தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மக்கள் திலகம் எம்ஜிஆரின் அன்பே வா மற்றும் ஜெயலலிதாவின் தர்மம் எங்கே? நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தெய்வமகன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்ஏ.சி.திருலோகச்சந்தர்.
மேலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நிறைய படங்களை இயக்கியுள்ளார்.
1960 முதல் 1980 வரையிலும் இவர் படங்களை இயக்கி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டு வந்தார்.
இன்று (15 ஜூன் 2016) மாலை திடீரென அவரது உயிர் பிரிந்தது.
இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சென்னை, கானத்தூரில் மாயாஜாலுக்கு எதிரில் உள்ள வீட்டில் நாளை மாலை இவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.