25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த விஜய்-ஏஆர். ரஹ்மான்

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த விஜய்-ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay AR Rahmanஅட்லி இயக்கிவரும் விஜய் 61 படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதற்கு முன்பு விஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏஆர் ரஹ்மானே இசையமைத்திருந்தார்.

இவை தவிர்த்து விஜய் மற்றும் ரஹ்மான் ஆகிய இருவரின் சினிமா கேரியரில் வேறொரு ஒற்றுமை உள்ளதாம்.

அதாவது, தமிழ் சினிமாவில் 1992-ம் ஆண்டுதான் இருவருமே காலடி எடுத்து வைத்துள்ளனர்.

விஜய் ஹீரோவாக நடித்த நாளைய தீர்ப்பு படமும், ரஹ்மான் இசையமைத்த ரோஜா திரைப்படமும் இதே ஆண்டில்தான் வெளியானது.

தற்போது தங்களது 25வது ஆண்டில் இருவரும் இணைந்துள்ளது அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.

Vijay and AR Rahman has 25 years of unity in Cinema Entry

‘என் வேலைய செய்யவிடுங்கள்..’ மும்பை பறக்கும் முன் ரஜினி பேட்டி

‘என் வேலைய செய்யவிடுங்கள்..’ மும்பை பறக்கும் முன் ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini kaala posterநாளை முதல் மும்பையில் நடைபெறவுள்ள காலா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் ரஜினிகாந்த்.

இதற்காக சற்றுமுன் மும்பை செல்ல புறப்பட்டார்.

அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது…

காலா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மும்பை செல்கிறேன்.

நடிப்பது என் தொழில் என்பதால் அதை செய்து கொண்டிருக்கிறேன்.

உங்க வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் (செய்தியாளர்களை நோக்கி).

எனது வேலையை செய்ய விடுங்கள் என்று அவர் கூறி அங்கிருந்து சென்றார்.

மேலும், அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன்.” என்றார்.

Acting is my Profession Allow me to do my job Says Rajinikanth

ரம்ஜான் மோதலில் சிம்பு-ஜெயம் ரவி-எஸ்.ஜே.சூர்யா

ரம்ஜான் மோதலில் சிம்பு-ஜெயம் ரவி-எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Jayam Ravi SJ Suriya movies clash in Ramzanரம்ஜான் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஜூன் 23ஆம் தேதி பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘வனமகன்’ வெளியாகவுள்ளது.

இதே நாளில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படமும் வெளியாகிறது.

இந்நிலையில் பல மாதங்களாக காத்திருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படமும் அதே நாளில் வெளியாகிறதாம்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் இப்படத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஒன்றாக என்டர்டெயின்மென்ட் மற்றும் க்ளோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Simbu Jayam Ravi SJ Suriya movies clash in Ramzan

ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டரும் ஸ்டோரியும்..!

ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டரும் ஸ்டோரியும்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush character revealed from his movie The Extraordinary Journey Of The Fakirகடந்த சில நாட்களாக ‘தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற ஹாலிவுட் படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்ட நடித்து வருகிறார் தனுஷ்.

இதில் தனுஷுடன் பெரனீஸ் பெஜோ, எரின் மொரயார்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக தனுஷ் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

கனடா நாட்டை சேர்ந்த கென் ஸ்காட் இயக்கும் இப்படமானது ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ என்ற ஃப்ரெஞ்சு நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவதால் இப்படத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

அஜா (தனுஷ்) இந்தியாவில் இருக்கும் ஏழைமையான குடும்பத்தை சேர்ந்த இளைஞன்! அதே நேரம் திறமையான மாயாஜால வித்தைக்காரன்.

ஒரு சூழ்நிலையில் ஒரு மேஜிக்குக்காக பாரிஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு ஒரு பிரச்சினை ஏற்பட் ஒரு ஃபர்னிச்சர் கடையில் மாட்டிக் கொள்கிறார்.

அங்குள்ள மேரி என்ற பெண் மீது காதல் கொள்கிறார்.

ஒரு முறை பீரோவுக்குள் தனுஷ் ஒளிந்துக் கொள்ள, அந்த பீரோ விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவையே சுற்றி வருகிறது.

அப்போது நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களே இப்படத்தின் கதை என தெரிவித்துள்ளனர்.

Dhanush character revealed from his movie The Extraordinary Journey Of The Fakir

காலா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி

காலா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anjali Patil in Rajinis Kaala movieரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164 படத்திற்கு ‘காலா’ என பெயரிட்டுள்ளனர்.

ரஞ்சித் இயக்கவுள்ள இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க, ரஜினிக்கு நாயகியாக ஹுமா குரோஷி நடிக்கிறார் என்பதை நாம் பார்த்தோம்.

இந்நிலையில், மற்றொரு நாயகியாக அஞ்சலி பட்டீல் நடிக்கிறாராம்.

நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, சிங்களம் உள்ளிட் பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தமிழ் பெண்ணாக நடிக்கிறாராம் அஞ்சலி.

காலா படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Anjali Patil teams up with Rajini in Kaala movie

ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறாரா? அண்ணன் சத்யநாராயண ராவ் பேட்டி

ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறாரா? அண்ணன் சத்யநாராயண ராவ் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Brother Sathyanarayana Rao Gaikwad talks about Rajinis New Political Partyரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு, தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு ஆதரவு குரல்களும் எதிர்ப்பு குரல்களும் கிளம்பியுள்ளன.

மேலும் பிஜேபி தலைவர் அமித்ஷா முதலில் அவரது கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். கட்சியில் இணைய அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தாக தகவல் வெளியானது.

அதில் அவர், “ரஜினியின் ரசிகர்களும் நலம் விரும்பிகளும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகின்றனர்.

பெரும்பான்மையான தமிழக மக்களின் விருப்பமும் அதுவே.

அவரும் அதற்கான முயற்சியில் இறங்கி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது தனிக் கட்சியின் கொடி, சின்னம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும்.
ஒரு ஊழலற்ற நேர்மையான ஆட்சியை கொடுப்பார்.

தமிழக அரசியல் புதிய அத்தியாயத்தை நோக்கி செல்லும்.” என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து சத்யநாராயண ராவ் கூறியதாவது…

“ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் கூறவில்லை. யாரோ தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்களுடன், 2-ம், 3-ம் கட்ட சந்திப்புகள் முடிந்த பிறகே இறுதி முடிவு எடுப்பார் ரஜினி.

மேலும், அடுத்தடுத்து சினிமா சூட்டிங் இருப்பதால், உடனடியாக கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Rajinikanth Brother Sathyanarayana Rao Gaikwad talks about Rajinis New Political Party

rajini bro sathyanarayana rao

More Articles
Follows