.

Kaala Director Ranjith makes his statement on Anithas suicide

சாதியை அழிக்கும் அரசியலை மாணவர்கள் கத்துக்கனும்… விஜய்சேதுபதி

சாதியை அழிக்கும் அரசியலை மாணவர்கள் கத்துக்கனும்… விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Next Generation should learn politics more than cinema says Vijay Sethupathiஏழைக் குடும்பத்தில் பிறந்தபோதிலும் வறுமையை வென்று +2 தேர்வில் 1176 மார்க் பெற்றவர் அரியலூர் மாணவி அனிதா.

தன் மருத்துவ கனவை நீட் தேர்வு அழித்துவிட்டதால் விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்டார்.

எனவே நீலம் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் அனிதா நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

அதில், இயக்குநர் பா.ரஞ்சித், விஷால், சுசீந்திரன், சமுத்திரக்கனி, விஜய்சேதுபதி, தினேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது விஜய்சேதுபதி பேசியதாவது…

‘கல்வி என்பது மனிதர்களின் அடிப்படைத் தேவை. ஆனால் தற்போது அதிலும் பிரச்சினை வந்துள்ளது.

நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டு வருகிறது.

அது சாதி அரசியல். அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். ஆனால் போராட்டக்காரர்களை சமாளிக்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க.

ஒரே இடத்தில் அனைவரும் நின்று போராடினால் அதை ஈசியாக கலைத்துவிடுகிறார்கள்.

எனவே போராடும் முறையிலும் மாற்றம் கொண்டு வரனும்.

அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியலை அதிக கற்றுத் தரணும்.” என்றார்.

Next Generation should learn politics more than cinema says Vijay Sethupathi

மெர்சல் படத்தை வாங்கிய அமெரிக்காவின் பிரபல நிறுவனம்

மெர்சல் படத்தை வாங்கிய அமெரிக்காவின் பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ATMUS entertainment bagged the USA right of Mersal movieஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல்.

இதன் பட்ஜெட் தற்போது வரை ரூ. 120 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் இந்த நிறுவனத்தின் 100வது படம் என்பதால் மிகப்பிரம்மாண்டமாக இவர்களே வெளியிடவுள்ளனர்.

இதன் தமிழக வெளியீட்டு உரிமையை எந்த நிறுவனத்திற்கும் இவர்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தை USAவில் ATMUS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கி, தமிழ் மற்றும் தெலுங்கில் அங்கு வெளியிடவுள்ளதாம்.

ATMUS entertainment bagged the USA right of Mersal movie

விஜய் ஆண்டனிக்கு கைகொடுக்கும் சிரஞ்சீவி

விஜய் ஆண்டனிக்கு கைகொடுக்கும் சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiranjeevi garu will be unveiling first look of Vijay Antonys Indrasena‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தெலுங்கில் சினிமாவிலும் மார்கெட்டை பிடித்தார் விஜய் ஆண்டனி.

இதனையடுத்து இவரது ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய படங்களும் அங்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

தற்போது ‘அண்ணாதுரை’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

இப்படத்தை தெலுங்கிற்காக ‘இந்திரசேனா’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நாளை செப்டம்பர் 5ம் தேதி வெளியிடவுள்ளார்.

Chiranjeevi garu will be unveiling first look of Vijay Antonys Indrasena

இளையதளபதி விஜய்யின் BOSS யார் தெரியுமா.?

இளையதளபதி விஜய்யின் BOSS யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Do you know whos is Boss of Mersal vijayஅட்லி இயக்கியுள்ள மெர்சல் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார்.

இதில் ஒரு கேரக்டரில் மேஜிக் கலைஞராக விஜய் நடித்திருக்கிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

எனவே விஜய்க்கு பயிற்சி கொடுக்க மேஜிக் மேன் ஹாலிவுட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்தார்.

அந்த நபர் விஜய்யை பார்த்து பாஸ் என்றுதான் அழைப்பாராம்.

ஆனால் அதை மறுத்த விஜய்,,, ‘நீங்கதான் எனக்கு மேஜிக் சொல்லிக் கொடுக்கும் பாஸ்’ என கூறி, அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போதெல்லாம் பாஸ் என்றுதான் அழைத்தாராம்.

Do you know whos is Boss of Mersal vijay

More Articles
Follows