Breaking வேற லெவல் கட்அவுட் & அபிஷேகம் செய்யுங்க.; சீறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

இப்படம் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் ரிலீஸ் குறித்து சிம்பு தன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். (அந்த செய்தியை நாம் பதிவிட்டு இருந்தோம். இதோ அந்த லிங்க்)

https://www.filmistreet.com/cinema-news/gift-new-dress-to-your-parents-instead-of-my-cut-outs-says-simbu/

கட்-அவுட், பேனர் வைக்காதீர்கள். பால் அபிஷேகம் செய்ய வேண்டாம்.

அந்தப் பணத்தில் பெற்றோருக்கு டிரெஸ் வாங்கி கொடுங்க. அதை படம் எடுத்து இணையத்தில் பதிவிடுங்கள் என கூறியிருந்தார்.

இந்த வீடியோவை சிலர் கிண்டல் செய்து, சிம்புவுக்கு இருப்பதே சில ரசிகர்கள் தான்’, இதற்கு ஏன் இந்த பில்டப்? என விமர்சித்தனர்.

இதற்கு பதிலடியாக சிம்பு தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு வீடியோ வெளியிட்டேன். அதில் என்னோட படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி பார்க்காதீர்கள்.

‘கட்-அவுட்’, ‘பேனர்’ எல்லாம் வைத்து ‘பால் அபிஷேகம்’ எல்லாம் பண்ணாதீர்கள் என்றேன்.

இவர் இதை விளம்பரத்துக்காக சொல்கிறார். எனக்கு இருக்கிறதே 2-3 ரசிகர்கள் தான் என்கிறார்கள்.

நம்ம ஒரு தப்பு செய்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும். 2-3 ரசிகர்கள் தான் என்னும் போது ஏன் இதெல்லாம் பேச வேண்டும்.

ஆகையால் அந்த 2- 3 ரசிகர்களுக்கு மட்டும் நான் ஒன்றை சொல்கிறேன். இது என்னோட அன்புக் கட்டளை.
இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு ப்ளக்ஸ் வைக்கிறீங்க, பேனர் வைங்க. கட்-அவுட் வைக்கிறீங்க.

பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள். வேற லெவலில் செய்யுங்கள். இதைத் தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

அதனால் இதைச் செய்வது தப்பு கிடையாது. அந்தளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆளும் கிடையாது. யாரும் கேள்வியும் கேட்கப் போறது கிடையாது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட ரிலீஸுக்கு வேற லெவலில் செய்யுங்கள்.

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

Vera level Flex banners is must for my VRV release Simbu request to his fans

Breaking யாருடனும் மோதவில்லை; ரசிகர்கள் பொறுப்புடன் நடக்க அஜித் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜனவரி 10ஆம் தேதி ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்துடன் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் ரிலீசாகி மோதியது.

இதனால் இரு தரப்பு ரசிகர்களும் மோதிக் கொண்டு மோசமான வார்த்தைகளால் ரஜினியை அஜித் ரசிகர்கள் திட்டினர்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியில் அஜித் ரசிகர்கள் சிலர் இணைந்தார்கள் என்று செய்தி வெளியானது.

தொடர்ந்து, தமிழிசை சவுந்தர்ராஜன், அஜித்தையும், அஜித் ரசிகர்களையும் நேர்மையானவர்கள் என்று பாராட்டிப் பேசினார்.

எனவே இது தொடர்பாக சற்றுமுன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜித்.

அந்த அறிக்கை இதோ…

வணக்கம்‌ பல,
நான்‌ தனிப்பட்ட முறையிலோ அல்லது நான்‌ சார்ந்த திரை படங்களில்‌ கூட அரசியல்‌ சாயம்‌ வந்து விடக்‌கூடாது என்பதில்‌ மிகவும்‌ தீர்மானமாக உள்ளவன்‌ என்பது அனைவரும்‌ அறித்ததே. என்னுடைய தொழில்‌ சினிமாவில்‌ நடிப்பது மட்டுமே என்பதை நான்‌ தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்குக் காரணம்‌.

சில வருடங்களுக்கு முன்னர்‌ என்‌ ரசிகர்‌ இயக்கங்களை நான்‌ கலைத்ததும்‌ இந்த பின்னணியில்‌ தான்‌. என்‌ மீதோ, என்‌ ரசிகர்கள்‌ மீதோ, என்‌ ரசிகர்‌ இயக்கங்களின்‌ மீதோ எந்த விதமான அரசியல்‌ சாயமும்‌ வந்து விடக்கூடாது என்று நான்‌ சிந்தித்ததின்‌ சீரிய முடிவு அது.

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல்‌ நிகழ்வுகளுடன்‌ என்‌ பெயரையோ, என்‌ ரசிகர்கள்‌ பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள்‌ வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல்‌ வரும்‌ இந்த நேரத்தில்‌ இத்தகைய செய்திகள்‌ எனக்கு அரசியல்‌ ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொதுமக்கள்‌ இடையே விதைக்கும்‌.

இந்த தருணத்தில்‌ நான்‌ அனைவருக்கும்‌ தெரிவிக்க விழைவது என்னவென்றால்‌ எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்‌ ஈடுபாட்டில்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை.

ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில்‌ நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்‌கட்ட அரசியல்‌ தொடர்ப்பு. நான்‌ என்‌ ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்‌ என்றோ வாக்களியுங்கள்‌ என்றோ எப்பொழுதும்‌ நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும்‌ மாட்டேன்‌.

நான்‌ சினிமாவில்‌ தொழில்‌ முறையாக வந்தவன்‌. நான்‌ அரசியல்‌ செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை. என்‌ ரசிகர்களுக்கும்‌ அதையேதான்‌ நான்‌ வலியுறுத்திகிறேன்‌. அரசியல்‌ சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான்‌ தெரிவிப்பதில்லை. என்‌ ரசிகர்களும்‌ அவ்வாறே இருக்க வேண்டும்‌ என விரும்புகிறேன்‌.

சமூக வலைதளங்களில்‌ தரமற்ற முறையில்‌ மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான்‌ என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும்‌ இந்த உலகம்‌ இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.

அரசியலில்‌ எனக்கும்‌ தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை தான்‌ யார்‌ மீதும்‌ திணிப்பது இல்லை.

மற்றவர்கள்‌ கருத்தை என்‌ மேல்‌ திணிக்க விட்டதும்‌ இல்லை. என்‌ ரசிகர்களிடம்‌ இதையேதான்‌ நான்‌ எதிர்பார்க்கிறேன்‌. உங்கள்‌ அரசியல்‌ கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும்‌. என்‌ பெயரோ, என்‌ புகைப்படமோ எத்த ஒரு அரசியல்‌ திகழ்விலும்‌ இடம்‌ பெறுவதை நான்‌ சற்றும்‌ விரும்புவதில்லை.

எனது ரசிகர்களிடம்‌ எனது வேண்டுகோன்‌ என்னவென்றால்‌ நான்‌ உங்களிடம்‌ எதிர்பார்ப்பது எல்லாம்‌, மாணவர்கள்‌ தங்களது கல்வியில்‌ கவனம்‌ செலுத்துவதும்‌, தொழில்‌ மற்றும்‌ பணியில்‌ உள்ளோர்‌ தங்களது கடமையை செவ்வனே செய்வதும்‌, சட்டம்‌ ஒழுங்கை மதித்து நடந்துக்‌ கொள்வதும்‌, ஆரோக்கியத்தின்‌ மீது கவனம்‌ வைப்பதும்‌,வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன்‌ இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதைசெலுத்துவதும்‌, ஆகியவை தான்‌. அதுவே நீங்கள்‌ எனக்கு செய்யும்‌ அன்பு.

“வாழு வாழ விடு” .

என்றும் உண்மையுடன்,
அஜித்குமார் .

Ajith statement regarding Viswasam and Political issue

5 ஹீரோயின்களுடன் ஜித்தன் ரமேஷ் இணையும் ‘ஒங்கள போடணும் சார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் ‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்.

ஜித்தன் ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள்.

ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம்.

வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம்.. மாறாக, இந்த படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷ்க்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.

பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

இந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம்.

அப்படி யோசிக்கும்போது “நானும் ரௌடி தான்” படத்தில் நயன்தாரா பேசிய “ஒங்கள போடணும் சார்” வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி… என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.

வசனம் & பாடல்கள்: முருகன் மந்திரம் | படத்தொகுப்பு: விஷ்ணு நாராயணன் | நடனம்: ஸ்ரீசெல்வி | சண்டைப்பயிற்சி: ஃபையர் கார்த்திக் | கலை: அனில் | ஒளிப்புதிவு: S.செல்வகுமார் | இசை: ரெஜிமோன் | இயக்கம்: ஆர்.எல்.ரவி & ஸ்ரீஜித் ரெஜிமோன் | தயாரிப்பு: ஸிக்மா பிலிம்ஸ் மனோஜ்

Jithan ramesh new movie titled OPS ONGALA PODANUM SIR

மீண்டும் சோஷியல் மெசேஜ் சொல்ல வரும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் சீமராஜா.

அதன்பின்னர் அவர் தயாரித்த கனா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து இரும்புத் திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் கதையானது சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்தாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே வேலைக்காரன் படத்தில் ஒரு நல்ல சோஷியல் மெசேஜை சிவகார்த்திகேயன் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and PS Mithran combo movie will have social message

கனடாவில் தமிழ் இருக்கை வாழ்த்து பாடலுக்கு இசையமைக்கும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகம் கனடா நாட்டில் அமைந்துள்ளது.

இதில் தமிழ் மொழிக்காக இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளும் நிதி திரட்டலும் நடந்து வந்தன. இதற்கு பல்வேறு பிரபலங்கள் நிதி திரட்டினர்.

இந்நிலையில் அப்படி அமையவுள்ள தமிழ் இருக்கைக்கான தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

மேலும் கனடா தமிழ் காங்கிரஸ் சார்பில் இமானுக்கு, `மாற்றத்திற்கான தலைவர் விருதும்’ வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி டி. இமான் தன் ட்விட்டரில்… “இந்த வாய்ப்பை வழங்கிய கனடா தமிழ் அமைப்புக்கு நன்றி. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசை அமைப்பது பெருமையாக உள்ளது.

உலகில் திறமையுள்ள இசை கலைஞர்கள் நான் அறிமுகம் செய்வேன் எனவும் குறிப்பிட்டு வாழ்க தமிழ்” என பதிவிட்டுள்ளார்.

D.IMMAN
‏Verified account @immancomposer

Honoured to compose a Tamil anthem for Tamil Chair,University of Toronto!Thanks to Canadian Tamil Congress for honouring me with Leaders for Change Award! Glory to God!I ensure my support always in introducing talented musicians across the globe in future too! வாழ்க தமிழ்!

Imman composing Music for Tamil Anthem for Tamil seat in University of Toronto

அரசு பேருந்தில் பேட்ட..; அரசு நடவடிக்கை எடுக்க விஷால் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

படம் ஒரு பக்கம் வசூல் வேட்டை செய்துக் கொண்டிருந்தாலும், இணைய தளங்களிலும் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த பைரசியை தடுக்க வேண்டிய அரசு பேருந்திலேயே பேட்ட திரைப்படம் ஒளிப்பரப்பானது.

இதை அந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவர், செல்போனில் படம் பிடித்து, பஸ் எண், எந்த வழித்தடங்களில் செல்கிறது என்ற விபரத்தை இணையதளங்களில் வெளியிட்டார்.

இதுப்பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது : அரசு பஸ்சில் திருட்டுத்தனமாக படங்கள் ஒளிப்பரப்புவது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டு, அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

More Articles
Follows