168 படங்களில் பார்க்காத ரஜினியை பார்ப்பீங்க.; ‘ஜெயிலர்’ நடிகர் தந்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கிய வருகிறார் நெல்சன்.

இதில் ரஜினியுடன் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கிசரஃப் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்து வரும் வசந்த் ரவி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ரஜினி பற்றி தெரிவித்துள்ளார்.

“ரஜினி சார் 168 படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். இதுவரை பார்க்காத ரஜினியை ‘ஜெயிலர்’ படத்தில் பார்க்கப் போகிறீர்கள். ‘ஜெயிலர்’ படம் நிச்சயம் பட்டையை கிளப்பும்..” என தெரிவித்துள்ளார்.

Vasanth Ravi talks about Rajinikanth’s jailer

கமல்ஹாசனுடன் இணையும் நயன்தாரா.. அதுவும் இந்த இயக்குனர் படத்திலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

36 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் மணி ரத்னமும் மீண்டும் இணைகிறார்கள். ஏஆர் ரஹ்மான் இசையமைக்க KH234 படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

முன்னதாக, KH 234 இன் தயாரிப்பாளர்கள் த்ரிஷாவை கதாநாயகிக்காக குறிவைத்ததாகக் கூறப்பட்டது.

தற்போது, ​​நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

த்ரிஷா மாற்றப்படுகிறாரா அல்லது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இரு நடிகைகளும் நடிப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இப்படம் 2024ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal Haasan and Nayanthara combo for the first time?

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு.; இதான் காரணமா? என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் சினிமா ரசிகர்கள் தான். அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் இவர்களின் வெற்றிக்கு பெரிய காரணமாக கருதப்படுபவர்கள் ரசிகர்கள் தான்.

தங்களின் அளவற்ற அன்பால் நடிகர்களை தூக்கி பிடித்து கொண்டாடி வருகின்றனர்.

எனவே பல நடிகர்களும் தங்கள் ரசிகர்களை அடிக்கடி சந்திப்பது வழக்கம்.

நடிகர் ரஜினிகாந்த் பலமுறை தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அதுபோல நடிகர் விஜய் அடிக்கடி தன் ரசிகர்களை சந்திப்பார். மேலும் அவர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கிய பின் அடிக்கடி அதன் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

அதன் பின்னர் தன்னுடைய ரசிகர்களுக்கு அவர் பிரியாணி விருந்து வழங்கியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உள்ளார். மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கு தன் கையாலே பிரியாணி பரிமாறினார். அந்த வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு நடித்து வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தை ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடினர். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிம்பு அவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படத்தின் வெளியீட்டின் போது “விழா பணிகளை பாதுகாப்பாக கையாளுங்கள்.. ரசிகர் மன்ற பணிகளை விரிவுப்படுத்துங்கள்.. சமூக பணிகளை செய்து மக்களின் நன்மதிப்பை பெறுங்கள்” என்பது போல ஆலோசனைகளை சிம்பு கூறியதாகவும் தெரியவந்துள்ளது

STR served Briyani to his fans; ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு Pathu Thala Silambarasan l filmistreet 👌🏻

https://youtube.com/shorts/e7QFPlKNatg?feature=share

Actor Simbu served Briyani to his fans

JUST IN நயன்தாரா – ஜோதிகா போல நடிப்பீர்களா.? ‘விருமாண்டி 2 எப்போ.? FILMISTREET கேள்விக்கு அபிராமி பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’.

வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் இன்று ஏப்ரல் 18 தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ள விருமாண்டி புகழ் நடிகை அபிராமி பத்திரிகையாளர்களை தனியாக சந்தித்தார்.

அப்போது.. “விருமாண்டி பார்ட் 2 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு.. “விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கேரக்டர் இறந்து விட்டது அவர் செத்துப் போயிட்ட. பின்பு எப்படி விருமாண்டி 2 வரும் ).

ஒரு வேளை அதற்கான திரைக்கதை அமைத்து கமல் என்னை அழைத்து கண்டிப்பாக நடிப்பேன். மறுக்க மாட்டேன் என்றார். அதன் பிறகு FILMISTREET சார்பில் ஜோதிகா – நயன்தாரா போல FEMALE ORIENTED படங்கள் நடிப்பீர்களா? என கேட்கப்பட்டது.

ஆண்கள் (ஹீரோக்கள்) நடித்தால் அதை யாரும் FEMALE ORIENTED என்று சொல்ல மாட்டார்கள். பிறகு பெண்கள் நடித்தால் மட்டும் FEMALE ORIENTED என்கிறீர்கள்.?

கதை அமைந்தால் நடிப்பேன்” என்றார்.

Abhirami answers FILMISTREET question when ‘Virumandi 2

முதன்முறையாக இணையும் ஜூனியர் என்டிஆர் & சைஃப் அலிகான்.; ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார்.

மேலும் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

’NTR 30’ திரைப்படம் தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தைக் கொடுக்கும் என்பது உறுதி.

’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் நடிகர் சைஃப் அலிகானை அதிகாரப்பூர்வமாக தங்கள் அணிக்கு வரவேற்று உள்ளனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த பூஜைக்குப் பிறகு ’NTR 30’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து ‘என்டிஆர் 30’ படத்தைத் தயாரிக்கிறது மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் படத்தை வழங்குகிறார்.

மேலும், ஏப்ரல் 5, 2024 அன்று படம் பான் இந்திய அளவில் வெளியாகிறது.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

வழங்குபவர்: நந்தமுரி கல்யாண் ராம்,
பேனர்கள்: என்டிஆர் ஆர்ட்ஸ், யுவ சுதா ஆர்ட்ஸ்,
தயாரிப்பாளர்கள்: ஹரிகிருஷ்ணா.கே, மிக்கிலினேனி சுதாகர்,
எழுதி இயக்குபவர்: கொரட்டாலா சிவா,
இசை: அனிருத் ரவிச்சந்திரன்,
ஒளிப்பதிவு: ரத்னவேலு,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சாபு சிரில்,
VFX: யுகந்தர்

Saif Ali Khan joins cast of Jr NTR’s next movie

38 வருடங்கள்.. 15 மொழிகள்.. 25000+ பாடல்கள்.; பாடகர் மனோ டாக்டரானார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

80s மற்றும் 90s காலகட்டங்களில் பாடகர், நடிகர், டப்பிங் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் மனோ.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துலு, அசாமிஸ் என 15 இந்திய மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் தெலுங்கு படங்களுக்கு மனோ தான் டப்பிங் செய்வார்.

இளையராஜாவின் மனம் கவர்ந்த பின்னணி பாடகர் ஆகவும் இருந்து வந்தார் மனோ.

இளையராஜா இசையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், மனோ இசைத்துறையில் 38 ஆண்டுகள் நிறைவு செய்தார் மற்றும் ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை பாடகர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அவர் எழுதிய படத்தைப் பதிவிட்டு, “ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இந்திய இசைத் துறையில் 38 வருடங்கள் மற்றும் 15 இந்திய மொழிகளில் 25,000 க்கும் மேற்பட்ட பாடல்களை முடித்ததற்காக ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. என்னை ஆதரித்த அனைவருக்கும், எப்பொழுதும் பணிவும், மரியாதையும், மிகுந்த அன்பும்.” என்றார்.

மேலும், மனோ முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நிகழ்ச்சியில் பேசும் போது, ​​தனக்கு இசையில் ஆர்வம் இருப்பதாகவும், 14 வயதில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாத்துக்கு உதவி செய்ததாகவும் மனோ தெரிவித்தார். மனோ டப்பிங் கலைஞராகவும் இருந்து வருகிறார்.

Singer Mano honoured with a doctorate

More Articles
Follows