மிக மிக அவசரம் படத்தை வெற்றி மாறனுடன் இணைந்து வெளியிடும் சத்யமூர்த்தி

Vetrimaaran and Clap Board Sathyamoorthy bought the rights of Miga Miga Avasaram‘அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.

கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார்.

கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார்.

முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளார் வெற்றிமாறன்.

காக்கா முட்டை, விசாரணை, லென்ஸ் என நீளும் அந்த பட்டியலில் இப்போது மிகமிக அவசரம் படத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்நிலையில் இவருடன் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ நிறுவனம் சார்பில் வி.சத்யமூர்த்தி அவர்களும் இணைந்து இப்படத்தை வெளியிட உள்ளார்.

தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்த வி.சத்யமூர்த்தி அவர்கள் நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ஆகிய படங்களை அண்மையில் வெளியிட்டார்.

மேலும் கோலி சோடா 2 பட வெளியீட்டு உரிமையையும் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran and Clap Board Sathyamoorthy bought the rights of Miga Miga Avasaram

Overall Rating : Not available

Latest Post