JUST IN ‘வாரிசு’ படத்தை முன்பதிவில் முந்தியது ‘துணிவு’.; முதல்நாள் வசூலிலும் முன்னிலை.!

JUST IN ‘வாரிசு’ படத்தை முன்பதிவில் முந்தியது ‘துணிவு’.; முதல்நாள் வசூலிலும் முன்னிலை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜனவரி 11ஆம் தேதி துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

ஜனவரி 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கும் அதிகாலை காட்சிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் துணிவு படத்திற்கு நாளை ஒரு மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாரிசு படத்தை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ‘துணிவு’ படம் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் ‘துணிவு படத்திற்கு அதிக காட்சிகள் (1 மணி காட்சியை சேர்த்து) ஒதுக்கப்பட்டுள்ளதால் ‘வாரிசு’ படத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளதாம்.

எனவே முதல் நாளில் வாரிசு படத்தை விட துணிவு படம் தான் வசூலில் முந்தும் எனவும் கூறப்படுகிறது.

‘Varisu’ was preceded by ‘Thunivu’ in bookings and collections too

JUST IN இதெல்லாம் செய்யவே கூடாது.; விஜய் – அஜித் ரசிகர்களுக்கு ஐகோர்ட் & போலீஸ் எச்சரிக்கை

JUST IN இதெல்லாம் செய்யவே கூடாது.; விஜய் – அஜித் ரசிகர்களுக்கு ஐகோர்ட் & போலீஸ் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜனவரி 11ஆம் தேதி துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்கள் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை வரவேற்க அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

எனவே தியேட்டர் எங்கும்.. வீதி எங்கும்.. முக்கியமான பல பகுதிகளில் பேனர்கள் கட் அவுட்டுகள் வைத்து திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

மேலும் நாளை நள்ளிரவு அதிகாலை முதல் காட்சி துவங்கும் போது பட்டாசுகள் வெடித்து மேல தாளங்களுடன் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாட ரெடியாகி வருகின்றனர்.

இதனிடையில் பால் முகவர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அது போல பைரசி மூலம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் படங்களை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் காவல்துறையும் விஜய் அஜித் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவர்களின் அறிக்கையில்… ” வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகும் திரையரங்கிற்கு பட்டாசுகளை கொண்டு வரக்கூடாது.

திரையரங்கில் உள்ள நாற்காலிகளை சேதப்படுத்தினால் அதற்கு ரசிகர் மன்ற மன்றங்கள் & நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேண்ட் வாத்தியங்கள் மேளத்தாளங்கள் கொண்டு வரக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையெல்லாம் ரசிகர்கள் செய்வார்களா .?

This should not be done at all.; Court & Police warning to Vijay-Ajith fans

JUST IN இதான் நீங்க தளபதி… மிக்க நன்றி நண்பா.; Sharukhkhan Thanks Vijay

JUST IN இதான் நீங்க தளபதி… மிக்க நன்றி நண்பா.; Sharukhkhan Thanks Vijay

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து ஜோடியாக நடித்துள்ள ஹிந்திப் படம் ‘பதான்’.

இதில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

இதில் காவி நிற நீச்சல் உடையணிந்து தீபிகா கவர்ச்சியாக ஆடியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாடலின் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

‘பதான்’ தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து நடிகர் விஜய்க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.

அவரின் பதிவில்.. இந்த எளிமைக்கு தான் நீங்க தளபதி… மிக்க நன்றி நண்பா.. ஒரு இனிய விருந்தில் விரைவில் சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார்

Wishing @iamsrk sir and the team all the best for #Pathaan

Here is the trailer https://t.co/LLPfa6LR3r

#PathaanTrailer

Thank you my friend @actorvijay You are Thalapathy for this humble reason, let’s meet for delicious feast soon.
Mikka Nandri Nanba! Idhanala Dhaan Neenga Thalapathy koodiya viraivil oru arumaiyana virunthil santhipom.
Love you..

என ஷாருக்கான் பதிவிட்டுள்ளார்.

Sharukhkhan Thanked Vijay for sharing pathaan trailer

யார் சூப்பர் ஸ்டார்.? விஜய்க்காக அஜித் படத்தில் நடிக்க மறுத்த ஷாம் பேட்டி.!

யார் சூப்பர் ஸ்டார்.? விஜய்க்காக அஜித் படத்தில் நடிக்க மறுத்த ஷாம் பேட்டி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் நாளை ஜனவரி 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இதில் விஜய்க்கு அண்ணனாக ஷாம் நடித்துள்ளார்.

அவர் தனது சமீபத்திய பேட்டியில் தன் அனுபவம் குறித்து பேசி உள்ளார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.. அந்த பதிலில்..

“ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் பல சாதனைகளை சினிமாவில் படைத்துள்ளனர். ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் யாரையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவர் சூப்பர் ஸ்டார்.

விஜய் அண்ணனுக்கு போட்டியாக அஜித் சாரை கூறலாம். மாறாக ரஜினியுடன் ஒப்பிடக்கூடாது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து..

‘வாரிசு’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின் அதற்கான அட்வான்ஸ் தொகையை வாங்கிய பின் ‘துணிவு’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது.

ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் சில காலம் அவகாசம் கேட்டேன். ஆனால் வினோத் மறுத்துவிட்டார்.. ஷூட்டிங் உடனே தொடங்க வேண்டும் என்பதால் அதில் நடிக்க முடியாமல் போனது.

மீண்டும் வேறு ஒரு படத்தில் இணையலாம் என வினோத் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த பேட்டியில் ஷாம் தெரிவித்துள்ளார்.

Shaam interview who refused to act in Ajith’s film for Vijay

அஜித் பட 900 டிக்கெட்க்ஸ் மற்றும் பணம் திருட்டு.; துணிச்சலான ரசிகர்கள்தான் போலயே..

அஜித் பட 900 டிக்கெட்க்ஸ் மற்றும் பணம் திருட்டு.; துணிச்சலான ரசிகர்கள்தான் போலயே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி மிக பிரம்மாண்டமாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் ‘துணிவு’.

இந்த படம் நாளை ஜனவரி 11ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு குறைந்த டிக்கெட் விலையாக 1000 முதல் 3000 வரை ஒரு டிக்கெட் விற்கப்படுகிறது.

இந்த சினிமா டிக்கெட் கிடைக்க ரசிகர்கள் முண்டியடித்து ஆன்லைனிலும் நேரிலும் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் பகுதியில் காகிதப்பட்டறையில் அஜித் ரசிகர் மன்ற அலுவலகத்தில் துணிவு பட 900 முன்பதிவு டிக்கெட்டுகள் திருடப்பட்டு விட்டது.

மேலும் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான பணம் சுமார் ரூ.16000 திருடப்பட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அஜித் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்த டிக்கெட்டுகளை அஜித் ரசிகர்களே திருடி இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Ajith film 900 tickets and money stolen

SHOCKING NEWS For Fans.; துணிவு வாரிசு சிறப்பு காட்சிகள் ரத்து.; அரசு உத்தரவு

SHOCKING NEWS For Fans.; துணிவு வாரிசு சிறப்பு காட்சிகள் ரத்து.; அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ளன.

இரு நடிகர்களும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்பதால் இரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டிக்கெட் ரூபாய் 1000 முதல் 2000 – 3000 வரை விற்கப்பட்டு வருகின்றது.

இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

நாளை நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும் அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படம் முதல் காட்சிகளாக திரையிடப்பட உள்ளன.

இந்த நிலையில் சற்று முன் அரசு தரப்பில் ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி துணிவு & வாரிசு படங்களுக்கான அதிகாலை காட்சிகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் நாளை ஜனவரி 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Varisu Thunivu special shows cancelled .. government orders

More Articles
Follows