‘மாநாடு’ & ‘மன்மதலீலை’ தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் இணையும் வெங்கட் பிரபு

‘மாநாடு’ & ‘மன்மதலீலை’ தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் இணையும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கிய
’மாநாடு’ மற்றும் ’மன்மதலீலை’ ஆகிய இரண்டு படங்களும் 4 மாத இடைவெளியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கொடுத்துள்ளது.

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியானது.

இதில் நாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். இவர் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் ஆவார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் ஆவார்.

இந்த படத்தை பிரபல இந்த படத்தை ஸ்ரீ நிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கிறார் .

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

இதன் விவரம் வருமாறு..

‘மங்காத்தா’ என்ற பெரும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு, தற்போது ‘மாநாடு’ என்ற பெரும் வெற்றியுடன் வந்துள்ளார்.

மாநாடு திரைப்படதின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடும் வேளையில், மன்மதலீலை என்ற படத்தோடு துரிதமாக வந்தார். குறுகிய காலகட்டத்தில் உருவான இந்த படம், அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் படமாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்குனராக அவதாரம் எடுத்து 15 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், நாகசைதன்யா உடன் அவர் இணையும் இருமொழி படத்தின் அறிவிப்போடு அவர் வந்திருக்கிறார்.

சிம்பு WIN டைம் லூப்..; மாநாடு விமர்சனம் 4/5

நாகசைதன்யா இந்த வருடத்தில் பங்கார ராஜு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, “ Thank you” என்ற அவரது அடுத்த படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் வேளையில், அவர் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது.

இது வெங்கட் பிரபுவின் 11 வது படம், தெலுங்கில் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Venkat Prabhu

Venkat Prabhu and Naga Chaitanya joins for a new film

முதன்முறையாக விக்ரம் – விஜய்சேதுபதி படங்களை இயக்கும் ரஜினி – விஜய் பட டைரக்டர்

முதன்முறையாக விக்ரம் – விஜய்சேதுபதி படங்களை இயக்கும் ரஜினி – விஜய் பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து விஜய் படத்தை இயக்க இருந்தார் ஏஆர். முருகதாஸ்.

ஆனால் சில பிரச்சினைகளால் முருகதாஸ் விலகவே விஜய் படத்தை நெல்சன் இயக்கிவிட்டார்.

அதன் பின்னர் தெலுங்கு ஹீரோக்களை இயக்குவார் முருகதாஸ் என கூறப்பட்டது.

இதன்பின்னர் முருகதாஸ் படம் குறித்த தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.

இந்த நிலையில் முதன்முறையாக விக்ரம் நடிக்கவுள்ள படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

அதன்பின்னர் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தையும் முருகதாஸ் இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Popular tamil film director’s next film with Vikram and Vijay Sethupathi

தன் மனைவி பெயருடன் குஸ்தி போடும் விஷ்ணு விஷால்.; ரவிதேஜாவுடன் கூட்டணி

தன் மனைவி பெயருடன் குஸ்தி போடும் விஷ்ணு விஷால்.; ரவிதேஜாவுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த ‘எப்ஃஐஆர்’ படம் அண்மையில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து ‘மோகன்தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இந்தப் படங்களை தொடர்ந்து செல்லா அய்யாவு என்பவர் இயக்க ‛கட்டா குஸ்தி’ என்ற படத்தில் நடிக்கிறார் விஷ்ணு.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை விஷ்ணு விஷாலுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் தயாரிக்கிறார்.

தன் இசையால் ரசிகர்களை கவரும் இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

சண்டைப் பயிற்சி : அன்பறிவ்
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
படத்தொகுப்பு : பிரசன்னா
கலை : உமேஷ் குமார்

இந்தப்படம் மல்யுத்தம் தொடர்பான கதையில் உருவாகிறது.

இரு மொழிகளில் தயாராவதால் சிறப்பு தோற்றத்தில் ரவி தேஜா நடிப்பார் என நம்பலாம்.

இதற்கு முன்பே வெண்ணிலா கபடிக்குழு (கபடி), ஜீவா (கிரிக்கெட்) ஆகிய படங்களில் விளையாட்டு வீரராக நடித்திருந்தார் விஷ்ணு விஷால்.

அவை வெற்றி படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் ‛கட்டா குஸ்தி’ படமும் இணையும் என எதிர்ப்பார்க்கலாம்.

எல்லாம் சரி.. இதுல விஷ்ணு விஷால் மனைவி பெயர் எப்படி ? என்பதுதானே உங்கள் கேள்வி.??

விஷ்ணு விஷாலின் மனைவி பெயர் ஜூவாலா கட்டா. இவர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Vishnu Vishal and Ravi Teja joins for a new film

சமந்தாவின் பான் இந்தியா படம்..; சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸாகிறது

சமந்தாவின் பான் இந்தியா படம்..; சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்ஆர்ஆர், புஷ்பா, ராதே ஷ்யாம் உள்ளிட்ட பல தெலுங்கு படங்கள் தற்போது பான் இந்தியா திரைப்படங்களாக ரிலீசாகின.

இந்த படங்களில் ஹீரோக்களை மையப்படுத்தியே பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்தனர்.

தற்போது சமந்தா நடித்துள்ள ‘யசோதா’ படத்தை 5 மொழிகளில் ஆகஸ்ட் 12 வெளியிட உள்ளனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிப்படுத்தி “ஃபேமிலிமேன் 2” தொடர் மூலம் இந்திய அளவில் சிறந்த நடிகையாக, நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார்.

நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.

ஹரி-ஹரீஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது..,

நடிகை சமந்தா “யசோதா” படத்தில் நடிப்பில் மட்டுமின்றி சண்டைக்காட்சிகளிலும் அசத்தியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடுகிறோம்.

மே மாத இறுதியில் படப்பிடிப்பு முடிவடையும். இந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் இந்திய அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கக்கூடிய கதைக்களத்தை கொண்டுள்ளது.

சமீபத்தில் ஒரு பிரமாண்ட செட்டில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்துவிட்டு, இன்று கொடைக்கானலில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு செல்கிறோம்”

இப்படத்தில் சமந்தா உடன், வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இசை : மணிசர்மா,
வசனம்: புலகம் சின்னராயனா, Dr. செல்லா பாக்யலக்‌ஷ்மி
பாடல்கள்: ராமஜோகையா சாஸ்திரி Sastry
கிரியேட்டிவ் டைரக்டர்: ஹெமம்பர் ஜஸ்தி
ஒளிப்பதிவு: M. சசிக்குமார்
கலை: அசோக்
சண்டைப்பயிற்சி: வெங்கட்
எடிட்டிங்: மார்தந்த் K. வெங்கடேஷ்
லைன் புரடியூசர் : வித்யா சிவலெங்கா
இணை-தயாரிப்பு : சிண்டா கோபாலகிருஷ்ணா ரெட்டி
இயக்கம் : ஹரி – ஹரீஷ்
தயாரிப்பு : சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.
பேனர் : Sridevi Movies

Samantha’s new pan indian film will release for independance day

JUST IN ராஷ்மிகா பர்த்டே ஸ்பெஷலாக ‘தளபதி 66’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்

JUST IN ராஷ்மிகா பர்த்டே ஸ்பெஷலாக ‘தளபதி 66’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

‘பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படம் இது. தற்காலிக பெயராக ‘தளபதி66’ என வைத்துள்ளனர்.

இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 முதல் தொடங்க உள்ளது.

தடாலடி வியாபாரத்தில் ‘தளபதி 66’.. வியப்பில் விஜய் ரசிகர்கள்..; வெல்லுமா ஜீ.?

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக தெலுங்கில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஏப்ரல் 5 ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் இந்த அறிவிப்பை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக படக்குழு அறிவித்துள்ளது.

‘அனிமல்’ என்ற பாலிவுட் படத்தில் ராஷ்மிகா கமிட்டானதால் தளபதி 66 படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை எனவும் கூறப்பட்டது.

தற்போது முதன்முதலாக விஜய்யுடன் ராஷ்மிகா ஜோடியாக இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஏற்கனவே தமிழில் கார்த்தி உடன் ‘சுல்தான்’ படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rashmika Mandanna joins Vijay for Thalapathy 66

சுனைனா நடிக்கும் படத்திற்கு தயாரிப்பாளரே இசையமைப்பாளராக மாறினார்

சுனைனா நடிக்கும் படத்திற்கு தயாரிப்பாளரே இசையமைப்பாளராக மாறினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரெஜினா’ படத் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர் பேசியதாவது..

நான் ஒரு தொழிலதிபர். திரைப்படம் என்பது என்னுடைய புது முயற்சி. ஒன்றரை வருடத்திற்கு முன்பு எஸ்என் ( SN youtube ) என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்து சுயாதீனப் பாடல்களைப் பதிவேற்றி வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனது நண்பரும், இப்படத்தின் இயக்குனருமான டோமின் டி சில்வா இப்படத்தின் கதையை எனக்கு கூறினார். அப்போது தான் இந்த புதிய முயற்சியில் இறங்கலாம் என்று தோன்றியது.

எனக்கு என்னுடைய இசைத்திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வேண்டும், அதைவிட ஒரு நல்ல கதையும் வேண்டும். இதற்கான சந்தர்ப்பம் வந்ததால் இப்படம் உருவாகியது.

ஆனால், இசையை நான் முறைப்படி கற்றுக் கொள்ளவில்லை.

ரெஜினா படத்தில் ‘சூறாவளி’ எனத் தொடங்கும் பாடலின் டியூனை நான் சுயாதீனப் பாடலுக்காக சேமித்து வைத்திருந்தேன்.

அப்பாடல் ஒரு அம்மாவும், மனநிலை குன்றிய பெண்ணிற்குமான பாடலாக வைத்திருந்தேன். இந்த இசையைக் கேட்டதும் இயக்குநர் இந்த படத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

முதலில் இந்த கதை வந்தவுடன் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்று பார்த்தபோது, அப்பாவியான முகமும் இருக்க வேண்டும், அதிலிருந்து தன்னை முழுமையாக மாற்றி போராடக் கூடிய விதமாகவும் இருக்க வேண்டும்.

அதற்கு சுனைனா பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். அப்பாவித்தனம் அவர் முகத்தில் நிலைத்து இருக்கும்.

சுனைனாவுடன் இப்படத்தில் நிவாஸ் ஆதித்யன் வில்லனாக நடிக்கிறார். அனந்த் நாக் சுனைனாவின் கணவராக நடிக்கிறார். சண்டைப் பயிற்சி இயக்குனர் தீனாவும் நடிக்கிறார்.

இப்படம் பழிவாங்கும் திரில்லர் படமாக இருக்கும். சராசரியான குடும்பப் பெண் காணாமல் போன கணவனைத் தேடும் கதை தான் இப்படம். பணம் பலம், ஆள் பலம் இப்படி எந்த ஒரு உறுதுணையும் இல்லாமல் எப்படி சாதிக்கிறார் என்பது இப்படத்தின் கதை.

இப்படத்தில் பல திருப்பங்கள் இருக்கும். மற்றும் மியூசிக் திரில்லராகவும் இருக்கும். இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் விறுவிறுப்பாக இருக்கும்

பொள்ளாச்சியில் ஆரம்பித்து கேரளாவின் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இன்னும் 4 அல்லது 5 தினங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும்.

இயக்குநர் முதலில் என்னிடம் கூறும்போது பாடல்கள் தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். கதையோடு பயணிக்கும் வகையில் தான் பாடல்கள் இருக்கும். 5 பாடல்களும் 5 விதங்களில் இருக்கும். ஆனால், கதைக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.

தமிழில் வந்தனா சீனிவாசன், கல்பனா, சின்மயி போன்றோர் பாடியிருக்கிறார்கள். மலையாளத்தில் ரம்யா நம்பீசன், பாடல்கள் யுகபாரதி எழுதியிருக்கிறார்.

மலையாளத்தில் ஹரிநாகேஷ் எழுதியிருக்கிறார்.

இந்த தயாரிப்பு நிறுவனம் இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து நிறைய படங்கள் தயாரிக்கும்.

இயக்குநர் தொழில்நுட்பத்தில் திறமையானவர். அவர் கூறியதால் சுனைனாவை தேர்ந்தெடுத்தோம். அவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். இவருடன் தீனா நடித்திருக்கிறார்.

கணவன், மனைவிக்குள் இருக்கும் ஆபாசமில்லாத அழகான காதலை பதிவு செய்யும் விதமாக இப்படம் இருக்கும். மேலும், இப்படம் யதார்த்தமான படம். ஒரு சராசரியான பெண்ணால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே வைத்து எடுத்திருக்கிறோம்.

இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஓடிடி-யில் வெளியிடுவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும்.

இவ்வாறு ரெஜினா படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர் கூறினார்.

.பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர்.

பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார்.
pro: ஜான்சன்.

Sunainaa to headline female-centric movie “Regina”

More Articles
Follows