விஜய்யின் ‘பைரவா’ டைட்டில் சீக்ரெட்ஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் 60 படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் பைரவா என்ற பெயரில் வெளியானது.

இது வெளியானது முதல், இந்த தலைப்பு குறித்த விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.

மேலும் இதில் ஒளிந்துள்ள சீக்ரெட்ஸ் தகவல்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர் இளைய தளபதி ரசிகர்கள்.

இந்த தலைப்பில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து மதம் தொடர்பான அடையாள குறியீடுகள் ஒளிந்துள்ளன.

இந்த சொல்லுக்கு தமிழில் காக்கும் கடவுள் என்றும் சமஸ்கிருதத்தில் ‘பயம்கொள்ள வைப்பவர்’ என்ற அர்த்தம்.

சிவபெருமானின் திரிசூலம் டிசைன் பை எழுத்தில் அமைந்துள்ளது.

மேலும் கல்வெட்டுக்களில் பதிவு செய்துள்ளது போன்று உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீண்டும் ஆலுமா டோலுமா; ஆட ரெடியாகும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கிய வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் கடந்த 10 மாதங்களாக படம் எதுவும் வெளியாகவில்லை.

ஆனாலும் அப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலை இன்றும் நாம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அனிருத் இசையமைத்த இப்பாடல் பட்டி முதல் சிட்டி வரை ஹிட்டாகியது.

இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் கல்யாண் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இதே அஜித்-சிவா-அனிருத்-கல்யாண் கூட்டணி மீண்டும் அதே போன்ற பாடலுக்கு இணையவிருக்கிறதாம்.

சிவா இயக்கும் தல 57 படத்தில்தான் இப்பாடல் இடம்பெறுகிறது.

சூப்பர் ஸ்டார் இடத்தில் சத்யராஜ்; ஜோடியானார் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அம்மா கணக்கு, வட சென்னை படங்களை தொடர்ந்து தற்போது நிறைய படங்களில் கமிட் ஆகி வருகிறார் அமலாபால்.

தற்போது முருகவேல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லைலா ஓ லைலா என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

தமிழ் ரீமேக்கில் சத்யராஜ் நடிக்க, அமலா பாலே இங்கும் நடிக்கிறார்.

பிசினஸ்மேன் மற்றும் உளவுத்துறை ஏஜெண்டாக என இரு வேடங்களில் சத்யராஜ் நடிக்கிறார்.

இவர்களுடன் ரம்யா நம்பீசன், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க ஜோஷி இயக்கவுள்ளார்.

கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

ஜி.வி. பிரகாஷுடன் கைகோர்க்கும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை விட நடிகர் ஜி.வி. பிரகாஷ் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் இவர் நடித்துள்ள புரூஸ் லி படத்தை பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசரை இன்று 5 மணியளவில் அட்லி வெளியிடவிருக்கிறாராம்.

விக்ரமின் ‘இருமுகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்த இருமுகன் நேற்று வெளியானது.

நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரமின் படம் வருவதாலும், இரு வேடங்களில் அவர் நடித்துள்ளதாலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் விக்ரமின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் நாளில் மட்டும் சென்னையில் 60 லட்சத்தை வசூலித்துள்ளதாம்.

செங்கல்பட்டில் ரூ.1.22 கோடியும், கோவையில் சுமார் 80 லட்சமும் வசூல் செய்துள்ளது.

தமிழக அளவில் ரூ 5.2 கோடியை வசூலித்துள்ளது.

மேலும் நேற்று (செப்டம்பர் 8ஆம் தேதி) விடுமுறை நாள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-ராகவா லாரன்ஸ் சந்திப்பு; என்ன பேசினார்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் அடிக்கடி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்.

இந்நிலையில் தற்போது தீடீரென ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கிறாராம்.

அப்போது பி.வாசு இயக்கத்தில் தான் நடித்து வரும் சிவலிங்கா படம் பற்றி தெரிவித்து, அதற்கான வாழ்த்தையும் பெற்றாராம்.

இவை தவிர்த்து, தன்னை பெற்ற தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டும் பணியை பற்றியும் பேசியுள்ளார் என தெரியவந்துள்ளது.

More Articles
Follows