வெற்றிப்பட வரிசையில் ‘ரைட்டர்’.; ரஞ்சித்தை கட்டிப்பிடித்து வாழ்த்திய வெற்றிமாறன்

வெற்றிப்பட வரிசையில் ‘ரைட்டர்’.; ரஞ்சித்தை கட்டிப்பிடித்து வாழ்த்திய வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

படம் பார்த்தபிறகு இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குனர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ரொம்ப முக்கியமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறீர்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது.

இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும்.

தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட படங்களை தயாரித்துவரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார் வெற்றிமாறன்.

Vetrimaaran praises Pa Ranjith’s Writer film

‘மாநாடு’ பட டைம் லூப்பை முடிவு செய்தது விஜய்-சூர்யா படங்கள் தான் ; வெங்கட் பிரபு பேச்சு

‘மாநாடு’ பட டைம் லூப்பை முடிவு செய்தது விஜய்-சூர்யா படங்கள் தான் ; வெங்கட் பிரபு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,..

“சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்து விட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையை பிடித்துக்கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப்படம் நிரூபித்துவிட்டது. செத்துக்கிடக்கிற செல்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிப்பதற்காக சினிமாவில் நுழைந்து டைரக்டராக மாறி, ஜெயித்து, தோற்று, காணாமல் போய், மீண்டும் திரும்பி வந்து, தற்போது வெற்றி முன்பின் வந்தாலும் என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் மாநாடு மூலம் மிகப்பெரிய திருப்புமுனை வெற்றி எனக்கு கிடைத்திருக்கிறது.

ஜப்பானில் இந்தப் படத்தைப் பார்த்த பெண்மணி என் நடிப்பு பிடித்திருக்கிறது என பாராட்டுவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் இந்தப்படத்தில் நான் பேசிய வசனங்களை என்னைப் போல பேசுகின்ற வீடியோக்களையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசும்போது,

“இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட வேண்டும் என தயாரிப்பாளர் முடிவு செய்தபோது, சற்று பொறுங்கள்.. 25-வது நாளில் வெற்றி விழாவை நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.. காரணம் இப்போது பல படங்களுக்கு இரண்டு மூன்று நாட்களிலேயே சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் அது உண்மையான வெற்றி அல்ல.. தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருமே அந்தப்படத்தால் பயன்பெற்று, அவர்களும் சேர்ந்து கலந்து கொள்ளும் இதுபோன்ற வெற்றி விழாக்கள் தான் ஒரு படத்தின் உண்மையான வெற்றியை வெளிப்படுத்தும்.

அந்த வகையில் இந்த அனைவரையும் அழைத்து கவுரவப்படுத்திய தயாரிப்பாளருக்கு நன்றி.. அதுமட்டுமல்ல இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ஒரு பைசா பாக்கியில்லாமல் சம்பளத்தை செட்டில் பண்ணிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிஜமாகவே பாராட்டுக்குரியவர்” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது,…

“இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்னவென்றால் பார்த்தான்.. புடிச்சது.. ரிப்பீட்டு.. பார்த்தான்.. புரியல.. ரிப்பீட்டு என்று சொல்லலாம்.. பிடித்தவர்கள் திரும்ப திரும்பப் பார்த்தார்கள்.. முதல் தடவை படம் பார்த்து புரியாதவர்கள் இரண்டாம் முறை அது என்ன என்று புரிந்து கொள்வதற்காக திரும்பவும் பார்த்தார்கள்.. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய காரணமாக அமைந்தது..

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் நலிவடைந்து கிடந்த விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்கியதால் மீண்டும் உயிர் பெற்று இதன்மூலம் சம்பாதித்திருக்கிறார்கள் என்றால் அதுதான் மாநாடு படத்தின் உண்மையான வெற்றி.. தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கு அடுத்து சரியான திட்டமிடலுடன் கண்டிப்புடனும் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைத்தான் நான் சொல்வேன்..

அதேபோல இயக்குனர் வெங்கட்பிரபு 80 நாட்களில் இந்த படத்தை எடுத்து தருவதாக கூறி, 68 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.. அதுமட்டுமல்ல இந்த கோவிட் காலகட்டத்தில் தயாரிப்பாளரின் சுமையை குறைக்கும் விதமாக தனது சம்பளத்தில் 30 சதவீதத்தையும் விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது….

“சினிமாவிற்கு வந்து ஐம்பது வருடங்களாக நடித்து வருகிறேன்.. கிட்டத்தட்ட ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் தான், உனக்கு ரிட்டயர்மென்ட் இல்லை.. இன்னும் பதினைந்து வருடங்கள் நீ நீடிக்கலாம் என இந்த மாநாடு படம் எனக்கு புரோமோஷன் கொடுத்துள்ளது. இவ்வளவு வருடங்களாக நான் நடித்து வந்தாலும், மாநாடு படத்தை பார்த்துவிட்டு பலரும், இவ்வளவு நல்லா நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள்..

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சி போல திருவிளையாடலில் தருமி வரும் காட்சி போல இந்தப் படத்தில் சிம்பு எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் நான் இணைந்து நடித்த காட்சி, ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டது கிட்டத்தட்ட முரட்டுக்காளை படத்தில் நடித்த காலகட்டத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டது போல எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.. இசைஞானி இளையராஜாவே போன் செய்து, “பின்னிட்ட” என்று பாராட்டியது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது” என்று கூறினார்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங்கட் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஜானரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்த படத்தை முதல் முறை மொத்தமாக ரசித்து பார்த்தேன் என்றால் இரண்டாவது முறை பார்க்கும்போது பின்னணி இசை என்னை மிரட்டி விட்டது. அந்தவகையில் யுவன் ஷங்கர் ராஜாவை ‘இசைஞானி இளையராஜாவின் 2K வெர்ஷன்’ என்றுதான் நான் சொல்வேன்..

சிம்புவுக்கு இந்த படம் நிச்சயமாக ஒரு திருப்புமுனை படம் தான். சிம்புவை நம்பி சுரேஷ் காமாட்சி மிகப்பெரிய முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.. இவ்வளவு பெரிய வெற்றிபெற்ற இந்தப்படத்தின் நாயகன் சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அவர் ஏதோ படப்பிடிப்பில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.. ஆனாலும் இந்த விழாவில் அவர் நிச்சயமாக கலந்து கொண்டிருக்க வேண்டும்.. வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வெற்றி கிடைத்ததும் உடனே மாறிவிடக்கூடாது” என்று பேசினார்

இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது,…

“இந்த படத்தின் கதையை சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்த படத்தை பிரஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார்.. இந்த படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன்.. ஆனால் அந்த சமயத்தில் என்ஜிகே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன்பிறகுதான் டைம் லூப்புக்கு கதையை மாற்றினோம். இடையில் கோவிட் காரணமாக இந்த படத்தை அப்படியே வைத்துவிட்டு, இதே சிம்பு, எஸ்.ஜே.சூர்யா கூட்டணியை வைத்து சிம்பிளாக ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்தேன்.. சிம்புவும் அதற்கு ஓகே சொன்னார்.. ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு அந்த கதை பிடித்திருந்தாலும், மாநாடு படத்திலிருந்து நான் டைவர்ட் ஆக வேண்டாம் முதலில் அந்த படத்தை முடிப்போம் என உறுதியாக நின்றார்

இந்த படம் 68 நாட்களில் முடிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தான். சிக்கலான இந்த கதையை எல்லோருமே எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக படத்தொகுப்பு செய்த பிரவீணுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருந்தது அதில் மாஷா அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தி முதலில் அந்தப்பாடலை எழுதி படமாக்கியும் விட்டோம். அதன்பின் யுவன் சங்கர் ராஜாவும் அவர் மனைவியும் அந்த பாடலில் மாஷா அல்லா என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினால் அவ்வளவு சரியாக இருக்காது என கூறியதால் பாடலாசிரியர் மதன் கார்க்கி மெஹ்ருசைலா என்கிற புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்றி எழுதிக் கொடுத்தார்.

ஒரு காலத்துல என்னோட கம்பெனில படம் பண்ணுவதற்காக இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தார் சுரேஷ் காமாட்சி.

இன்னைக்கு அவரோட கம்பெனிஇல நான் படம் இயக்கியிருக்கிறேன்.. அந்த அளவுக்கு அவர் வளர்ந்து விட்டார்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பக்கபலமாக இருந்தவர்கள் உத்தம்சிங் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இருவரும் தான்.. இந்த படம் தொடங்கிய சமயத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அந்த கருத்து வேறுபாடுகள் எல்லாமே படத்திற்காக தானே தவிர, எங்களுக்குள் பர்சனலாக எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. சிம்புவுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவரை நான் எப்போதும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

அதேபோல இந்த படத்தின் கதையைக் கேட்டதுமே, எஸ் ஜே சூர்யா இந்த படம் ஹிந்தியில் கூட நல்ல விலைக்குப் போகும்.. அதனால் எனக்கு சம்பளம் தவிர எக்ஸ்ட்ராவாக லாபத்தில் கொஞ்சம் சதவீதம் கொடுங்கள் என தமாஷாக கூறினார். அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்..

யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தை தாங்கி பிடித்தது. இளையராஜா சாருக்கு இசைஞானி என பெயர் வைத்துவிட்டு, இவருக்குத்தான் இளையராஜா என பெயர் வைத்திருக்க வேண்டும்.. இந்த படம் தாமதமானாலும் எல்லாமே பாசிட்டிவாக தான் அமைந்தது” என்று கூறினார்

Director Venkat Prabhu speech at Maanaadu success meet

பட்டைய கிளப்பும் செந்தில் குமரன்.; Go.. Go.. Govindha… Goes Viral

பட்டைய கிளப்பும் செந்தில் குமரன்.; Go.. Go.. Govindha… Goes Viral

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் இசை ஆல்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால், பல இசை ஆல்பங்கள் வெளியாக தொடங்கியிருப்பதோடு, பெரிய பெரிய இசை நிறுவனங்களும் தமிழில் இசை ஆல்பங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், கனடா நாட்டில் வாழும் தமிழரான செந்தில் குமரன் ஒரு நல்ல பாடகர். தனது இசை ஆல்பங்கள் மூலம் உலக தமிழகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

கனடா நாட்டில் மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆலோசககார பணியாற்றி வருகிறார். இசை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக அவர் அங்குள்ள தமிழ் மற்றும் கனடா நாட்டு இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து திரைப்பட பாடல்களுக்கு கவர் பாடல்களை பாடி, சொந்தமாக பல இசை ஆல்பங்களையும் தயாரித்து வீடியோ பதிவு செய்து அப்பாடல்களை தனது Minnal Music YouTube சேனலில் வெளியிட்டு வருகிறார்.

செந்தில் குமரனின் குரலுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகி வருவதோடு, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல பாடகர்களும் அவரது பாடல்களை கேட்டு பாராட்டி வருகிறார்கள். பிரபல இசையமைப்பாளர் பிரவின் மணியுடன் சேர்ந்து பல்வேறு பாடல்களை பாடி வெளியிட்டு வரும் செந்தில் குமரன், தற்போது நவீன் வரிகளில் “கோ…கோ…கோவிந்தா…” என்ற பாடலை வைஷாலி என்னும் பாடகியோடு பாடி தயாரித்து வெளியுட்டுள்ளார்.

மின்னல் மியூசில் YouTube சேனலில் வெளியாகியுள்ள “கோ…கோ…கோவிந்தா…” பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, அப்பாடலை படமாக்கிய விதமும் பலரால் பாராட்டு பெற்று வருகிறது.

மக்களை உற்சாகப்படுத்தும் மற்றும் மகிழ்விக்கும் விதமாக உருவாகியுள்ள இப்பாடல், மிகப்பெரிய பழமையான பாய்மர கப்பலில் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் நடன கலைஞர்கள் என்று பெரிய Team ஐயே வைத்து செந்தில் குமரன், அப்பாடலை ஒரு பிரமாண்ட திரைப்படத்தின் பாடல் காட்சியைப்போல் படமாக்கிய விதம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

பிரம்மாண்டமான காட்சியமைப்பு, ஆட்டம் போட வைக்கும் மெட்டு! – செந்தில் குமரனின் தயாரிப்புகளுக்கு தனி முத்திரை உண்டு!

Song Link: https://youtu.be/LVbHU8GQqOY

Senthil Kumaran’s Go Govindha goes viral

கார்ப்பரேட் வசம் மாட்டிக்கொண்ட குடும்பம் எடுத்த விபரீத முடிவு

கார்ப்பரேட் வசம் மாட்டிக்கொண்ட குடும்பம் எடுத்த விபரீத முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்.குரூப் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெரோம் சேவியர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜீவா சுந்தர் நடிக்கும் புதிய திரைப்படம் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்”

கதைச்சுருக்கம்: ஒரு ஆண் என்ன காரணத்துக்காக பயப்படுவான், எப்படி இருந்தால் பயப்படுவான்,

கார்ப்பரேட் வசம் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பம் எடுக்கும் விபரீத முடிவு தான் இப்படத்தின் கதை .

கதாநாயகனாக ஜீவா சுந்தர் மற்றும் கதாநாயகியாக நிரஞ்சனா அறிமுகமாகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரித்திகா ,லிசி ஆன்டனி , ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். பிரியதர்ஷினி ,பேபி ஷைனி , அம்பேத்கார், ராஜேஸ்வரன் ,நிவேஷ், அட்சயா ஆகியோர் அறிமுகமாகின்றனர் .

இத்திரைப்படம் திருச்சி ,பெரம்பலூர் ,கீரனூர், அரியலூர் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது .

இசையமைப்பாளர் வசந்த் கைவண்ணத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறுகிறது.

மேலும் பல திருப்பங்கள் கொண்டு உருவாகும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது .

தொழிட்நுட்ப கலைஞர்கள்:

கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஜெரோம் சேவியர்

இசை -வசந்த்

ஒளிப்பதிவு -பிரவீன்

பாடல்கள்- சுதாகர்

வசனம் -சுதாகர் ,ஜெரோம்

நடனம்- மணி

எடிட்டர்- வினோத்

கலை- நிவேஸ்

மக்கள் தொடர்பு- செல்வரகு

தயாரிப்பு- ஏ .ஜஸ்டின் ,கே ஆர் குணா

Its just a beginning story expalains how corporate company influence middle class family

‘ரைட்டர்’ படத்தை பார்த்த உடன் மக்களே பேசுவார்கள்.. – ‘தன்னம்பிக்கை’ தங்கராஜ்

‘ரைட்டர்’ படத்தை பார்த்த உடன் மக்களே பேசுவார்கள்.. – ‘தன்னம்பிக்கை’ தங்கராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .

இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது .

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின், சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பா .ரஞ்சித் பேசியவை ,

தயாரிப்பாளர் அதிதி என் ரசிகையாக என்னை சந்தித்தார் .காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார் .பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம்.

முதலில் அவர் நான் இயக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை.

அதிதி-க்கு சமூக அக்கறை உள்ள படங்களை தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஐந்து படங்கள் தயாரிக்கலாம் என பேசி முடிவெடுத்தோம்.

கதை தேர்வில் நான் பிடிவாதமாக இருந்தேன். கதை எனக்கு பிடித்து இருக்க வேண்டும் .தவறான அரசியல் பேசக்கூடாது .

எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மக்களுக்கு செல்லும் படம் சரியான படமாக இருக்கவேண்டும் என நினைத்தேன்.

ரைட்டர் படத்தை தயாரிக்க நான் முன்வந்த காரணம் இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாகவும் , மனதுக்கு நெருக்கமாகவும் இருந்தது தான் . இப்படம் சிறப்பாக இருக்கும் என கதை படிக்கும்போதே எனக்கு தோன்றியது.

படப்பிடிப்பின்போது இப்படம் டெக்னிக்கலாகவும் படம் அருமையாக வரும் என நினைத்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்திலும் அவரது பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது.

இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் சமுத்திரக்கனி அண்ணனை சந்திக்கலாம் என்று கூறினேன். நான் எதுவும் சொல்லாமலேயே கதையை படித்துவிட்டு கதை சூப்பர். கண்டிப்பாக பண்ணலாம் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக தங்கராஜ் ஆக வாழ்ந்துள்ளார் என்று சொல்லவேண்டும். மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இப்படத்தில் அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

நடிகர் சமுத்திரக்கனி பேசியவை

தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் , நடிகர் நடிகைகள் அனைவருக்கும் எனது நன்றி. உழைக்கும் ஆட்களைக் கண்டால் அப்படி ரசிப்பேன். காலையில் சூட்டிங் நேரமாகவே சென்றுவிடுவேன் .பிராங்கிளின் , கேமராமேன் பிரதீப் வேலைப்பாடுகளை கூர்ந்து கவனிப்பேன்.

ரைட்டர் படம் அருமையான ஒரு குழு சேர்ந்து உழைத்த படம். ஒரு கூட்டு முயற்சி ஒரு கூட்டு படைப்பை இந்த படத்தில் நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் தனது படமாக நினைத்து இந்த படத்தில் வேலை பார்த்தனர்.

உண்மையான உழைப்பை நாம் பேச தேவையில்லை. திரையில் பார்த்த உடன் மக்களே பேசுவார்கள். மிகப் பெரிய வெற்றி அடையும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் பிராங்க்ளின் பேசியவை,

இது எனக்கு முதல் மேடை .நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .முதல் நன்றி பா .ரஞ்சித் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து அடிப்படை முறைகளையும் ரஞ்சித் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். சமுத்ரகணி அவர்களிடம் கதையை கூறியவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது .

கண்டிப்பாக இப்படத்தை பண்ணலாம் என தெரிவித்தார். இப்படத்தில் தங்கராஜ் கதாபாத்திரம் உயிர் கொண்டு வர காரணம் சமுத்திரக்கனி அவர்கள்தான்.

இப்படத்திற்கு என் காட்சி அமைப்புக்கு ஏற்றவாறு பின்னணி இசையை கோவிந்த் வசந்தா அமைத்துள்ளார். கோவிந்து எனது சிறந்த நண்பர். கேமராமேன் பிரதீப்பிற்கு தனியே நன்றி சொல்லத் தேவையில்லை .என் குடும்பத்தில் ஒருவர்.

இப்படத்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் ஒரு நல்ல படத்தை உருவாக்க உதவி செய்துள்ளனர் . அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Actoro Samuthirakani talks about writer movie

திமுக.வின் வாரிசு அரசியலையும் சிம்புவையும் ‘மாநாடு’ மேடையிலேயே கண்டித்த விஜய் தந்தை

திமுக.வின் வாரிசு அரசியலையும் சிம்புவையும் ‘மாநாடு’ மேடையிலேயே கண்டித்த விஜய் தந்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் & எஸ்ஜே. சூர்யா நடித்து வெளியான படம் ‘மாநாடு’.

இதில் எஸ்.ஏ.சி, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

யுவன் இசையமைத்து இருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்பட நன்றி & வெற்றி விழா சென்னையில் இன்று (21.12.21) நடைபெற்றது.

இதில் எஸ்ஜே சூர்யா, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜீ, யுவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் சிம்பு, கல்யாணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இதில் எஸ்ஏசி பேசியதாவது…

“இந்த படம் தமிழ் மக்களுக்கும் ஏற்ற வகையில் இருந்தது.

முதல்வர் கொல்லப்பட்டால் இஸ்லாமியருக்கு அவப்பெயர் ஏற்படும் என சொல்லப்பட்டது.

அதுபோல் வாரிசு அரசியல் பற்றி பேசப்பட்டது. (திமுகவை மறைமுகமாக கலாய்த்தார்)

மேலும் அவர் பேசியதாவது…

இது ஒரு உண்மையான வெற்றி. ஆனால், இப்பட நாயகன் இங்கு இல்லாதது ஏன் என எனக்குப் புரியல.

என்னதான் ஷூட்டிங் இருந்தாலும் இங்கே வந்திருக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் கொண்டாடியிருக்கனும். மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செஞ்சிருக்கார். அப்படிப்பட்ட ஒரு வெற்றியைக் கொண்டாட இந்த ஹீரோ இங்கே இருக்கவேண்டும்.

சூட்டிங்கில் எப்படி இருந்தோமோ படத்தின் வெற்றிக்குப் பிறகும் அப்படியே இருக்கனும்.”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்

Director SAC speech at Maanaadu success meet

More Articles
Follows