ரிதுவர்மா அபர்ணா சிவாத்மிகா ஆகியோருடன் கூட்டணி..; அதிர்ஷ்டக்கார அசோக் செல்வன்

ரிதுவர்மா அபர்ணா சிவாத்மிகா ஆகியோருடன் கூட்டணி..; அதிர்ஷ்டக்கார அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ashok Selvanநடிகர் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்டும் இணைந்து தயாரிக்கின்றனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்குகிறது.

தொழில்நுட்பக் குழு விவரம்

தயாரிப்பாளர் – ஸ்ரீனிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ்
இயக்குநர் – ஆர். கார்த்திக்
ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
இசை – கோபி சுந்தர்
கலை – எஸ் கமலநாதன்
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்
எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் – S.வினோத் குமார்
ஆடை வடிவமைப்பு – நவதேவி ராஜ்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Viacom18 Studios joins hands with Rise East Entertainment for a new movie starring Ashok Selvan

மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம்..; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம்..; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anbil maheshதிருச்சியில் பள்ளி மாணவிகள் 3200 பேருக்கு விலையில்லா புத்தகங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

“தமிழகத்தில் பள்ளி கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருகிறேன்.

இந்த அறிக்கையினை வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழக முதல் அமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.

இதில்… “வாழை விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்க்கவும் ஆதிதிராவிட பள்ளி மற்றும் அரசுப்பள்ளிகளில் மாணவ சேர்க்கையினை உயர்த்துவது குறித்தும் திட்டமிட்டுள்ளோம்.”

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Banannas will be included in the mid day meal scheme says minister

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்.; இருவருக்கும் ஒரு ஒற்றுமை

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்.; இருவருக்கும் ஒரு ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ஆம் தேதி புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார்.

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு இன்று ஜூன் 27ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த அமைச்சர்கள் பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா என்ற பெண் ஒருவர் புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

இவருக்கு முன்னதாக 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக கூட்டணியில் ஆட்சி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேணுகா அப்பாத்துரை என்பவர் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார்.

அவருக்குப் பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பெண் உறுப்பினருக்கு என்‌.ஆர்.காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடமளித்துள்ளது.

ரேணுகா அப்பாத்துரை & சந்திர பிரியங்கா ஆகிய இருவருக்குமே கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A female minister Chandra Priyanka after 40 years in Puducherry

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரியில் பதவியேற்ற 5 அமைச்சர்கள் விவரம்.; சட்டமன்றத்தில் முதன்முறையாக பாஜக.!

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரியில் பதவியேற்ற 5 அமைச்சர்கள் விவரம்.; சட்டமன்றத்தில் முதன்முறையாக பாஜக.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரியில் பதவியேற்ற 5 அமைச்சர்கள் விவரம்.; சட்டமன்றத்தில் முதன்முறையாக பாஜக.!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

கிட்டத்தட்ட 55 நாட்களுக்கு பிறகு இந்த புதிய அமைச்சரவையில், நீண்ண்ண்ட இழுபறிக்கு பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகளும், பாரதீய ஜனதா கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளும் மற்றும் சபாநாயகர் பதவிகளும் ஒதுக்கப்பட்டன.

இதனையடுத்து இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

ஒன்றியம் எனச்சொல்லி பதவியேற்றனர். கடவுள் பெயரால் உறுதி மொழி ஏற்றனர். அப்போது, “இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில் கடமையாற்றுவேன்” என சொல்லி பதவியேற்றனர்.

இந்த அமைச்சர்கள் பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 5 அமைச்சர்களுக்கும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பின்போது முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் ஆசி பெற்றனர்.

என்ஆர் காங். அமைச்சர்கள் விவரம்…:

என்.ஆர்.காங். சேர்ந்த மங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் 3வது முறையாக அமைச்சராகிறார். முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்துள்ளார்.

NR .காங்கிரஸ் கட்சியின் ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் 3வது முறையாக அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2 முறை அமைச்சராக இருந்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள நெடுங்காடு தனித் தொகுதியில் வென்ற சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றார்.

முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான இவர், தொடர்ந்து 2வது முறையாக நெடுங்காடு தனித் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக அமைச்சர்கள். :

பாஜகவை சேர்ந்த மண்ணாடிப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம் 4வது முறையாக அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் உள்ளாட்சி துறை, கலால் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் மூன்று முறை அமைச்சராக இருந்துள்ளார்.

ஊசுடு தனித் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சாய் சரவணன் குமார் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரான இவர் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

சந்திர பிரியங்கா (என் ஆர் காங்.) மற்றும் சாய் சரவணன் குமார் (பாஜக) ஆகிய இருவரும் முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர்.

இவர்கள் இருவருமே தனித்தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பதவியேற்பு விழா நிகழ்வில் தமிழக பாஜகத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா நிறைவு பெற்றது.

Puducherry Government New Ministers list updates

உங்க மகளுக்கு தற்காப்பு கற்பிப்பதற்கு பதிலாக மகனுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுங்கள் – ஓவியா

உங்க மகளுக்கு தற்காப்பு கற்பிப்பதற்கு பதிலாக மகனுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுங்கள் – ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடித்து பிரபலமானதை விட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஓவியா.

இவர் தன் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுபவர்.

இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ப்பு குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஓவியா.

அதில்…

பெற்றோர்களே உங்கள் மகள்களுக்கு தற்காப்பு, MeToo குறித்து கற்பிப்பதற்கு பதிலாக, மகன்களுக்கு பெண்களை மதிக்கவும், அவர்களை எப்படி அணுகுவது என்பது பற்றியும் சொல்லிக்கொடுங்கள்: நடிகை ஓவியா ட்வீட்.

“Instead of teaching your daughters self defence and #metoo.. teach your sons about respect and consent.

Teach your sons about respect and consent says Oviya

பழ. கருப்பையா பொன்ராஜ் ஸ்ரீப்ரியா.: மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள்

பழ. கருப்பையா பொன்ராஜ் ஸ்ரீப்ரியா.: மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

26-06-2021 நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.

அப்போது பேசியதாவது…

கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன்.

அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன்.

புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சில அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் வெளியாகும்.

புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கனவே நமது கட்சியின் வேட்பாளர்களாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டவர்கள்தான்.

எனினும் அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

சிவ. இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.

செந்தில் ஆறுமுகம் தகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர்.

’நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி’ மலரவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமை சட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.

சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவராகத் திகழ்பவர்.

ஃபுட்கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

புதிய நியமனங்கள்:
1. திரு. பழ. கருப்பையா – அரசியல் ஆலோசகர்
2. திரு. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
3. திரு. ஏ.ஜி. மெளரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
4. திரு. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5. திரு. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
6. திரு. சிவ. இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
7. திரு. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
8. திருமதி ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்
9. திரு. ஜி. நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப்பண்பு மிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்குங்கள்.

இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்து கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றார்.

நன்றி.
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Kamal announces Makkal Needhi Maiam Party new Posting list

More Articles
Follows