தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வம்சி இயக்கத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ள படம் ‘வாரிசு’.
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
இதனிடையில் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாட, பாடலை விவேக் எழுதியிருந்தார்.
இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இது மொச்ச கொட்ட பல்லழகி.. என்ற பாடலின் டியூன் எனவும் சர்ச்சை கிளம்பியது.
இதையடுத்து இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் வெளியானது. இதனை நடிகர் சிலம்பரசன் பாட விவேக் பாடலை எழுதியிருந்தார்.
இதனையடுத்து நேரடியாக இசை வெளியீட்டு விழா நடைபெறும். அப்போது மற்ற பாடல்கள் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது மூன்றாவது பாடல் வெளியீடு குறித்து அப்டேட் கொடுத்துள்ளனர் படக் குழுவினர்.
டிசம்பர் 20 நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இட்ஸ் ஃபார் யூ அம்மா’ எனவும், ‘சோல் ஆஃப் வாரிசு’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை விவேக் எழுத கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார்.
டிசம்பர் 24ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.்இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
