ஒருவழியாக சூர்யா பட டீசர் தேதியை வெளியிட்டார் விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ்சிவன்.

இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன், செந்தில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இதன் டீசர் தேதியை ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இதற்கு பதிலளிக்காமல் விக்னேஷ் சிவன் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு வருகிற நவம்பர் 30ஆம் தேதி தானா சேர்ந்த கூட்டம் பட டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Vignesh Shivan revealed Thaana Serntha Kootam Teaser release date

ஹாக்கி விளையாட்டில் இணையும் சுந்தர்.சி-ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு, இசை, பாடல்கள், பாடலாசிரியர், இயக்கம் என தன் முதல் படத்திலேயே மீசைய முறுக்கியவர் ஹிப்ஹாப் ஆதி.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி. இயக்கியிருந்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஹிப்ஹாப் ஆதி நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறார் சுந்தர். சி.

இப்படத்தை சுந்தர் சி. இயக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படமானது ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளதாம்.

விரைவில் இப்படம் தொடங்கும் என கூறப்படுகிறது.

Sundar C and Hiphop Aadhi teams up for movie based on Hockey game

என் தங்கமே லவ் யூ… நயன்தாராவை வாழ்த்திய விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை நயன்தாரா இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே இதற்கு ரசிகர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் “உன்னைத் நினைத்து பெருமைப்படுகிறேன். என் தங்கமே என்றெல்லாம் ரொமான்டிக்காக வாழ்த்தியுள்ளார்.

Director Vignesh Shivan wishes Nayanthara on her birthday

Vignesh ShivN‏Verified account @VigneshShivN
Happy Birthday to a woman I really look upto Stay Boldstay beautiful jus keep creating that stunning story of what is #Nayanthara Proud of u as always!! Loads of Love & respect to u my Thangameyyy #HBDLadySuperStarNayanthara

இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தர காமன்மேன் சதீஷ் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக ஊடகங்களில் முகநூலில் ‘யூடியூப் தளங்களில் வியூஸ் அதாவது பார்வையாளர்கள் ஆயிரங்கள் தாண்டி லட்சத்தைத் தொட்டாலே சாதனை என்றும் சரித்திரம் என்றும் பரவசப்படுவார்கள்.

ஒரு சிறிய குறும்படம் முகநூலில் (Facebook) வெளியான 5 நாட்களில் 65லட்சம் பேர் பார்த்து 60 ஆயிரம் பேர் பகிர்ந்து ஒருலட்சம் பேர் விரும்பி (Like) சாதனை படைத்துள்ளது. அந்தப் படம் தான் ‘இந்தியன் டூரிஸ்ட்’.

இக் குறும்படத்தைக் ‘காமன் மேன் மீடியா’ தயாரித்துள்ளது. நடித்து இயக்கி தயாரித்தும் உள்ளார் காமன் மேன் சதீஷ். அவருடன் கே.பி. செல்வா உறுதுணையாகப் பங்கெடுத்துள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதையின் மையக்கரு.

யாரோ சில சமூக விரோதிகள் செய்யும் தவறுகள் ஒட்டு மொத்த நாட்டைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்குகிறது. சுற்றிப் பார்க்க இந்தியா நல்ல நாடுதான் என்று முடிகிறது படம்.

இதில் வெளிநாட்டிலிருந்து வருகிற சுற்றுலாப் பயணியாக போலந்து நாட்டைச் சேர்ந்த டோமினிகா நடித்துள்ளார்.

இவர் படிப்பதற்கு இந்தியா வந்த போலந்து மாணவி நடிப்பு ஆர்வத்தில் படத்தில் இணைந்து இருக்கிறார்.

அவருடன் சதீஷ், காவ்யா, தாஸ், ராகுல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய 5 நாட்களில் 55 லட்சம் பேர் பார்த்துள்ள இக் குறும்படம், 3 மணி நேரத்தில் இயற்கை ஒளியில் வெறும் 3500 ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷு உடன் ரேக்ஸ், சண்முகம், தேவ் கண்ணன், சுபு சிவா, என்.யூ. ஆனந்த், விஜயன், சக்தி சரவணன், பார்த்தி, சத்யன் என தொழில் நுட்பக் கூட்டணி இணைந்து இக் குறும்பட முயற்சியில் கைகோர்த்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த ‘இந்தியன் டூரிஸ்ட்’ குறும்படம் அரையிறுதி வரை சென்றது என்கிற பெருமைக்குரியது.

இப்படத்தை இயக்கியுள்ள காமன் மேன் சதீஷ் அடுத்து ‘நொடிக்கு நொடி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 4-ல் சென்னையில் நடைபெறும் ரஷ்யத் திரைப்பட விழாவில் திரையிடப் படவுள்ளது.

இப்படத்தைத் திரையுலக வி.ஐ.பிக்கள் பலரும் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.

INDIAN TOURIST SHORT FILM CREATED RECORD WITH 55 LAKHS VIEWS AND 60K SHARES

2018 பொங்கல் ரேஸில் சூர்யாவுடன் மோதும் சிம்புவின் நட்பு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையனாக நடித்தவர் கவின்.

இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

நட்புன்னா என்னானு தெரியுமா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்க, தரண் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ரவீந்திரன் சந்திரசேகர் படத்தை தயாரித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் பாடல் மிகப்பிரம்மண்டமாக சென்னை வடபழனியில் வெளியானது.

இந்த Cow Song பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.

மற்ற பாடல்களை டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும், படத்தை 2018 (Jan 12) பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதே பொங்கல் தினத்தில்தான் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Natpuna Ennanu Theriyuma clash with Thaana Serndha Kootam on Pongal 2018

நிவின்பாலி-நட்ராஜ் இணைந்து மிரட்டும் ரிச்சி பட புதிய ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Ulidavaru Kandanthe’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி.

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ‘ரிச்சி’ என தலைப்பிட்டுள்ளனர்.

முக்கிய வேடத்தில் நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ்பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படமானது டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகும் என சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டை டிசம்பர் 8ஆம் தேதிக்கு மாற்றி வைத்து இப்பட போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் கூறியதாவது…

“தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும்.

தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார் நிவின் பாலி’ என்றார்.

Nivin Pauly and Natty starring movie Richie release date is here

More Articles
Follows