அக்டோபர் 5ல் ஆங்கிலம் & தமிழிலும் ரிலீஸாகிறது *வெனம் – Venom*

அக்டோபர் 5ல் ஆங்கிலம் & தமிழிலும் ரிலீஸாகிறது *வெனம் – Venom*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venom movie releasing on both Tamil and English languages on 5th Octoberசூப்பர் ஹீரோக்களைப் போல அம்மாதிரியான விஞ்ஞான நவீனங்களில் உலா வரும் anti-சூப்பர் ஹீரோக்களும் (எதிர்மறையான வில்லன் வேடம்!) இணையான மவுசு உண்டு.

மார்வெல் (Marvel) காமிக்ஸ் கதாபாத்திரமொன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது தான், எடி ப்ரோக் என்கிற இப்படத்தின் பிரதான கதாபாத்திரம். சோனி மார்வெல் யூனிவர்சின் முதல் (Sony Marvel Universe) படைப்பிது!

ஸ்பைடர்மேன் படத்தொடரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முக்கிய கதாபாத்திரம்தான், இந்த எடி ப்ரோக்/வெனம் கதாபாத்திரம்!

அட்லாண்டா, நியூ யார்க், லாஸ் ஏஞ்சிலஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய ஊர்களில் இதன் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர்மேன்-3 திரைப்படத்தில்தான், முதன் முதலாக எடி ப்ரோக் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

லைஃப் பெளண்டேஷன் நிறுவனத்தின் தலைமை பீடத்தில் வீற்றிருக்கும் சார்ல்டன் ட்ரேக் (ரிஸ் அஹமத்), உயிரினங்களின் மீது விசித்திரமான ஆராய்ச்சி ரீதியிலான சோதனைகளைச் (experiments) செய்து பார்ப்பதில் சமர்த்தர்!

எதிர்காலத்தில் மனித இனமே அழிந்துவிடும் ஒரு நிலை உருவாகுவதற்கான சாத்தியகூறுகள் தென்பட, சிம்பியாட்ஸ் (Symbiotes) என்கிற ஒரு வகை இனம் துளிர் விடத் தயாராகிவிட்டதையும் உணர்கிறார்! பத்திரிகையாளரான எடி ப்ரோக் (டாம் ஹார்டி), இவ்வாராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

சிம்பியாட் ஒன்றோடு அவரது நெருக்கம், அவருக்குப் புதியதொரு சக்தியையும் அந்தஸ்தையும் தந்தருள்கிறது!

நன்மைகளை விட, தீமைகள் அதிகமாக நடக்கவல்ல சூழ்நிலையும் உருவாகிறது! ஆனி வியாங் (மிஷல் வில்லியம்ஸ்) எடியின் காதலியாகத் தோன்றுகிறார். லட்விக் கோரன்சன் இசையமைக்க, மாத்யூ லிபாடிக்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆலம் பெளம்கார்டன் படத்தைத் தொகுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘வெனம்’ சங்கிலித் தொடர் படங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.

Venom movie releasing on both Tamil and English languages on 5th October

சில்க் ஸ்மிதா நடித்த *ராக தாளங்கள்* முதன்முறையாக ரிலீஸாகிறது!

சில்க் ஸ்மிதா நடித்த *ராக தாளங்கள்* முதன்முறையாக ரிலீஸாகிறது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

silk smithaதன் கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை மயங்க வைத்தவர் சில்க் சுமிதா.

இவரது வருகைக்கு பிறகு இவர் இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். அவரது அகால மரணம் திரை உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

அவர் நடித்த படம் ஒன்று நீண்ட இடைவேளைக்கு பிறகு இதுவரை வெளிவராத படம் ராக தாளங்கள் வெளி வர உள்ளது.

மாறுபட்ட வேடத்தில் சில்க் சுமிதா நடித்து உள்ளார். ராக தாளங்கள் படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ளார் திருப்பதி ராஜன். பொருளாதாரப் பிரச்சனை காரணமாக இப்படம் இதுவரை வெளிவரவில்லை.

இதோ அதோ என்று தள்ளி போன சில்க் சுமிதா நடித்துள்ள ராக தாளங்கள் படம் செப்டம்பரில் வெளி வர உள்ளது.

இப்படத்தில் சில்க் சுமிதா நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் வியப்பின் உச்சிக்கே செல்வார்கள் என்பது உறுதி.

இப்படத்தில் சில்க் சுமிதா அபிராமி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். படத்தின் முடிவு பார்ப்போரின் மனதை வருத்தி எடுக்கும் என்பது நிச்சயம்.

ஸ்ரீ தண்டாயுதபாணி மூவிஸ் சார்பில் தாத்தா கலை மூவிஸ் தயாரித்துள்ளது.

வசூல் வேட்டையில் *சீமராஜா*; ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்!

வசூல் வேட்டையில் *சீமராஜா*; ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan stillsவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய 2 வெற்றிப் படங்களை அடுத்து சிவகார்த்திகேயன், பொன்ராம், இமான், சூரி ஆகியோர் இணைந்துள்ள படம் சீமராஜா.

அதுபோல் ரெமோ மற்றும் வேலைக்காரன் ஆகிய 2 வெற்றிப் படங்களை அடுத்து 24ஏஎம் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படம் சீமராஜா.

இப்படம் நேற்று வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அதன் வசூல் விவரம் வருமாறு….

சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் 24 AM STUDIOS நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிப்பில் உருவாகி , நேற்று வெளி ஆகி வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் “சீமராஜா” , சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கிறது.

முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது.

“இந்த வெற்றிக்கு காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது , அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான். குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம்.

சிவகார்த்திகேயன் நிறைய வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று நிலையை தாண்டி , அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கலகலப்பான படம் தான் சீமராஜா. முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது.

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது.

550 காட்சிகள் திரை இடபட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். ஊடக நன்பர்களுக்கும், திரை அரங்கு உரிமையாளர்களுக்கும், பொது மக்களுக்கும்,இந்த மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த நன்றிகள் ” என்கிறார் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.

அன்னை தெரசா விருதை பெற்றதால் இனி மது அருந்த மாட்டேன்.. : லாரன்ஸ்

அன்னை தெரசா விருதை பெற்றதால் இனி மது அருந்த மாட்டேன்.. : லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Now I received Mother Teresa award Hereafter I wont drink says Lawrenceதிரையுலகில் நடிகர், நடன இயக்குனர், டைரக்டர் என பன்முகத் திறமை கொண்ட ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது.

விழாவில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எஸ்றா சற்குணம் குமரி அனந்தன் மவுலானா இலியாஸ் ரியாஸ் தொழிலதிபர் ரூபி மனோகரன் முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி பால் வசந்தகுமார் எல்.ஐ.சி ஆர்.தாமோதரன் ராதாகிருஷ்ணன் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன் அன்னை தெரசா சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் G.K தாஸ் அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் T.V.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாற்றுத் திறனாளிகள் பலரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ்….

இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நெனக்கிறது தாயைத்தான். நாங்க ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது அப்போ நான் பிரெயின் ட்யூமர் நோயால் பாதிக்கப் பட்டிருந்தேன் அங்கிருந்து தன் தோளில் தூக்கிக் கொண்டே ஸ்டான்லி ஆஸ்பித்திரிக்கு என்னை கொண்டு வருவாங்க என் அம்மா.

பஸ்ஸுக்கு காசு இல்லாததால் ..அன்றைக்கு நம்பிக்கையோடு எங்க அம்மா என்னை காப்பாத்தலேன்னா இன்னிக்கி நான் இல்லை அதனால இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன்.

நான் இந்தளவுக்கு உயர்வதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் காரை துடைக்கும் வேலை கொடுத்து ஆதரவு அளித்தது. அங்கிருந்த என்னை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ” நீ டான்ஸரா சேரு என்று அவரே கடிதம் கொடுத்து சேர்த்து விட்டது.

அதன் மூலம் டான்ஸராகி டான்ஸ் மாஸ்டராகி அமர்க்களம் மூலம் நடிகராகி இன்று தயாரிப்பாளர் இயக்குனர் என்று உருவாக எவ்வளவோ பேர் உதவி இருக்காங்க அவ்வளவு பேரையும் மேடையில் சொல்ல முடியாது.

குறிப்பா சூப்பர் சுப்பராயன், சூப்பர் ஸ்டார் ரஜினி சார் விஜய், அஜீத், சிரஞ்சீவி, டைரக்டர் சரண், என்னை இயக்குனராக அறிமுகம் செய்த நாகார்ஜுன் சார் என்று பட்டியல் போய்க் கொண்டே இருக்கும்.

ராயபுரத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு நானும் அம்மா மூன்று சகோதரிகளும் வந்து வறுமையை எப்படியெல்லாம் அனுபவித்தோம் என்பது சொல்லி மாளாது.

ஆனால் பொறுமையாக வளர்ந்து நான் சம்பாதிப்பதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன்.. மக்கள் திலகத்தின் “தர்மம் தலை காக்கும்” என்ற பாடலும் சூப்பர் ஸ்டாரின் மரத்த வெச்சவன் தண்ணீ ஊத்துவான் என்ற பாடலை என் மனசுல ஏத்திக்கிட்டு நான் உதவி செய்துட்டு இருக்கேன்.

சாதாரணமாக இருந்த என்னை இந்தளவுக்கு உயர்த்திய மக்கள் கொடுத்த பணத்தை நான் திருப்பி தர்றேன் அவ்வளவு தான். இந்த விழாவுக்கு வந்திருக்கிற திரு அன்புமணி ராமதாஸ் அவர்களை பற்றி சொல்லனும்னா நிறைய சொல்லலாம்.

பத்து வருடங்களுக்கு முன்பு அவர் அமைச்சராக இருந்த போது நான் பத்து குழந்தைகளுக்கு இருதய ஆபரேசனுக்கு யாராவது உதவினா நல்லா இருக்கும்னு ஒரு பிரஸ் மீட்டுல வெச்ச வேண்டுகோள்களை கேட்டுட்டு அவரே எனக்கு போன் செய்து எல்லா உதவிகளையும் செய்தார்.

திருநாவுக்கரசர் இந்த மேடையில் பேசுறத கேட்டுட்டு எனக்கு இன்னும் பொறுப்புகள் அதிகமாயிடுச்சி. இன்னும் நிறைய சர்வீஸ் செய்ய வேண்டும் என்று. இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஒட்டு மொத்தமாக என் பெயரை சிபாரிசு செய்ததாக கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட் மது என்று எந்த பழக்கமும் இல்லை. டான்ஸரான போது நண்பர்களின் வேண்டுகோளுக்காக எப்போதாவது குடிப்பேன். அதையும் நிறுத்தியாச்சி. ரொம்ப டென்சன் இருந்தா எப்போதாவது கொஞ்சம் ஒயின் அருந்துவேன்.

இப்போது இந்த அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

மாற்றுத் திறணானிகளுக்கு நான் உதவியாக இருக்கிறேன் என்று சொல்வது தவறு. அவர்கள் தான் எனக்கு உதவியாக இருந்து எனக்கு இந்த விருதை பெற்று தந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் போகும் போது எடுத்துட்டு போகப் போவதில்லை. சமீபத்தில் இறந்து போன ஜெயலலிதா அம்மாவாகட்டும் கலைஞர் அய்யாவாகட்டும் அவர்கள் சேர்த்து வைத்த பணம் எதையும் எடுத்துட்டு போகலே…அவர்கள் செய்த தான தர்மங்களைத் தான் எடுத்துட்டு போனாங்க.

அதை மனசுல வெச்சி இனி அன்னை தெரசா வழியில் செயல் படுவது என முடிவெடுத்திருக்கிறேன் இவ்வாறு ராகவா லாரன்ஸ் பேசினார்.

ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருதை அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர் இருவரும் வழங்கினர்.

Now I received Mother Teresa award Hereafter I wont drink says Lawrence

mother theresa award event

வால்டர் படத்திற்காக அர்ஜுனுடன் இணையும் *ஹீரோ* விக்ரம் பிரபு

வால்டர் படத்திற்காக அர்ஜுனுடன் இணையும் *ஹீரோ* விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

walter movieஅன்பரசன் இயக்கத்தில் அர்ஜுனுக்கு இணையாக ஆக்‌ஷன் களம் காணப்போகும் அந்த இளம் நாயகன் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார்.

நடிகர் திலகம் வம்சத்தில் இருந்து விக்ரம் பிரபு தான் அந்த நாயகன் என்று.

விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் அதிரடி கூட்டணி இணையும் இப்படத்திற்கு ‘வால்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை பிரபல விநியோகஸ்தர் சிங்காரவேலன் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் துவங்கி மதுரை கும்பகோணம் தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் சூட்டிங் நடக்க உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக வால்டர் படம் உருவாகிறது.

கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஒளிப்பதிவு – சதீஷ்குமார்
இசை – அர்ஜூன் ரெட்டி படப் புகழ் ரதன் இசையமக்கிறார்.
எடிட்டிங் – கோபிகிருஷ்ணா
கலை – A.R.மோகன்
நடனம் – தஸ்தா, ஷெரிப்
சண்டை பயிற்சி – விக்கி

Vikram Prabu Arjun and Jackie Shroff teams up for Walter

walter title look

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பிள்ளை தயாரிக்கும் படங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பிள்ளை தயாரிக்கும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abhishek filmsதமிழ் திரையுலகின் முன்னனி பைனான்சியரும், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார்.

முதல் படம் – சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் சித்தார்த் – ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் முன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது படம் – நட்ராஜ், இஷாரா நாயர் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை புரிந்த “சதுரங்க வேட்டை” படத்தை தெலுங்கில் “Bluff Master” என்ற தலைப்பில் தயாரிக்கின்றார். கதாநாயகனாக சத்யதேவ், கதாநாயகியாக நந்திதா நடிக்கின்றனர்.

முன்றாவது படம் – இளைங்கர்களுக்கு பிடித்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம்.

நான்காவது படம் – நடிகை டாப்ஸி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்ற “ஆனந்தோ பிரமா” படத்தை தமிழில் தயாரிக்கின்றார்.

இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னனி கதாநாயகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து எதிர்ப்பார்ப்பை கூட்டும் விதத்தில் படங்களை வரிசைப்படுத்தி தயாரிக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் P பிள்ளை, தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் திரையுலகிலும், ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பிடிக்கும் என்கிறார்

More Articles
Follows