‘நான் நேசிக்கும் ரஜினி பெருந்தன்மையானவர்’ – வைரமுத்து அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகை தாண்டியும் ரஜினி-வைரமுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆருக்கு பாடலாசிரியர் வாலி அமைந்தது போல் எனக்கு வைரமுத்து அமைந்திருக்கிறார் என ரஜினியே பல முறை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் கபாலி படம் தோல்வி என வைரமுத்து கூறியதாக சர்ச்சை கிளம்பியது. இதற்கு பதிலடி கொடுத்து தாணு பேட்டியளித்திருந்தார்.

தற்போது இது தொடர்பாக வைரமுத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது…

கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது.

அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன்.

கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும்.

கடவுளை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றபோது,

ஆண் – பெண் – உறவுகள் – இல்லறம் அன்பு – காதல் – கண்ணீர் – அரசியல் – கலை – அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தோல்வி இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன்.

நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன்.

கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.

என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை – நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது.

ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.

இந்தச் செய்தி வெளியாவதற்கு முன்பே திரு. ரஜினி சென்னைக்கு வந்த மறுநாள் அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.

அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாகப் பேசினார்.

எங்கள் நட்பு பெரியது; தயவு செய்து யாரும் இதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு  வைரமுத்து அதில் தெரிவித்துள்ளார்.

கபாலி குறித்தும், தன் உடல்நிலை குறித்தும் மக்களுக்கு ரஜினி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த இரண்டு மாதமாகவே ரஜினி நடித்த கபாலி படம் குறித்தும், ரஜினியின் உடல் நிலை குறித்தும் பரவலாக பேசப்பட்டது.

இது தொடர்பாக எந்த செய்தி வெளியானாலும் ரஜினி தரப்பில் இருந்து செய்திகள் வெளியானாலும் ரஜினிகாந்த் மௌனம் காத்து வந்தார்.

நேற்று முன்தினம் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அப்போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் எந்த பேட்டியும் கொடுக்காது விரைந்து சென்றார்.

இந்நிலையில், தற்போது சற்றுமுன் தன் உடல் நிலை குறித்தும், கபாலி வெற்றி குறித்தும் பொதுமக்களுக்கு தன் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.

அந்த கடிதங்களின் இரண்டு பக்கங்கள் இதோ…

 

 

கபாலி தோல்வியா.? வைரமுத்துக்கு பதிலடி கொடுத்த தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் ஒவ்வொரு படத்திலும் அவரது அறிமுக பாடல் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும்.

அதற்கு முக்கிய காரணம் வைரமுத்துவின் வரிகளும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் வளமும் என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆனால் அண்மையில் வெளியான கபாலி படத்தில் இந்த கூட்டணி இடம் பெறவில்லை.

மாறாக தனக்கு பரிச்சயமான கூட்டணியை ரஞ்சித் களமிறக்கினார்.

இந்நிலையில் கபாலி படம் தோல்வி படம் என வைரமுத்து ஒரு மேடையில் வெளிப்படையாகவே பேசினார்.

இதுகுறித்து தாணு கூறியதாவது.. “வைரமுத்து அவர்களின் கோபம் புரிகிறது. ஒருவேளை கபாலியில் அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்திருந்தால் ஓஹோ என்று புகழ்ந்திருப்பார்.

வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். கபாலி மிக வெற்றிப் படம்.

இந்திய திரையுலகமே பார்த்திராத சாதனைகளை வசூலில் கபாலி படைத்து வருகிறது” என்றார் தாணு.

ரஜினியை சித்ரவதை செய்த கபாலி தயாரிப்பாளர்… கடிதம் ஏற்படுத்திய சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவை அதிர வைக்கும் அளவுக்கு கபாலிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

எனவே டிக்கெட் கட்டணமும் வெகு வேகமாக உயர்ந்தது.

ரூ. 1000க்கும் அதிகமாக சில தியேட்டர்களில் டிக்கெட் விற்கப்பட்டது நாம் அறிந்ததே.

இப்படம் பார்த்த சிலர், இது ரஜினி படம் இல்லை. நாங்கள் எதிர்பார்த்தது கபாலியில் இல்லை என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் ரஞ்சித் அவர்கள்… பாட்ஷா படத்தை எதிர்பார்த்து வராதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் படம் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் சீனியர் சிட்டிசன் ரஜினியை சித்ரவதை செய்து ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வைத்துள்ளதாக கூறப்பட்ட ஒரு கடிதம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

மேலும் இக்கடிதம் காவல் துறை ஆணையருக்கு எழுதப்பட்டுள்ளது என்பது குறப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் இடத்தில் விஷால்-ஆர்யா.. பொன்ராம் எடுத்த முடிவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பொன்ராம்.

இதில் இவருடன் சிவகார்த்திகேயன், சூரி, இமான் ஆகியோர் இணைந்து பணியாற்றினர்.

இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெறவே, ரஜினிமுருகன் படத்திலும் இணைந்தது.

இதனையடுத்து மூன்றவாது படத்திலும் சிவகார்த்திகேயனை பொன்ராம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது ரெமோ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கவிருக்கிறார்.

எனவே, அப்படங்களை சிவகார்த்திகேயன் முடிப்பதற்குள் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் பொன்ராம்.

இதற்கான ஸ்கிரிப்ட் ஒன்று தயாராகவுள்ளதால், ஆர்யா, விஷால் உள்ளிட்டோரிடம் கால்ஷீட் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இக்திரைக்கதையில் நிச்சயம் சூரி இருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியுடன் நடிக்க முடியாமல் ‘கபாலி’யுடன் செல்பி எடுத்த நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியை வெள்ளித்திரையிலும், தூரத்தில் இருந்து பார்க்கும் ரசிகர்களை போலவே திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்களும் அவர் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர்.

ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே பலரது லட்சியமாக இருந்து வருகிறது.

இதனிடையில் கபாலி படம் அறிவிக்கப்பட்ட உடனே அதில் ரஜினிக்கு வயதான வேடம் என்றும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கக்கூடும் என்ற செய்திகள் வந்தன.

அதன் பின்னர்தான் ராதிகா ஆப்தே அந்த வேடத்திற்கு கமிட் ஆனார்.

இந்நிலையில் கபாலி படத்தை வித்யா பாலன் தனது கணவர் சித்தார்த் ராய் கபூருடன் மும்பையில் உள்ள ஆரோரா திரையரங்கில் பார்த்துள்ளார்.

அதன்பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கபாலி பேனர்கள் முன்பு தன் கணவருடன் போட்டோ எடுத்துள்ளார் வித்யாபாலன்.

More Articles
Follows