‘பிரிலியண்ட் ஜாப் மேன்…’ இப்படி யாரை பாராட்டினார் விஜய்.?

‘பிரிலியண்ட் ஜாப் மேன்…’ இப்படி யாரை பாராட்டினார் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rahman karthick narenநல்ல படைப்பை பாராட்ட ஒரு நல்ல மனம் வேண்டும். அது திரையுலகில் ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு.

அதில் நிச்சயம் இளைய தளபதி விஜய்யின் பெயர் இடம் பெற்றிருக்கும்.

இந்நிலையில் அண்மையில் வெளியான துருவங்கள் பதினாறு படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தை விஜய் சமீபத்தில் பார்த்துள்ளார். எனவே படத்தை இயக்கி தயாரித்த கார்த்திக் நரேனை பாராட்டியுள்ளார்.

அப்போது பிரிலியண்ட் ஜாப் மேன். உங்கள் இயக்கம் அருமை என பாராட்டியுள்ளாராம்.

இதனை கார்த்திக் நரேன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Karthick Naren‏ @karthicknaren_M
“Brilliant job man. Really liked the way you treated the emotions. Best wishes for your future”.The caller was ‘Ilayathalapathy vijay’ sir

vijay appreciates Dhruvangal Pathinaaru director Karthick Naren

கோடை விடுமுறை மோதலுக்கு ரெடியாகும் பெரிய படங்கள்

கோடை விடுமுறை மோதலுக்கு ரெடியாகும் பெரிய படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bahubali 2கோடை விடுமுறை வந்தாலே சிலருக்கு ஊட்டி குளிர்தான் ஞாபகம் வரும்.

அட. அங்க எல்லாம் போக எங்கப்பா பைசா இருக்கு. நல்ல ஏசி தியேட்டரா போய் நல்ல படத்தை பாக்கனும் என்று நினைப்பவரா நீங்கள்..? (என் இனமடா நீ…) அப்படின்னா உங்களுக்கான செய்திதான் இது.

இந்த 2017 வருடம் கோடை விடுமுறைக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் தற்போதே வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன.

கிட்டதட்ட ஒரு டஜன் படங்கள் முடிவாகிவிட்டன. மேலும் சின்ன பட்ஜெட் படங்களும் வெளியாக உள்ளது.
இதுவரை உறுதியாகியுள்ள படங்கள்…

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை

ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி 2

தனுஷ் முதன்முறையாக இயக்கி நடித்துள்ள பவர்பாண்டி

பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

அட்லி தயாரிப்பில் ஜீவா நடித்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொறடி

சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம்

மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விக்ரம் வேதா

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன்

List of Tamil movie releases on Summer 2017

முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க தேர்தலின் புதிய அணி

முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க தேர்தலின் புதிய அணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radhakrishan JK Rithesh team met Tamil Nadu Chief Ministerவிரைவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தலைவர் பதவிக்கு ஐந்து அணிகளை சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளார்கள்.

இந்நிலையில் ஒரு அணியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும், ராதாகிருஷ்ணன் அவர்கள் அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அதன் விரவம் வருமாறு…

குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு, சில வருடங்களாக, வழங்கப்படாமல் இருந்த மானியத் தொகையை, தயாரிப்பாளர்களுக்கு வழங்ககோரியும், திருட்டு வீ.சி.டி / கேபிள் டி.வி யில் அனுமதி பெறாமல் ஒளிபரப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தயாரிப்பாளரும், நடிகருமான, ஜே.கே. ரித்தீஷ் அவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிடும், ராதாகிருஷ்ணன், செயலாளர் பதவிக்கு போட்டியிடும், சிவசக்தி பாண்டியன், ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும், கே. ராஜன், சுரேஷ் காமாட்சி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும், விஐய முரளியும், மற்றும் தயாரிப்பாளர் சௌந்தர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர்கள் அனைவரும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் மனு அளித்தனர்.

மாண்புமிகு முதல்வர் அவர்களும் ஆவண செய்வதாக கூறியுள்ளார்கள். ஆக தமிழக அரசுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்திருக்கிறது.

தயாரிப்பாளர்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறமுடியும். என்று தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னே ஆக்ஷனில் இறங்கிய இராதாகிருஷ்ணன் தலைமையிலான “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி”க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ரஜினி படத்தளத்திலிருந்து எமிஜாக்சன் ‘லைவ் ஆப்’

ரஜினி படத்தளத்திலிருந்து எமிஜாக்சன் ‘லைவ் ஆப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amy jacksonமதராசப்பட்டினத்தில் அறிமுகமாகி இன்று ரஜினிகாந்த்துடன் நடிக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் முன்னேறியுள்ளார் எமிஜாக்சன்.

தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினி, அக்சய்குமார் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தன்னுடைய பெயரில் உருவாக்கியுள்ள ஆப் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.

அதனை 2.0 படத்தளத்திலிருந்து, அவர் வெளியிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Amy Jackson live app launch from the sets of 2pointO

Amy Jackson‏Verified account @iamAmyJackson 1h1 hour ago
My OFFICIAL app is here! Come and be a part of my world with me http://smarturl.it/amyjackson – Going LIVE from the set of 2.0 on my app tonight

‘ஜோதிகாவுடன் நடிப்பது பெரிய பலம்…’ ஜிவி. பிரகாஷ்

‘ஜோதிகாவுடன் நடிப்பது பெரிய பலம்…’ ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash talks about acting with Jyothika in Naachiyaarஇளையராஜா இசையமைத்து பாலா இயக்கத்தில் உருவாகிவரும் படம் நாச்சியார்.

ஜோதிகா மற்றும் ஜி.வி. பிரகாஷ் இதில் நடிக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் தன் கேரக்டர் குறித்து ஜிவி. பிரகாஷ் கூறும்போது…

ஜோதிகா ஒரு பாசிட்டிவ்வான நபர்.

அவரைப் போன்ற ஒரு நபருடன் நடிப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று தெரிவித்துள்ளார்.

GV Prakash talks about acting with Jyothika in Naachiyaar

gv prakash jyothika

சட்ட வல்லுனர்களுடன் கமல் ஆலோசனை; அரசியல் உலகில் பரபரப்பு

சட்ட வல்லுனர்களுடன் கமல் ஆலோசனை; அரசியல் உலகில் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalஉலக நாயகன் கமல்ஹாசன் அண்மைகாலமாக தன் ட்விட்டரில் சமுமூகம் சார்ந்த கருத்துக்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார்.

இதனால் மக்களிடையே ஆதரவும், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இதனால் பாஜகவின் முக்கிய பிரமுகர் சுப்ரமணிய சுவாமிக்கும் கமலுக்கு இடையே ‘பொறுக்கி’ என்ற வார்த்தை போரே நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கமல்ஹாசன் நாளை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போது, சினிமா, பொது விஷயங்கள் பற்றியும், தன் மீதான இணையத்தள விமர்சனங்களும் பற்றியும் கலந்து பேச உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஒருவேளை, இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சினிமா உலகிலும் அரசியல் உலகிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Kamalhassan meeting with Leading Lawyers

More Articles
Follows