விஜய்-அஜித்-சூர்யா… அவெஞ்சர்ஸ்-க்கு யார் பெஸ்ட்? நாலு ஹீரோயின்ஸ் நச் பதில்கள்..

விஜய்-அஜித்-சூர்யா… அவெஞ்சர்ஸ்-க்கு யார் பெஸ்ட்? நாலு ஹீரோயின்ஸ் நச் பதில்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajith Suriya Who will be Best in Avengers Captain Marvel Tamil Press meetமார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல். ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்க, அன்னா போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள்.

மார்வெல் ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமன்னா பாட்டியா, சமந்தா அக்கினேனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுவரை 20 மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு படத்திலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். இது பெண் சூப்பர் ஹீரோவை பற்றிய ஒரு படம் என்பதால் தான் பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டோம்.

படம் முடிந்த பிறகு வரும் காட்சிகளை காணத்தவறாதீர்கள் என்றார் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல்.

இந்த நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் தான் மார்வெல் காமிக்ஸ் மற்றும் படங்களின் மிகத் தீவிரமான ரசிகை என்று மற்ற நாயகிகள் மூவரும் ஒரே குரலில் ஒப்புக் கொண்டனர்.

காஜல் அகர்வாலும் மார்வெல் படங்களை பற்றிய மிக நுட்பமான விஷயங்களை அவ்வப்போது அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். தோர் தான் தனக்கு மிகவும் பிடித்த மார்வெல் கதாபாத்திரம் என்றும் கூறினார்.

அப்போது கேப்டன் மார்வெல் படத்தை பற்றிய தங்களுடைய எண்ணங்களையும், ட்ரைலர் பார்த்தவுடம் மனதில் தோன்றிய விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர். சமந்தா அது பற்றி கூறும்போது,

“ஒரு சக்தி வாய்ந்த பெண்ணை திரையில் பார்க்கும் போது நம்மாலும் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு தந்திருக்கிறது இந்த கேப்டன் மார்வெல்” என்றார். ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதை தாண்டி அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். சூப்பர் ஹீரோ படங்கள் அனைத்தும் கூட தற்போது யதார்த்தமாக மாறி வருகிறது என்றார் தமன்னா.

நம் நாட்டில் பெண்களை மையப்படுத்திய படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாராவதில்லையே என்று கேட்டதற்கு, “பெண்களை வைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கப்படுகின்றன.

நிறைய பெண்களை மையப்படுத்திய படங்கள் இந்தியாவிலும் வந்து கொண்டிருக்கின்றன. கேப்டன் மார்வெல் சூப்பர் ஹீரோ படம் உலக அளவில் மிகப்பெரிய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. நம் இந்திய சினிமாவில் கூட அருந்ததி போன்ற படங்களும் வந்திருக்கின்றன. இன்னும் நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்றனர்.

கேப்டன் மார்வெல் மாதிரி உங்களுக்கு ஒரு நாள் சக்தி கிடைத்து ஏதாவது விஷயங்களை மாற்ற விரும்பினால் எதை மாற்றுவீர்கள் என கேட்டதற்கு, “தூய்மையை மேம்படுத்துவேன், பெண் சிசுக் கொலை, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பேன். உலக அமைதிக்காக தீவிரவாத நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும்.

மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க, அதை நல்ல வழியில் உபயோகிக்க வேண்டும்” என்றார். மேலும், சினிமா பொழுதுபோக்குக்காக மட்டும் தான். யாரையும் திருத்தவோ, நாட்டை திருத்தவோ சினிமாக்கள் இல்லை. யாரையும் மாற்றவும் முடியாது” என்றார். ரகுல் ப்ரீத் சிங்கும் தீவிரவாதத்தை ஒழிப்பதை பற்றிய தன் விருப்பத்தை கூறினார்.

அவெஞ்சர்ஸ் தமிழில் எடுக்கப்பட்டால் யாரை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என கேட்டதற்கு, “விஜயை அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என சமந்தா மற்றும் காஜலும், அதில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என ரகுல் பிரித் சிங்கும் கூறினர்.

ஹல்க் கதாபாத்திரத்திற்கு சமந்தா ஆர்யாவை சொல்ல, விஷாலை காஜல் தன் சாய்ஸாக கூறினார். தோர் கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு அல்லது சூர்யாவை தன் தேர்வாக தமன்னா சொல்ல, காஜல் அகர்வால் அஜித் மிகப் பொருத்தமாக இருப்பார் என கூற அனைவரும் அதை ஒப்புக் கொண்டனர்.

மேலும் கேப்டன் அமெரிக்கா கதாப்பாத்திரத்திற்கும் அஜித் தான் தன் சாய்ஸ் என காஜல் சொல்ல அரங்கமே அதிர்ந்தது. பாகுபலியை அவெஞ்சர்ஸ் டீமுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பலாம் என தமன்னா கூற, அனைவரும் அதை ஆமோதித்தனர்.

ஃபிட்னஸ் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சம். நன்றாக சாப்பிடுவதற்காகவே நான் கூடுதல் நேரம் உடற்பயிற்சிகளை செய்வேன் என்றார் ரகுல் பிரீத் சிங். எனக்கு சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி இலக்குகளை அடைவது என்பது மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும், ஃபிட்னஸிலும் இலக்குகளை அடைந்து வருகிறேன் என்றார் சமந்தா.

யோகா எனக்கு மிகவும் பிடித்த விஷயம். எனக்கு உணவுகள் மிகவும் பிடிக்கும். அதனால் அதற்கேற்ற வகையில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வேன் என்றார் தமன்னா. மாரத்தான் ஓட்டம் என் சாய்ஸ். உடற்பயிற்சி கருவிகள் இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. தினமும் ரன்னிங் ஓடுங்கள், அது போதுமானது. என் அடுத்த படத்துக்கு களறி பயட்டு கற்று வருகிறேன் என்றார் காஜல் அகர்வால்.

நம்மை கொண்டாட தனியாக பெண்கள் தினம் என்பது தேவையில்லை. பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்யக் கூடியவர்கள், அந்த திறமை பெண்களுக்கு உண்டு என்றார் ரகுல்.

நமக்குள் ஒரு சூப்பர் ஹீரோ இருக்காங்க என பெண்களான நாம் நம்பணும். எந்த ஒரு கடினமான சூழலிலும் கூட அதை தாங்கும், தகர்க்கும் ஒரு சக்தியை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார்” என்றார் சமந்தா.

Vijay Ajith Suriya Who will be Best in Avengers Captain Marvel Tamil Press meet

நதிநீர் இணைப்பு அரசியலை பேசும் அதர்வாவின் ‘பூமராங்’

நதிநீர் இணைப்பு அரசியலை பேசும் அதர்வாவின் ‘பூமராங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Boomerang movie based on Tamilnadu Politics and water Issueமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’.

அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது.

எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம் தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்க சொன்னார்.

அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர் பிரச்சினையை, நதிநீர் இணைப்பை பற்றியும் பேசும் மிக முக்கியமான படம் என்றார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.

நான் இந்த இடத்துக்கு வரக் காரணம் என் அம்மா தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான் நான் இங்கு இருக்கிறேன். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு பாராட்ட என்னை அழைத்தார் கண்ணன் சார். அங்கு போன பிறகு நாம படம் பண்ணலாமா என சொன்னதோடு, அடுத்த நாளே என் பெயரை படத்தின் விளம்பரத்தில் சேர்த்தார்.

தமிழில் ஒரு நல்ல படத்தில் இங்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சி. சமீபத்தில் மறைந்த என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். நல்ல ஒரு கருத்தை சொல்லும் ஒரு முக்கியமான படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் இசையமைப்பாளர் ரதன்.

அதர்வா, ஆர்ஜே பாலாஜியுடன் தான் அதிகம் எனக்கு காட்சிகள் இருந்தது. எனக்கு நடிக்க மிகவும் எளிதாக இருக்குமாறு முழு சுதந்திரம் கொடுத்தார் கண்ணன் சார். ஆர்ஜே பாலாஜியின் மார்க்கெட் இப்போது இன்னும் ஏறியிருக்கிறது, எல்லோரும் தியேட்டரில் போய் படத்தை பார்ப்பீங்க என நம்புகிறேன் என்றார் நடிகை இந்துஜா.

ஒரு படம் நினைத்த மாதிரி வரணும்னா அதற்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. அதர்வா அந்த வகையில் படத்தின் மிகப்பெரிய தூணாக இருந்தார். அடுத்த படத்திலும் நாங்கள் இணைகிறோம்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். இந்த படம் இந்த அளவுக்கு வர முக்கிய காரணமாக இருந்த பங்கஜ் மேத்தா, அன்புச்செழியன், ராம் பிரசாத் ஆகியோருக்கு நன்றி. படத்தை நல்ல தேதியில் வெளியிட எனக்கு ஆதரவாக இருக்கும் ட்ரைடெண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சாருக்கு நன்றி. இவன் தந்திரன் படத்துக்கு பிறகு இது எனக்கு முக்கியமான படம்.

அந்த படம் நன்றாக ஓடினாலும், ஒரு சில காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த வரவு இல்லை. ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. இந்த படத்தையும் ரசிகர்கள் வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

படம் எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் என தெரியவே இல்லை. மிக வேகமாக முடித்து விட்டோம். பூமராங் என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது, எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம்.

ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு.

தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த பூமராங் வந்திருக்கிறது, அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன் என்றார் நடிகர் அதர்வா.

இந்த சந்திப்பில் நடிகை மேகா ஆகாஷ், படத்தொகுப்பாளர் ஆர்கே செல்வா, எம்கேஆர்பி ப்ரொடக்‌ஷன்ஸ் எம்கே ராம் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Boomerang movie based on Tamilnadu Politics and water Issue

கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் / இயக்குனர் சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் / இயக்குனர் சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasi kumarகடந்த 2011 ஆண்டு முதல் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது 201 மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் / இயக்குனரான சசிகுமார் அவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதினை வழங்கியுள்ளது.பொள்ளாச்சியில் தன் படப்பிடிப்பில் (sasikumar19 ) இருந்த சசிகுமார் அவர்கள் விருது வழங்கிய தமிழக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பரிந்துரையின்படி , இயல் இசை , நாடகம் , கிராமியம் , திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற கலைப்பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaranjaniyum innum sila pengalumஇயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யபடுள்ளது.

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இயக்குநரான காமெடி நடிகர் சிட்டிசன் மணி !!

இயக்குநரான காமெடி நடிகர் சிட்டிசன் மணி !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

citizen maniபல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் ‘சிட்டிசன்’ மணி இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பெருநாளி’ என்று தலைப்பு
வைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சிட்டிசன் மணி, சுமார் 100
க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருப்பவர், வடிவேலுவுடன் ஏராளமான
படங்களில் நடித்து தனது காமெடி நடிப்பால் பாராட்டு பெற்றிருக்கிறார்.

தற்போதும் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் சிட்டிசன் மணி, முதல் முறையாக கதை,
திரைக்கதை, வசனம் எழுதி படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க,
ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். ஹீரோவின் நண்பராக கிரேன் மனோகர் முக்கிய வேடத்தில் நடிக்க,
இவர்களுடன் சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏராளமான காமெடி நடிகர்களும்
நடிக்கிறார்கள்.

படம் குறித்து சிட்டிசன் மணியிடம் கேட்டதற்கு, “மாமா – மருமகள் செண்டிமெண்ட் தான் கதை. தனது அக்கா இறந்த
பிறகு அவரது மூன்று மகள்களை கஷ்ட்டப்பட்டு வளர்க்கும் தாய்மாமன், அவர்களுக்காக வாழ்வதோடு, அவர்களுக்கு
வரும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பது தான் படத்தின்
கதை. தனது மருமகள்களுக்காக காதல், கல்யாணம் ஆகியவற்றை உதரித்தள்ளும் தாய்மாமனின் பாசப் போராட்டம்
பெரிதும் ரசிக்கும்படி இருக்கும்.” என்றார்.

தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பவர் சிவா நடனம் அமைக்க, தீப்பொறி
நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா பற்றிய
பாடலாகும். படத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் இடத்தில் வரும் இப்பாடல், புரட்சித்தலைவியின்
பிறந்தநாளை கொண்டாடுபவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும், அதிமுக-வின் பிரச்சார பாடலாகவும்
ஒலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருப்பதாக கூறிய சிட்டிசன் மணி, விரைவில் இப்பாடலை பிரம்மாண்டமான
முறையில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டு வரும் சிட்டிசன் மணியின் ‘பெருநாளி’
விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது.

’சாதனை பயணம்’ மூலம் கோடம்பாக்கத்தில் உதயமான புதிய நட்சத்திரம் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர்

’சாதனை பயணம்’ மூலம் கோடம்பாக்கத்தில் உதயமான புதிய நட்சத்திரம் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parameshwarவிஜியாலயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘சாதனை பயணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய
நட்சத்திரமாக உதயமாகிறார் கலக்கல் ஸ்டார் பரமேஸ்வரர். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, படத்தையும்
தயாரிக்கும் பரமேஸ்வரர், ‘காதல் டாட்காம்’, ‘த்ரி ரோசஸ்’, ‘மேடை’, ‘பீஸ்மர்’ உள்ளிட்ட சுமார் 15 க்கும்
மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

சினிமா மீது உள்ள ஆர்வத்தால் 13 வயதிலேயே சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர், சினிமாவில் பல
பணிகளை செய்து வந்த நிலையில், தற்போது ‘சாதனை பயணம்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக
அறிமுகமாகிறார். இவருடன் அழகு, எஸ்.கே.எம்.பாண்டியன், தமிழடியான், முகேஷ், லிபாலி பரமேஸ்காந்த்,
கருப்பு ராஜா, சக்திவேல், வாண்யா, ஜெய்கோபி, குமார், சங்கீதா, ஹரிப்பிரியா, விகாசினி உள்ளிட்ட பலர்
நடிக்கிறார்கள்.

இசையரசர் தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ் சுப்ரமண்யம் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வராஜ் எடிட்டிங்
செய்ய, அக்‌ஷய் ஆனந்த், கூல் ஜெயந்த், பவர் சிவா ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள். கவிஞர் முத்துலிங்கம்,
முனைவர் சி.வீரமணி, சொ.சிவக்குமார், கலை வேந்தன், சுதந்திரதாஸ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். சாய்
மணி ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை சின்னமணி கவனிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் மாதேஷ்வரா, படம் குறித்து கூறுகையில், ”மனிதர்களின்
வாழ்க்கையே ஒரு சாதனை பயணம் தான். அந்த வகையில், சாதாரண விவசாயி தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளை சமாளித்து தனது வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார், என்பது தான் படத்தின் கதை. இதில்,
பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோர்களை கைவிட்டு விடுவது பற்றியும், பேசியிருக்கிறோம். வானத்தை போல, சேது
போன்ற படங்களின் வரிசையில் உணர்வுப்பூர்வமான படமாக சாதனை பயணம் உருவாகியுள்ளது.

இப்படத்தை பார்க்கும் பிள்ளைகள் தங்களது பெற்றோர்கள் மீது அதிகமான அன்பும், அக்கறையும் காட்டுவார்கள்
என்பது உறுதி.” என்றார்.

ஹீரோ பரமேஸ்வரருக்கு ஹீரோவாக இது தான் முதல் படம் என்றாலும், இப்படத்தின் சண்டைக் காட்சிகளில்
ஒரிஜினலாக நடித்திருக்கிறார். மெத்தை, ரோப் என்று எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல்,
சண்டைக்காட்சிகளில் இவர் நடித்ததை பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவும் பாராட்டு தெரிவித்தது. அப்படி ஒரு
சண்டைக்காட்சியில் முழுக்க முழுக்க தண்ணீரில் இருந்தபடியே சண்டை போடும் போது, அவரது கைவிரல் உடைத்து
போனாலும், அந்த வலியையும் தாங்கிக் கொண்டு பரமேஸ்வரர் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

இப்படத்திற்காக தஷி இசையமைத்திருக்கும் 6 பாடல்களும் மிக சிறப்பாக வந்திருப்பதோடு, பின்னணி இசையும்
படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் விதத்தில் உருவாகி வருகிறதாம். படத்தின் காட்சிகளையும், ஹீரோவின்
பர்பாமன்ஸையும் பார்த்து வியந்த இசையமைப்பாளர் தஷி, ‘கலக்கல் ஸ்டார்’ என்ற பட்டத்தை பரமேஸ்வரரருக்கு
வழங்கி கெளரவித்துள்ளார்.

தற்போது டாக்கி போஷன்களை முடித்துவிட்டு பாடல்களை படமாக்க தயராகியுள்ள ‘சாதனை பயணம்’
படக்குழுவினர் படத்தினை கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

More Articles
Follows