விஜய் தேவரகொண்டா – சமந்தா பட சூட்டிங்கில் விபத்து.; நடந்தது என்ன.?

விஜய் தேவரகொண்டா – சமந்தா பட சூட்டிங்கில் விபத்து.; நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா நிர்வனா இயக்கும் ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா.

இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

Samantha latest photos

அங்கு ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது எதிர்பாரா விதமாக ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் விஜய் தேவரகொண்டா & சமந்தா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

Vijay Deverakonda latest photos

இதனால் சூட்டிங் நிறுத்தப்படும் என யூனிட்டே எதிர்பார்த்த நிலையில் உடனே முதலுதவி சிகிச்சை பெற்று மீண்டும் விஜய் தேவர்கொண்டா- சமந்தா இருவரும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டனர்.

Vijay Deverakonda and Samantha injured in car accident during movie shoot

சாமி ஏதாவது வேலை இருக்குதா.? ரஜினி கேட்ட கேள்விக்கு இளையராஜா என்ன செய்தார்.?

சாமி ஏதாவது வேலை இருக்குதா.? ரஜினி கேட்ட கேள்விக்கு இளையராஜா என்ன செய்தார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார்.

இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர்.

அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க..

ரஜினிகாந்த் மகள் இயக்கும் படத்திற்கு இளையராஜா இசை..?

‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துக் கொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார்.

‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார்.

ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த்.

ரஜினி படத்தை பகிர்ந்த இசைஞானி…; இளையராஜா படத்தை பகிர்ந்த கங்கை அமரன்

இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார்

What did Ilayaraja do to the question asked by Rajini?

ஹைதராபாத்தில் இருந்து சென்னை பறந்து வந்த விஜய்..; வைரலாகும் படம்!

ஹைதராபாத்தில் இருந்து சென்னை பறந்து வந்த விஜய்..; வைரலாகும் படம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை இயக்கி வருகிறார் தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி.

இப்பட பூஜையின் போது நடிகர் விஜய்யுடன் இப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இணைந்து நடிகர் ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

இப்படம் மூலம் முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் தமன்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

தளபதிக்கு ஏஜ் எப்டி ரிவர்ஸ் கியரில் போகுது.? வைரலாகும் நியூ லுக்.; விஜய் பிறந்தநாளில் ‘தளபதி 66’ ட்ரீட்.

அதன் பின்னர் கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

அப்போதே விஜய் உடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.

இந்த நிலையில் விறுவிறுப்பாக ஐதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பபு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் பிறந்தநாளில் தளபதி 66 – 67 ட்ரீட்க்கு ரெடியா இருங்க

சென்னை ஏர்போட்டில் மாஸ்க் அணிந்தபடி விஜய் இருக்கும் போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

எனவே ‘தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Thalapathy Vijay latest pic goes viral

வாடிபோகும் ‘வாடிவாசல்;.; ‘பாகுபலி’ & ‘கேஜிஎஃப்’ பாணியில் சூர்யா – சிவா படம்

வாடிபோகும் ‘வாடிவாசல்;.; ‘பாகுபலி’ & ‘கேஜிஎஃப்’ பாணியில் சூர்யா – சிவா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை வரிசையாக இயக்கினார் இயக்குனர் சிவா.

இதில் விஸ்வாசம் படமும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

இதனையடுத்து ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிவா.

சிங்கம் சூர்யா-சிறுத்தை சிவா இணையும் பட முக்கிய அறிவிப்பு

இதற்கு முன்பே நடிகர் சூர்யா படத்தை சிவா இயக்க ஒப்புக் கொண்டாலும் ரஜினிக்காக தங்கள் படத்தை ஒத்தி வைத்தனர்.

எனவே தற்போது சூர்யா மற்றும் சிவா இணையவுள்ள படம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படம் பீரியட் கதை என கூறப்படுகிறது.

இந்த படம் பாகுபலி, கேஜிஎஃப் போல இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாம்.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஜூலை / ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

இதனிடையில் பாலா இயக்கும் ஒரு படத்திலும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் மற்றொரு படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா.

வெற்றிமாறன் சூர்யா இணையும் ‘வாடிவாசல்’ படத்தின் ப்ரீ புரொடக்சன் ஒரு பக்கம் நடைபெற்று வந்த்தாலும் இதன் சூட்டிங் தொடங்க தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

மேலும் சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ பட பணிகளில் வெற்றிமாறன் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya – Siva film will be like Baahubali and KGF standard

டாணாக்காரனை அடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் ‘இரத்தமும் சதையும்’

டாணாக்காரனை அடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் ‘இரத்தமும் சதையும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது.

டாணாக்காரனுக்கு டன் கணக்கில் பாராட்டுக்களை வழங்கிய ரஜினிகாந்த்

தற்போது அடுத்தடுத்து பல அற்புதமான படைப்புகள் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன.

இந்நிலையில் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகார வெறி காவலர்கள்…; ‘டாணாக்காரன்’ விமர்சனம் 4/5

படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Vikram Prabhu’s next after Taanakaran is titled Rathamum Sadhaiyum

படம் தயாரிக்க ‘ஹனிபிலிக்ஸ்’ சாப்ட்வேர்..; வி இயக்கத்தில் ரெடியான ‘விஷமக்காரன்’

படம் தயாரிக்க ‘ஹனிபிலிக்ஸ்’ சாப்ட்வேர்..; வி இயக்கத்தில் ரெடியான ‘விஷமக்காரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

வரும் மே-27ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது..; ‘விஷமக்காரன்’ விஜய்யின் வில்லத்தன பேச்சு

பொதுவாகவே ஒரு வெற்றிப்படத்திற்கான கதை எப்படி இருக்க வேண்டும், அதற்கான பட்ஜெட் எந்த அளவுக்குள் இருக்கவேண்டும் என்பதை கணிப்பதில் தான் பலர் கோட்டை விடுகின்றனர்.

ஆனால் இந்தப்படத்தின் இயக்குனரான வி, ஐடி துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் இதற்காக தனியாக ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரையே உருவாக்கினார்.

ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்து விடுமாம்.

ஆச்சர்யமாக இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் V.

சொல்லப்போனால் இந்த சாப்ட்வேரை சோதனை செய்வதற்காக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றுகூட சொல்லலாம்.. அதுமட்டுமல்ல. இந்தப்படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இலவசமாகவே வழங்கவும் முடிவு செய்தனர்.

அந்தவகையில் கடந்த மாதம் இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் முன்னிலையில் இந்த சாப்ட்வேர் வெளியிடப்பட்டது.

திரைப்பட உருவாக்கத்திற்கு இப்படி ஒரு சாப்ட்வேரா என ஆச்சர்யப்பட்ட பிரபலங்கள் தாங்களும் இதை பயன்படுத்தி பார்ப்பதாக படக்குழுவினரை உற்சாகமூட்டினார்கள்.

மேனிபுலேஷன் அதாவது “மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல்” என்பதை மையக்கருவாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக நடித்துள்ளார் நாயகன் வி.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு : J கல்யாண்
இசை : கவின்-ஆதித்யா
படத்தொகுப்பு : S.மணிக்குமரன்
இயக்கம் : V
தயாரிப்பு : ஹனி பிரேம் ஒர்க்ஸ்
மக்கள் தொடர்பு : KSK செல்வா

‘Honeyflix’ software used in director V’s Vishamakkaran

More Articles
Follows