‘சூப்பர் ஸ்டார்’ படத்தால் ‘வெந்து தணிந்தது காடு’ பட ரிலீசுக்கு சிக்கல்.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதமேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எனவே 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில் “வெந்து தணிந்தது காடு” படத்திற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.

சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க ரூ.2.40 கோடி முன்பணம் பெற்று ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதே கதையை வைத்து “வெந்து தணிந்தது காடு” படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆன் இன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

எனவே வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்கிறோம் என இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் உத்திரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது கோர்ட்.

இது தொடர்பான விசாரணை வரும் செப்.21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கோர்ட் தெரிவித்துள்ளது.

Vendhu Thanindhathu Kaadu movie release issue

தளபதிக்கு வயசு ரிவர்ஸ் ஆகுதே..; விஜய் – ராஷ்மிகா எடுத்த செல்ஃபி வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் தமன் இசையில் விஜய் நடித்து வரும் படம் ‘வாரிசு’

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உட்பட பலர் நடிக்க தில் ராஜு தயாரித்து வருகிறார்.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் குடும்ப செண்டிமெண்ட் படமாக வளர்ந்து வருகிறது.

அடுத்த அக்டோபர் மாதத்திற்குள் இப்படத்தின் சூட்டிங் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘வாரிசு’ பட சூட்டிங்கின் போது விஜய் ராஷ்மிகா எடுத்த செல்ஃபி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் விஜய் இளமையாக இருப்பதாகவும் அவருக்கு மட்டும் வயசு குறைந்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரூ. 200 கோடியை வாரி சுருட்டிய விஜய்யின் ‘வாரிசு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் தமன் இசையில் விஜய் நடித்து வரும் படம் ‘வாரிசு’.

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உட்பட பலர் நடிக்க தில் ராஜு தயாரித்து வருகிறார்.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் குடும்ப செண்டிமெண்ட் படமாக வளர்ந்து வருகிறது.

அடுத்த அக்டோபர் மாதத்திற்குள் இப்படத்தின் சூட்டிங் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் வியாபாரம் பட குழுவினரை திக்கு முக்காடு செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

சூட்டிங் முடிவடையும் முன்பே டிவி மற்றும் டிஜிட்டல் உரிமம் முடிக்கப்பட்டுள்ளதாம்.

டிவி உரிமை ரூ.55 கோடிக்கும் ஆடியோ உரிமை ரூ.10 கோடிக்கும் டிஜிட்டல் உரிமை ரூ.63 கோடிக்கும் ஹிந்தி டப்பிங் உரிமை ரூ.30 கோடிக்கும் வெளிநாட்டு உரிமம் ரூ.34 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆக மொத்தம் ரூ.200 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Vijays Varisu movie business updates

150+ தியேட்டர்களில் FDFS.. 600+ ரிலீஸ்.; அதிகாலை காட்சி வருபவர்களுக்கு கௌதம் மேனன் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக சிம்பு மற்றும் கௌதம் இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.

இந்த படம் இரு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் மட்டும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் அதிகாலை 4AM & 5AM காட்சிகள் கிட்டத்தட்ட 150 க்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.

மேலும் தமிழக முழுவதும் 600 தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது.

இந்த நிலையில் VTK ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் தெரிவித்துள்ளதாவது..

“VTK படத்தின் டிரைலரில் ஒரு மனநிலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதே மனநிலை திரையிலும் இருக்கும்.

நாங்கள் டிரைலரில் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. வெந்து தணிந்தது காடு படத்தை அதிகாலை பார்க்க வருபவர்கள் நன்றாக தூங்கி எழுந்து விட்டு வரவும்” என தெரிவித்துள்ளார்.

Gautam Menon talks about FSFS for VTK movie

சிம்பு.. உங்களோட ‘நானே வருவேன்’.; தனுஷ் – செல்வராகவன் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலந்தொட்டு இன்றுவரை இரு நடிகர்களை மையப்படுத்தியே ரசிகர்களின் மோதலும் படத்தின் வெற்றியும் தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 40 வருடங்களாக ரஜினி, கமல் போட்டி நிலவி வருகிறது.

தற்போது விஜய் – அஜித், சூர்யா – விக்ரம், தனுஷ் – சிம்பு ஆகியோரிடையே போட்டி நிலவு வருகிறது.

இந்த நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் இவர்களது ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இது போல மோதல்களை அடிக்கடி பார்த்து வருகின்றோம்.

இந்த நிலையில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தனிந்தது காடு பார்ட் 1’ என்ற படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இதே நாளில் தனுஷ் பட டீசரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’.

தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் தான் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 29 இல் இந்த படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

Simbus VTK release and Dhanushs Naane Varuven Teaser release updates

நன்றி மறவாமல் சூர்யா – கார்த்தி செய்த காரியத்தை பார்த்தீர்களா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12-ல் வெளியானது.

கிராமத்து செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்த படத்தை இயக்கியிருந்தார் முத்தையா.

இதில் கார்த்தி உடன் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்தப் படத்தின் வெற்றியை முன்னிட்டு சூர்யா, கார்த்தி, முத்தையா உள்ளிட்டோருக்கு விநியோகஸ்தர் சக்திவேலன் வைரக் காப்பு பரிசளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து அவர்களது புகைப்படங்களை போஸ்டர்களில் படக்குழு வெளியிட்டுள்ளது.

Suriya Karthi thanks each and everyone of Viruman team

More Articles
Follows