அஜித்தின் ‘வீரம்’-விஜய்யின் ‘தளபதி 60’… மற்றொரு கனெக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தை முடித்துவிட்டு தளபதி 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஸ்ரீமன், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து விட திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மூன்று மாதத்திற்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனிக்க உள்ளனர்.

இப்படத்தை பரதன் இயக்கி வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

இவர் இயக்குனராக இருந்தபோதும் பல படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். அஜித்தின் வீரம் படத்திற்கும் இவர்தான் வசனம் எழுதினாராம்.

மேலும் வீரம் படத்தை தயாரித்த விஜயா புரொடக்ஷன் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

‘சிம்புவுக்காக நிறைய பெண்கள் காத்திருக்கிறார்கள்…’ – டி.ஆர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவின் தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தரை பத்திரிகையாளர்கள் திருச்சியில் சந்தித்தனர்.

அப்போது சிம்புவின் திருமணம் குறித்து அவரிடம் கேள்விகளை கேட்டனர்.

அதற்கு பதிலளித்து டி.ஆர். கூறியதாவது…

சிம்புவுக்காக மனப்பொருத்தம், ஜாதகப் பொருத்தம் பொருந்தக் கூடிய பெண்ணைத் தேடி வருகிறோம்.

ஒருவேளை சிம்புவின் திருமணம் காதல் திருமணமாக இருக்க கூட வாய்ப்பிருக்கிறது.

சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

‘ரஜினியோடு போட்டிப் போட இன்னொரு பிறவி வேண்டும்’ – இர்பான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டை தாண்டியும் ரஜினிக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

எனவே கபாலி ரிலீஸ் ஆகும் நாள் அன்று தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை.

ஆனால் இந்தியில் இர்பான் கான் நடித்துள்ள மதாரி படம் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் போஸ்டரைதான் ரஜினி ரசிகர்கள் காப்பியடித்து டிசைன் செய்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இர்பான் கானிடம் உங்கள் படம் ரஜினி படத்திற்கு போட்டியா? நீங்கள் ரஜினிக்கு போட்டியா? என்று பத்திரிக்கையாளர் கேட்டனர்.

‘இந்த உலகம் அறிந்த கலைஞன் ரஜினிகாந்த். அவர் படத்துடன் என் படம் வருவது எனக்கு பெருமை.

அவருடன் போட்டி போட என்னால் முடியாது. அவருடன் போட்டிப்போட நான் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்’ என்றார்.

மீண்டும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி மோதல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ள ரெமோ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

வருகிற அக்டோபர் 7ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

அதுபோல் ஜீவா, பாபி சிம்ஹா நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் இதே நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடித்துள்ள றெக்க படத்தையும் அந்நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோல் கடந்த 2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் மற்றும் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் ஆகிய இரண்டும் ஒரே நாளில் (மே 1) ரிலீஸ் ஆகி மோதிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி உரிமை மட்டும் ரூ. 220 கோடி… முழு விபரம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலக சுனாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி வெளியாக 3 நாட்களே உள்ளன.

டீசர், பாடல்கள், புரோமோஷன் என இப்படம் தொடர்பான அனைத்தும் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையும் கொடி கட்டி பறக்க ஆரம்பித்துள்ளது.

இன்னும் பல மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மற்ற பகுதிகளின் விநியோக உரிமை தகவல்கள் வந்துள்ளன.

  • தமிழ்நாடு உரிமை மட்டும்- ரூ 68 கோடி
  • ஆந்திரா + தெலுங்கானா உரிமை- ரூ 32 கோடி
  • கேரளா உரிமை – ரூ 7.5 கோடி
  • கர்நாடகா உரிமை – ரூ 10 கோடி
  • வட இந்தியா உரிமை – ரூ 15.5 கோடி
  • அமெரிக்கா மற்றும் கனடா உரிமை – ரூ 8.5 கோடி
  • மற்ற நாடுகள் உரிமை – ரூ 16.5 கோடி
  • சாட்டிலைட் & மியூசிக்கல் உரிமை ரூ 40 கோடி
  • மற்றவை – ரூ 12 கோடி

ஆக மொத்தம் வியாபாரம் மட்டுமே ரூ 220 கோடிகளுக்கு மேல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது,

‘விஐபி’யை கொண்டாடும் தனுஷ்-அனிருத் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் தொடங்கிய இவர்களது கூட்டணி இன்று வரை கோலிவுட்டில் முக்கிய இடம் வகுத்து வருகிறது.

இவர்கள் கூட்டணியில் உருவான வேலையில்லா பட்டதாரி படம் கடந்த 2014ஆம் ஆண்டு இதே நாளில் (ஜீலை 18) வெளியானது.

வேல்ராஜ் இயக்கிய இப்படத்தில் அமலா பால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் சூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது ஆண்டை இன்று தனுஷ், அனிருத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More Articles
Follows