மது : மனைவிக்குச் சக்களத்தி… சாவுக்கு ஒத்திகை…; – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கினால் மக்கள் அவதிப்பட்டு இருக்கும் நிலையில் மே 7 முதல் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அங்கு குடிமகன்கள் கூட்டம் கூடும் எனவும் இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் எனவும் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார்.

மது என்பது –
அரசுக்கு வரவு;
அருந்துவோர் செலவு.

மனைவிக்குச் சக்களத்தி;
மானத்தின் சத்ரு.

சந்தோஷக் குத்தகை;
சாவின் ஒத்திகை.

ஆனால்,
என்ன பண்ணும்
என் தமிழ் மதுக்கடைகளின்
நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?
#TASMAC #Tamil #TamilNadu #Corona

” என வைரமுத்து கூறியுள்ளார்.

Vairamuthu condemns TN Govt for Tasmac opening

பசி என்ற நோய்க்கு தடுப்பூசி வேண்டும் என விஜய்சேதுபதி வேண்டுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர்.

ஏழைகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கொரோனா கொடுமை ஒரு பக்கம் என்றால் பசியின் கொடுமை மறு பக்கம் இவர்கள் வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில் இந்த கொரோனா நோயை விட பசி என்ற கொடிய நோயாக உள்ளது என தெரிவித்துள்ளார் விஜய்சேதுபதி.

அவர் கூறியுள்ளதாவது.. ”பசி என்றொரு நோய் இருக்கு. அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும். ஓ மை கடவுளே” என தெரிவித்துள்ளார்.

Hungry must have vaccine says Vijay Sethupathi

மது வாங்கும் வரிசையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு; மனீஷாவின் மனக் கணக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா யாதவ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களுரூவை சேர்ந்தவர்.

கடந்த மே 4ஆம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

முதல் நாளில் மட்டும் ரூ 45 கோடி மது விற்பனையானதாக தகவல்கள் தெரிவித்தன.

பெங்களுரூவில் உள்ள ஒயின் ஷாப் வாசலில் ஆண்களும், பெண்களும் தனி வரிசையில் நின்று மது வாங்கி சென்ற படங்களை பார்த்திருப்பீர்கள்.

இந்த படத்தை, ட்விட்டரில் பகிர்ந்து மனிஷா கூறியதாவது..

‘இதற்கு முன், பெண்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்பட்டதா என்பது தெரியாது.

ஆனால், இங்கு சரியாக பயன்படுத்தியுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

https://twitter.com/ManishaYadavS/status/1257296318768152578

Actress Manisha talks about Ladies queue for buying Alcohol

 

பெப்சிக்கு நிதி குவியுது.; ஆனா 15000 தியேட்டர் ஊழியர்களை கண்டுக்கல.. விநியோகஸ்தர் விரக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளது.

இதில் கோடிகளில் புரளும் சினிமாவும் அடங்கும்.

எனவே தங்கள் துறை சார்ந்தவர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர்.

ஆனால் முற்றிலும் வேலையிழந்துள்ள தியேட்டர் ஊழியர்களை யாரும் கண்டுக் கொள்ளவில்லை என நெல்லை, துாத்துக்குடி மாவட்ட வினியோகஸ்தர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

”பெப்சி உறுப்பினர்களில் சிலர் வசதியாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கு தான் லட்சம், கோடி என நிதிகள் குவிகிறது.

அவர்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், ‘பெப்சி’ அமைப்பினர் வேலை நிறுத்தம் செய்வர். அதனாலேயே அவர்களுக்கு நிதி கிடைத்து விடுகிறது.

ஆனால் தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

வேலையிழந்து நிற்கும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

Distributor talks about FEFSI and theatres staffs

அந்த காட்சியில நடிக்க விஜய் எப்படிதான் ஒத்துக்கிட்டாரோ..? புலம்பும் ரவீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நாம் ரசிக்கும் பல ஹீரோயின்களுக்கு குரல் வளம் அழகாக இருப்பதில்லை. சிலருக்கு தமிழ் மொழியே தெரியாது.

அவர்களுக்கு டப்பிங் கொடுத்து நம்மை ரசிக்க வைப்பவர்களில் ஒருவர் டப்பிங் கலைஞர் ரவீனா ரவி.

இவர் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

இவர் ஹீரோயினாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் கூட மாளவிகா மோகனனுக்கு ரவீனா தான் டப்பிங் பேசியிருக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் மாஸ்டர் பட குறித்து மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ரவீனா.

மாஸ்டர் படம் பார்த்தேன். வழக்கமான விஜய் படம் போல் மாஸாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.

ஆனால் சில காட்சிகளை பார்த்தபோது, விஜய் எப்படி தான் இதில் நடிக்க ஒத்துக்கிட்டார்னு தெரியலையே என்று நினைத்தேன்” என தெரிவித்துள்ளார் ரவீனா.

Dubbing Artist Raveena talks about Master and Vijays Character

நடிகை பிரகதிக்கு பாலியல் பிரச்சினை கொடுத்த காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி.

விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் பிரகதி கொடுத்துள்ள அண்மை பேட்டியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒரு காமெடியனை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில்…

காமெடி நடிகர் ஒருவர் நன்றாக பழகினார். ஆனால் நாளடைவில் அவரது பேச்சும் செயலும் சரியாக இல்லை.

எனவே அவரை கேரவனுக்குள் அழைத்து பேசினேன்.

தவறான முறையில் என்னை அணுக சிக்னல் கொடுத்தேனா? அல்லது எனது உடல் மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா?

சூட்டிங்கில் திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக சொல்கிறேன் என்றேன்.

அதன் பிறகு அவர் என்னிடம் மோசமாக நடந்து கொள்ளவில்லை”. என பிரகதி தெரிவித்துள்ளார்.

அந்த காமெடியன் யாரோ? என்பது தெரியவில்லை.

Pragathi recalls Comedy Actors misbehavior with her

More Articles
Follows