தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இதற்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே எப்போதும் உள்ளது.
இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாக உள்ளது.
இந்த லோகோவை கமலுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பிக்பாஸ் 5 ஃபைனல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரோமோஷன் தொடங்கியுள்ளது.
இது ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 16 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
கவிஞரும் நடிகருமான சிநேகனை முதல் போட்டியாளராக அறிவித்துள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட்டின் 2வது போட்டியாளராக நடிகை ஜூலி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த போட்டியாளராக வனிதா விஜயகுமார் பங்கேற்கவுள்ளார்.
இது தொடர்பான புரோமோவில் ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. சம்பவம் இனிமே தான் ஆரம்பம்’ என கெத்தாக ரஜினியின் கபாலி பட பன்ச் டயலாக் பேசி வருகிறார் வனிதா.
இதுவரை 3 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று ஜனவரி 27 மாலை 6 மணிக்கு 4வது போட்டியாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
இந்த புரோமோவில் டிவி நடிகை மணிமேகலை வருகிறார்.. 4வது போட்டியாளர் யாராக இருக்கும்? என கேட்கிறார்.
Vanitha Vijayakumar joins Bigg Boss Ultimate
