தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஹாட் ஸ்டார் டிஸ்னி ஓடிடி தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை சுரேஷ், சுஜா, ஷாரிக் மற்றும் அபினய் ஆகிய 4 பேர் எவிக்சன் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையில் விக்ரம் பட சூட்டிங் பிசியாக இருப்பதால் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார் கமல்ஹாசன்.
இதனையடுத்து நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்குகிறார் என்ற செய்தியை நம் filmistreet தளத்தில் பார்த்தோம். தற்போது சிம்புவின் புரோமோவும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பிராங்க் டாஸ்க்கில் பாலாஜி வனிதாவை கடுப்பேத்தியத்தால் இது நடந்து இருக்கலாம்.
இத்துடன் அரக்கர்கள் மற்றும் தேவதைகள் டாஸ்க்கில் கலந்து கொள்ள முடியாது எனவும் வனிதா கூறியிருந்தார்.
தனக்கு மன உளைச்சல் இருப்பதால் தன்னால் இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர முடியாது என வனிதா தெரிவித்துள்ளார்
ஆனால்.. நீங்கள் நினைத்த போதெல்லாம் வெளியேற முடியாது, அக்ரிமென்ட் இருக்கிறது என பிக்பாஸ் எச்சரித்த போதும் “அக்ரிமென்ட்டை எல்லாம் என் வக்கீல் பார்த்துக்கொள்வார் என்று வனிதா சொன்னதாக கூறப்படுகிறது.
Vanitha Vijayakumar quits BB ultimate house
