தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆயுஸ்மான் குரானா, யாமி கவுதம் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் விந்து தானத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
தற்போது இந்த படத்தை தமிழில் ‛தாராள பிரபு’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய ஹரிஷ் கல்யாண் மற்றும் தன்யா ஹோப் ஜோடியாக நடிக்கின்றனர்.
கிருஷ்ண மாரிமுத்து என்பவர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டரில் தாமரை மலரில் ஹரிஸ் கல்யாண் மூன்று தலைகளுடன் உள்ளார். அவருடன் நிறைய பச்சிளம் குழந்தைகள் உள்ளனர்.
இது கடவுள் பிரம்மாவை போன்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட தலைப்பில் விந்து குறியீடும் இடம் பெற்றுள்ளது.
இந்த படம் நிச்சயம் சர்ச்சைகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
Vicky Donor Tamil remake titled Dharala Prabhu
