தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட் பிரபு தயாரித்து இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளியானது.
முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தனது 8வது படத்தின் பூஜையை போடுட்டுள்ளார் வெங்கட் பிரபு.
இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி. சிவா தயாரிக்கிறார்.
சற்றுமுன் நடந்த இப்பட பூஜையில் நடிகர்கள் விஜய் வசந்த், வைபவ், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
படத்தின் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தை டி. சிவா தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.