வெளிநாட்டு நடிகைக்காக கெட் அப்பை மாற்றும் விஜய் ஆண்டனி

வெளிநாட்டு நடிகைக்காக கெட் அப்பை மாற்றும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antonyவிஜய் ஆண்டனி நடித்துள்ள ’காளி’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து ’திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படங்களை அடுத்து அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் மூடர் கூடம்’ பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக விஜய் ஆண்டனி தன்னுடைய வழக்கமான சுருள் முடி மற்றும் தாடி கெட் அப்பை மாற்றவிருக்கிறாராம்.

இதற்காக மும்பையில் இருந்து டெக்னீஷியன்களை வரவழைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் கதைப்படி வெளிநாட்டு ஹீரோயின் ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

தங்கப்பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்

தங்கப்பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan praises Common Wealth Games Gold Medalist Sathishkumar Sivalingam21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது.

போட்டியின் முடிவில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது.

இதில், ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இவர் தமிழ்நாட்டின் வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ்குமாரை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

நேற்று சிவகார்த்திகேயனை சந்தித்த சதீஷ்குமார், அவரது டுவிட்டர் பக்கத்தில், `சிறந்த மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பதக்கத்துடன் அன்பரை சந்தித்தேன்.

அவரது அரவணைப்பு மற்றும் வார்த்தைகள் என்னை நிறைய ஊக்கப்படுத்தின. உங்களது அன்பாக பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன்’. இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Sivakarthikeyan praises Common Wealth Games Gold Medalist Sathishkumar Sivalingam

sathish kumar sivalingam oly‏ @imsathisholy
Such an amazing human being to meet.Truly loved to meet him with my CWG MEDAL.His warmth and words truly inspired me a http://lot.Star whom I admire and celebrate for his hard work and walks of life.Thx @Siva_Kartikeyan brother for your lovely gift

இரும்புத்திரை மே 11ல் ரிலீஸ்; அந்த தகவல் பொய் என விஷால் அறிவிப்பு

இரும்புத்திரை மே 11ல் ரிலீஸ்; அந்த தகவல் பொய் என விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Irumbu Thirai will not release on 11th May 2018 says Vishalவிஷால் தயாரித்து நடித்துள்ள படம் `இரும்புத்திரை’.

பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுடன் சமந்தா, அர்ஜூன், டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படம் ரிலீசுக்கு தயாரான போதிலும் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற மே 11-ஆம் தேதி ரிலீஸ் என போஸ்டர்கள் வெளியானது.
ஆனால், அந்த தேதியில் வெளியாகாது. புதிய ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என்று விஷால் தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Irumbu Thirai will not release on 11th May 2018 says Vishal

vishal irumbu thirai release tweet

மே 4ல் தொடங்கும் விஸ்வாசம்; பயமுறுத்த தயாராகும் அஜித்!

மே 4ல் தொடங்கும் விஸ்வாசம்; பயமுறுத்த தயாராகும் அஜித்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Nayanthara starring Viswasam movie updatesவீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அதே வீ சென்டிமெண்டில் அஜித் சிவா இணைகின்ற படம் விஸ்வாசம்.

இமான் இசையமைக்க, நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் அறிவிப்பு வந்து ஒரு சில மாதங்கள் ஆகிவிட்டாலும் இதன் சூட்டிங் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது 50 நாட்கள் கோலிவுட் ஸ்டிரைக்கிற்கு பிறகு இதன் சூட்டிங் வருகிற மே 4ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்பட உள்ளதாம்.

இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில்தான் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது வழக்கமான அஜித்தின் காதல் மற்றும் ஆக்சன் கதையாக இல்லாமல் திகில் படமாக உருவாகவுள்ளதாம்.

Ajith and Nayanthara starring Viswasam movie updates

செஞ்சுரி அடிக்கத் தயாராகும் காமெடியன் யோகி பாபு

செஞ்சுரி அடிக்கத் தயாராகும் காமெடியன் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Yogi Babu completing 100 movies in short periodயோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபு. அந்த படத்தை சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்தார்.

அந்த படத்திற்கு பின்னரே யோகி பாபுவாக மாறினார் பாபு.

அதன் பின்னர் வந்த கலகலப்பு, பட்டத்து யானை, மான் கராத்தே, யாமிருக்க பயமேன், ரெமோ ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது யோகி பாபு இருந்தால் அந்த படத்திற்கு யோகம் என்ற வகையில் எல்லா இயக்குனர்களுக்கும் தேவையான காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் 100வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது…

என்னை வைத்து படம் இயக்கிய அனைத்து இயக்குநர்கள் மற்றும் கடவுளுக்கு நன்றி.

ரசிகர்கள் இல்லாமல் எந்த நடிகனும் இல்லை. ரசிகர்களுக்கும் நன்றி. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.” என்றார்.

Comedy Actor Yogi Babu completing 100 movies in short period

அரசியல்வாதிகள் திருடுவதை நிறுத்தினாலே அரசுக்கு வருமானம்தான். : கமல்

அரசியல்வாதிகள் திருடுவதை நிறுத்தினாலே அரசுக்கு வருமானம்தான். : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why some peoples entered in politics asks Kamal to Current Ministersசென்னை இண்டர்நேஷனல் சென்டர் என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கமல் கலந்துக் கொண்டு பேசினார்.

அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கும் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடிகன் அரசியலுக்கு வரலாமா என்று கேட்கிறார்கள். நான் அவர்களை கேட்கிறேன் அரசியல்வாதியாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதுவரை எனது சொந்த பணத்திலிருந்து கட்சி நடத்தி வருகிறேன்.

தேர்தல் கமிஷனில் கட்சியை பதிவு செய்த பிறகு மக்களிடம் நன்கொடை வசூலிப்பேன்.

தேர்தல்களில் நான் வெற்றி பெறுவதைவிட போட்டியிடவும், தோல்வி அடையவும் தயாராக இருக்கிறேன்.

எதிர்க்கட்சி வரிசையில் உட்கார எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

ஆனால் தேர்தலில் வாக்களிக்க ஒரு போதும் பணம் கொடுக்க மாட்டேன். இதை எனது கட்சியின் அடிப்படை கொள்கையாக வைத்திருக்கிறேன்.

ஏழறை கோடி தமிழர்களுக்கும் தலா 45 ஆயிரம் கடன் இருக்கிறது. இந்த கடனை அடைக்க வேண்டும்.

எல்லா வியாபாரத்தையும் போன்று மது விற்பனையும் ஒரு வியாபாரம்தான். அதை ஒரு சிலர் செய்வதுதான் தவறு.

அரசுக்கு மதுவிற்பனை முக்கிய வருமானம்தான். அரசை நடத்துவதற்கு அதுவே முதலான வருமானம் இல்லை.

அரசியல்வாதிகள் மக்களிடமிருந்து திருடுவதை நிறுத்தி விட்டால் அதுவே பெரிய வருமானம்தான்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நிறுத்தியது சரியானதல்ல. எனக்கு கிரிக்கெட் தெரியாது, பிடிக்காது.

சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் நடந்தபோதுகூட சென்னையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்தது.

22 வீரர்கள் விளையாடும் இடத்தில் போராட்டம் நடத்தாமல் மக்கள் வாழ்க்கையோடு விளையாடும் 234 எம்.எல்.ஏக்கள் இருக்கிற கோட்டை முன் நடத்தியிருந்தால் நானே முதல் ஆளாக சென்றிருப்பேன்.”

இவ்வாறு கமல் பேசினார்.

Politician must stop corruption to make Govt as Profitable says Kamal

More Articles
Follows