கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா.? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான்.

வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.

காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா.? .

ஒரே ஒரு இயக்குனர் ஒரே ஒரு சிகரம் அது கே பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது.’

மேலும், சிவக்குமார் பேசும்போது இயக்குனர் கே பாலசந்தர் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை ஒவ்வொன்றாக கூறினார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு புது அனுபவமாக அமைந்தது.

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, ” ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது .

என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது .
அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .

அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார் . பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது .

திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்.

புன்னைகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர் .

பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் ” என்றார்.

இவ்விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ் தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குனர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குனர் சுரேஷ் , எம் எஸ் பாஸ்கர், ராஜேஷ், ஆர் கே செல்வமணி, ஆர் பி உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குனர் அஸ்லாம், ஐந்து கோவிலன், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை தெளிவுபடுத்திய இயக்குனர் சஞ்சய் கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராக பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இரு தரப்பிலும் எங்களால் முடிந்தவரை முயற்சித்த போதிலும், நாங்கள் இறுதியாக ஒரு பரஸ்பர முடிவை எடுத்தோம். இப்போது, பாலிவுட் நடிகை திகங்கனா சூரியவன்ஷி அவருக்கு பதிலாக நடிக்கிறார், மேலும் படப்பிடிப்பு மீண்டும் முழுவீச்சில் துவங்கும்” என்றார்.

திகங்கனாவை இந்த படத்தில் நடிக்க வைக்கும் யோசனையை தூண்டிய முக்கிய காரணத்தை பகிர்ந்து கொள்ளும் சஞ்சய் பாரதி கூறும்போது, “அவரது சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ஹிப்பி படத்தின் டிரைலரை பார்த்தேன். அவரின் திரை இருப்பு மற்றும் கதாபாத்திரத்தை பெரும் தாக்கத்துடன் கொடுக்க, அவர்
முன்னெடுக்க முயற்சிக்கும் விதத்தில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். விரைவில், நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதையை விவரித்தேன், அவரும் கதையால் ஈர்க்கப்பட்டார்” என்றார்.

இந்த வாரம் முதல் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பில் திகங்கனா சூர்யவன்ஷி கலந்து கொள்வதையும் உறுதிபடுத்துகிறார் இயக்குனர் சஞ்சய்.

தனுசு ராசி நேயர்களே படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படம். ஜோதிடத்தை நம்பும் நாயகன் ஹரிஷ் கல்யாண், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் அதை வைத்தே எடுக்கிறார் என்பதே கதை

சினிமா படிக்கனுமா? மத்திய-மாநில அரசுகள் நடத்தும் இலவச பயிற்சி இதோ.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தினம் தினம் சென்னை வருகின்றனர்.

இதில் ஒரு சிலர் குறும்படங்களை இயக்குகிறார்கள்.

பலர் தனியார் திரைப்பட கல்லூரிகளில் சேர்ந்து லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகமும், மத்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் இணைந்து ஒரு மாத கால இலவச பயிற்சி அளித்து வருகிறது.

இந்த பயிற்சியில் டிஜிட்டல் வீடியோ கிராபி, மல்டி மீடியா, அனிமேஷன், ஆடியோ என்ஜினீயரிங், ஆவிட் எடிட்டிங், பைனல் கட் ஆகிய பிரிவுகளில் இந்த பயிற்சியை அளிக்கிறது.

கல்வி தகுதி குறைந்த பட்சம் 10ம் வகுப்பு வரை வேண்டும்.

இதில் 18 வயது முதல், 45 வரையிலானவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 044-2819 1203 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

விரைவில் லண்டன் பறக்கும் தனுஷ் & கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கும் அசுரன் படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இப்படத்திற்கு பிறகு பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் அல் பசினோ நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது.

இதன் சூட்டிங் முழுக்க லண்டனில் நடைபெற இருப்பதால் இந்த வருட இறுதியில் லண்டன் செல்லவுள்ளனர் படக்குழு.

வேறு வழியில்லாமல் தானே தயாரித்து நடிக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ‘ரெமோ, வேலைக்காரன், சீமராஜா’ ஆகிய படங்களை அவரின் நெருங்கிய நண்பர் 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் சார்பாக தயாரித்தார் ஆர்.டி.ராஜா.

ரெமோ படம் நல்ல வசூலை அள்ளியது.

மற்ற இரு படங்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும் போதிய லாபத்தை தரவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து நிவின் பாலியுடன் ஒரு படம், அருவி பட இயக்குனருடன் ஒரு படம் என அறிவித்தார் ஆர். டி. ராஜா.

மேலும் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ஏஆர்.ரகுமான் இசையில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தை தயாரிப்பதாகவும் அறிவித்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் ராஜா கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியதால் படம் அப்படியே நிறுத்தப்பட்டது.

மேலும் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தையும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய இரு படங்களை தயாரித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதில் கனா படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அந்தப்படம் வெற்றி பெற்றது.

தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை சிவாவே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளை போற்ற ரூ. 1.5 லட்சத்துடன் உழவன் விருதுகள்.. – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவை தவிர சமூகத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

கல்விக்காக அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார் சூர்யா.

உழவன் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார் கார்த்தி.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்திருந்தார் கார்த்தி.

இந்த நிலையில் விவசாயத்தை மையப்படுத்தி புதிய கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு போட்டிகளை அறிவித்துள்ளார் கார்த்தி.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது…

“விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும். மேலும் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு போட்டிகளை அறிவித்துள்ளோம்.

நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று சிறந்த கருவிகளுக்கு மொத்தம் ரூ1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார் கார்த்தி.

More Articles
Follows