தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் பிரமாண்டமான படம் ‘வலிமை’.
அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான வலிமை மோசன் போஸ்டரில் பின்னணி இசையை தெறிக்கவிட்டுருந்தார். இது யூடிப்பில் சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்து விட்ட போதிலும் வெளிநாட்டில் சில காட்சிகளை படமாக்க விரைவில் ‘வலிமை’ படக்குழுவினர் ஃபாரீன் பறக்க உள்ளனர்.
அந்த பணிகளை முடித்துவிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 2 இரவு 9 – 10 மணிக்குள் சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிடவுள்ளனர்.
Valimai single release update is here
