தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வரும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இப்படத்திற்காக இதுநாள் வரை தாடியுடன் முறுக்கு மீசை கெட்டப்புடன் நடித்து வந்தார்.
இதே கெட்டப்புடன் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.
எனவே இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வந்தனர்.
நேற்று திடீரென தாடி ஷேவிங் செய்துவிட்டு மீசையுடன் இருக்கும் விஜய்யின் படம் வெளியானது.
இது அட்லி படத்தின் அடுத்த கெட்டப் என்பதால், இதையும் ரசிகர்கள் இணையங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி படத்தின் 13வது ஆண்டு நிறைவு நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படம் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய சாதனை படைத்த படம் என்பதால், இதையும் #13yearsofGhilli என்ற ஹேஷ்டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
Vijay fans celebrates 13 Years of Ghilli movie