மம்மூட்டி – நயன்தாராவுடன் இணையும் விஜய் ஆண்டனி..?

மம்மூட்டி – நயன்தாராவுடன் இணையும் விஜய் ஆண்டனி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antony also part of Mammootty Nayantharas Malayalam movieபாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் உள்ளிட்ட பல படங்களில் மம்மூட்டி அண்ட் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்கள் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை விபின் என்பவர் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் அவரின் கால்ஷீட் பிரச்சினையால் தற்போது அவருக்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது உறுதியாகும் பட்சத்தில் இப்படம் மூலம் விஜய்ஆண்டனி மலையாள சினிமாவில் அறிமுகமாவார் எனத் தெரிகிறது.

Vijay Antony also part of Mammootty Nayantharas Malayalam movie

மனித கம்ப்யூட்டராக மாறினார் அஜித்தின் லேட்டஸ்ட் நாயகி

மனித கம்ப்யூட்டராக மாறினார் அஜித்தின் லேட்டஸ்ட் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vidya Balans First Look from Human Computer Shakuntala Deviநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.

இவர் தற்போது கணிதவியலாளர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார்.

கேரளாவைச் சேர்ந்த அனு மேனன் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

சகுந்தலாதேவி என்ற தலைப்பு அருகே மனித கம்யூட்டர் என்ற வார்த்தையும் உள்ளது.

இப்படத்தை அடுத்தாண்டு 2020ல் கோடையில் வெளியிட உள்ளனர்.

Vidya Balans First Look from Human Computer Shakuntala Devi

அஜித் பிரச்னையில்ல; ஆனால் ரஜினி-விஜய்.? குழப்பத்தில் நயன்தாரா

அஜித் பிரச்னையில்ல; ஆனால் ரஜினி-விஜய்.? குழப்பத்தில் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Nayanthara attend Rajini Vijay Chiranjeevi movies audio launchசிரஞ்சீவி நடிப்பில் அவரது மகன் ராம்சரண் தயாரித்துள்ள படம் ‘சைரா’ நரசிம்ம ரெட்டி.

இதில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப், அனுஷ்கா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

வருகிற அக்டோபர் 2ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பிரம்மாண்ட விழா செப்டம்பர் 18ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

இதில் படக்குழுவினர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

ஆனால் தன் பட நிகழ்ச்சிகளிலேயே கலந்துக் கொள்ளாதவர் நயன்தாரா. இப்பட விவகாரத்தில் அவரின் நிலைப்பாடு என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.

ஒருவேளை இதில் அவர் கலந்துக் கொண்டால் அதற்கு அடுத்த நாளே விஜய்யுடன் நடித்துள்ள பிகில் படத்தின் இசை விழாவிலும் கலந்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டிலும் கலந்துக் கொண்டால் நிச்சயம் ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்துக் கொள்ள நேரிடும்.

அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு இசை வெளியீட்டு விழா எதுவும் நடைபெறவில்லை. அதனால் அஜித் ஒரு பிரச்சினையாக இவருக்கு தெரியவில்லை.

அஜித்தும் கலந்துக் கொள்ளமாட்டார். ஆனால் ரஜினி, விஜய் படங்கள் இசை விழா என்றால் நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும்.

எனவே ரஜினி, விஜய், சிரஞ்சீவி, அமிதாப் விசயத்தில் என்ன செய்ய போகிறார் நயன்தாரா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

நயன்தாராவைப் போல அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரும் பிரபலமான நடிகைகள் தான். ஒரு வேளை நயன்தாரா வரவில்லை என்றால் மற்ற இருவரும் என்ன செய்வார்கள்? என்பதையும் வெயிட் அண்ட் சீ..

Will Nayanthara attend Rajini Vijay Chiranjeevi movies audio launch

ரஜினி-விஜய்க்கே கிடைக்காத அப்ளாஸ் அஜித்துக்கு மட்டும் எப்படி?

ரஜினி-விஜய்க்கே கிடைக்காத அப்ளாஸ் அஜித்துக்கு மட்டும் எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

How Ajith getting more Applause than Rajini and Vijayதமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர்களில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.

இவரை தமிழக ரசிகர்கள் தல என்றே அழைக்கின்றனர்.

ரசிகர் மன்றமே வேண்டாம் என்று இவர் சொன்னாலும் இவருக்கான ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.

எந்தவொரு ஹீரோவாக இருந்தாலும் தனக்கு முடி நரைத்துவிட்டால், அதில் கருப்பு டை அடித்துவிட்டுதான் படத்தில் நடிப்பார்கள். ஆனால் தன் வெள்ளைத் தாடி, மீசை, நரைத்த தல முடி என இயற்கையான தோற்றத்துடன் நடித்து வருகிறார் இவர்.

மேலும் படத்தின் சில காட்சிகளில் தன் வயது உட்பட உண்மையான தகவல்களை அனைத்தையும் சொல்லி நடித்திருக்கிறார் தல.

சினிமாவில் நடிப்பதை தவிர இவர் எதுவும் செய்யவில்லை. அதாவது பாடுவதோ, இயக்குவதோ, பாடல் எழுதுவதோ என எதையும் செய்யவில்லை.

தான் உண்டு தன் வேலையுண்டு என செய்து வருபவர்.

ஆனால் சினிமாவைத் தாண்டியும் நிஜ ஹீரோவாகவே மக்கள் மனதில் வலம் வருகிறார்.

பைக் ரேஸ் முதல், விமானம் ஓட்டவும் செய்கிறார். பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் இவர் தான்.

மேலும் ஐஐடி மாணவர்களுக்கே விமான பயிற்சிகளில் (தக்ஷா) ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

இதனால் இவரின் பெருமை ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

அஜித் பெயரை எங்கேயாவது யாராவது சொன்னால் கூட ரஜினி, கமல், விஜய்க்கு கிடைக்காத கரவொலி சத்தம் இவருக்கு (சில நேரங்களில்) மட்டும் கிடைக்கிறது. அதற்கு என்ன காரணம் தெரியுமா..?

சினிமா உலகில் 1970-80களில் பிரபல நடிகர்கள் கையாண்ட் யுக்தியை இப்போதும் அஜித் கையாள்கிறார்.

அதாவது இப்போது உள்ளது போல் டிவியோ, சோஷியல் நெட்வொர்க் அப்போது இல்லை. எனவே நடிகர்களை நாம் காண வேண்டுமென்றால் தியேட்டருக்கு வந்தே ஆக வேண்டும்.

அப்போது தியேட்டரில் கூட்டல் அலை மோதும். போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத கூட்டம், அடிதடி எல்லாம் இருக்கும். எனவே படங்களும் 100 நாட்கள் ஓடியது. மக்களும் தங்கள் அபிமான நடிகர்களை திரையில் ரசித்து வந்தனர்.

அதை தான் அஜித், நயன்தாரா போன்றவர்கள் தற்போது செய்து வருகின்றனர்.

தன் பட பூஜை, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, புரோமோசன் நிகழ்ச்சிகளுக்கே எதற்கும் அஜித் வருவதில்லை. இதற்கு இவர் தரப்பில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. பேட்டி கொடுப்பதில்லை.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதிலும் அஜித்துக்கு அக்கவுண்ட் இல்லை. ரசிகர்களையும் அடிக்கடி சந்திப்பது இல்லை.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் மற்ற நடிகர்களின் விழாக்களில் கலந்துக் கொள்கிறார்கள். அந்த பட பாடல்களை நேரில் ரிலீஸ் செய்கிறார்கள் அல்லது யூடிப்பில் வெளியிட்டு ஆதரவளிக்கிறார்கள்.

அதுபோல் விஜய்யும் சில நேரங்களில் மற்றவர்களை பாராட்டி பேசுகிறார். தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் ரசிகர்களை சந்திக்கிறார்.

இவர்களை எல்லாம் ரசிகர்கள் எப்படியாவது எங்கேயாவது சந்தித்து விடுகிறார்கள். அல்லது அவர்களின் பேச்சை டிவியில் பார்த்து ரசிக்கிறார்கள்.

ஆனால் இது எதையும் அஜித் செய்வது இல்லை. எனவே அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அப்போது அவரின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது வேறு வழியின்றி தல தரிசனம் காண தியேட்டருக்கு கட்டுக்கடங்காத அளவில் விரைகிறார்கள்.

அதுபோல் அஜித் பற்றிய பேச்சுக்கள் பொது நிகழ்ச்சியில் எழும் போது ஆர்ப்பரிக்கிறார்கள்.

இதுவே டிஜிட்டல் உலகத்திலும் அஜித் செய்யும் ராஜதந்திரம் எனலாம்.

How Ajith getting more Applause than Rajini and Vijay

மீண்டும் கபாலி-பேட்ட தயாரிப்பாளர்களுடன் ரஜினி; 100 கோடி சம்பளம்?

மீண்டும் கபாலி-பேட்ட தயாரிப்பாளர்களுடன் ரஜினி; 100 கோடி சம்பளம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Darbar Rajini likely to do films with Kabali and Petta Producerரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படம் அடுத்தாண்டு 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

தலைவர் 168வது படத்தை விஸ்வாசம் புகழ் சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினி நடித்த எந்திரன் (2010), பேட்ட (2019) ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இவை இரண்டும் வெளியாகி தமிழ் சினிமாவில் வசூல் சாதனை புரிந்தன.

சிவா படத்தை முடித்த பின்னர் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினியின் கபாலி படத்தை தயாரித்து அதை உலகமே வியக்கும் அளவுக்கு விளம்பரம் செய்திருந்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 250 கோடியில் இப்படம் உருவாகவுள்ளதாம். இதில் ரஜினி சம்பளம் மட்டும் 95-100 கோடியை தொடும் என்கிறார்கள்.

இது உண்மையானால் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயர் ரஜினிக்கு கிடைக்கும்.

After Darbar Rajini likely to do films with Kabali and Petta Producer

நயன்தாராவுக்காக ரஜினி பட டைட்டிலை பெற்ற ‘ரௌடி’ தயாரிப்பாளர்

நயன்தாராவுக்காக ரஜினி பட டைட்டிலை பெற்ற ‘ரௌடி’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Netrikann Nayanthara and Vignesh Shivan got Rajini movie title1981ஆம் ஆண்டில் ரஜினி மற்றும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா இணைந்து நடித்த ‘நெற்றிக்கண்’ என்ற படம் வெளிவந்தது.

எஸ்.பி. முத்துராமன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இப்பட தலைப்பை தன் காதலி நயன்தாராவுக்காக கவிதாலயா நிறுவனத்திடம் வாங்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இவர் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க,
மிலண்ட் ராவ் என்பவர் இயக்குகிறார்.

மேலும் தன் புதிய நிறுவனத்திற்கு ரெளடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார் விக்னேஷ்சிவன்.

கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இன்றுமுதல் இதன் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

Netrikann Nayanthara and Vignesh Shivan got Rajini movie title

More Articles
Follows