நிதின் சத்யா தயாரிப்பில் இணையும் வைபவ் & வாணி போஜன்

நிதின் சத்யா தயாரிப்பில் இணையும் வைபவ் & வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhav romance with Vani Bhojan in Nithin Sathya productionநடிகர் நிதின்சத்யா ஷ்வேத்-எ நிதின் புரோடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கி ஜருகண்டி படத்தை வெளியிட்டார்.

இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தயாரிப்பாராக மாறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உங்கள் ஆதரவோடு நடிகனா அறிமுகமாகி பல படங்களில் நடித்து என்னை ஒரு நடிகனா நிலை நிறுத்தி, நமக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு நாம மறுபடியும் ஏதாவது செய்யணும்னு தயாரிப்பாளராக மாறி இருக்கிறேன்.

ஷ்வேத்-எ நிதின் புரோடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கி ஜருகண்டி படத்தை வெளியிட்டார்.

இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மறுபடியும் புதுமுக இயக்குனர் எஸ்ஜி சார்லஸ் இயக்கத்துல புது படம் தயாரிச்சுட்டு இருக்கேன். எஸ்ஜி சார்லஸ் பிரபல இயக்குனர் மோகன் கிட்ட ஒர்க் பண்ணவர்.

முதல் படத்துல என்னுடன் நடித்த நண்பன் ஜெய் நடித்தார், என்னோட நெருங்கிய நண்பன் வைபவ் இப்படத்துல ஹீரோவா நடிக்கிறார். முதல் முறையாக முழு நீல போலீஸ் ரோல் பண்றார்.

வாணி போஜன் ஹீரோயினா நடிக்கிறார். இதில் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்க இந்த படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைக்கிறார்.

எடிட்டிங்கை ஜெரால்ட் ஆனந்தும், கலை பணிகளை ஆனந்த் மணியும், சண்டை காட்சிகளை மிராக்கல் மைக்கேல் ஆகியோர் செய்து செய்துள்ளனர்.

சென்னையில் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பதால், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டருடன் உங்களை சந்திக்கிறேன் என்றார்.

Vaibhav romance with Vani Bhojan in Nithin Sathya production

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார் யோகி பாபு. அதில் ஒன்றுதான் ‘ஜாம்பி’. இப்படத்தில் ஆன்லைன் பிரபலங்களும் யூடியூப் பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், ‘பிஜிலி’ ரமேஷ், ஜான் விஜய், ‘லொள்ளு சபா’ மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒரு பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு அனத்தும் முடிவடைந்தது. படத்தின் பெரும் பகுதியை ஈசிஆரில் உள்ள விடுதியைச் சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது. பிரேம்ஜி அமரன் இசையில், புவன் நல்லான்.ஆர். இயக்கத்தில் உருவாகும் இப்படம் கோடையின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதை சென்னை பாண்டிச்சேரி ஈசிஆர் சாலையில் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டு வருகிறது. S3 பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வசந்த் மகாலிங்கமும், வி.முத்துக்குமாரும் படத்தை தயாரிக்கிறார்கள்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா மூலம் தமிழில் அறிமுகமாகும் ஷிரின் காஞ்ச்வாலா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா மூலம் தமிழில் அறிமுகமாகும் ஷிரின் காஞ்ச்வாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் தன் திறமைகளை வெளிப்படுத்திய ஷிரின் காஞ்ச்வாலா, தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் வேளையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து நடிகை ஷிரின் காஞ்ச்வாலா கூறும்போது, “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நான் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் புரொடக்சன் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சார் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் ஆகிய இருவருக்கும் நன்றி. மொத்த குழுவும் மிகவும் நட்புடன் பழகினர். நான் இந்த படத்தில் பணி புரிந்த ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சிவகார்த்திகேயன், கார்த்திக் வேணுகோபாலன் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் எனக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தனர். ரியோ ராஜ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நான் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். அவர் இங்கு பல கடினமான காட்சிகளை கூட ஒரே டேக்கில் நடித்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இது எனது முதல் தமிழ் திரைப்படம். கதை அம்சம் உள்ள நல்ல பல திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

ரியோ ராஜ் மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் சில பிரபலமான YouTube நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஷபீர் (இசை), யு.கே.செந்தில் குமார் (ஒளிப்பதிவு), ஃபென்னி ஆலிவர் (படத்தொகுப்பு), பிரதீப் குமார் (சண்டைப்பயிற்சி), தினேஷ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் கமலநாதன் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

படத்தின் 80% பகுதிகள் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தாலும், படத்தின் முடிவில் முக்கியமான, ஒரு வலுவான கருத்தை கொண்டுள்ளது, இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என ஒட்டுமொத்த குழுவினரும் நம்புகிறார்கள்.

அக்கா குருவி படத்தை இயக்கும் சாமி

அக்கா குருவி படத்தை இயக்கும் சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectமதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் ‘அக்கா குருவி’ தமிழ், தெலுங்கில் சாமி இயக்குகிறார்.

1997-ம் ஆண்டு உலகப் புகழ்வாய்ந்த ஆஸ்கர் விருது விழாவில் பங்கு பெற்ற படம் ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’ (childrenச் of heaven). மற்றும் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாக்களான வார்சா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் (Warsaw International film festival) விழாவில் ஆடியன்ஸ் அவார்ட், சிங்கப்பூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாவில் சில்வர் ஸ்கிரீன் அவார்ட் , O.U.L.U இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்டு விழாவில் (OULU international childrens film festival), C.I.F.E.J. அவார்ட், நியூபோர்ட் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் Rhode island விழாவில் – பெஸ்ட் ஃபாரின் பிலிம் அவார்ட் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு அனைவரையும் நெகிழ வைத்த இந்த படத்தின் தென்னிந்திய மொழி மாற்றும் உரிமையை பெற்று உள்ளார்கள்.

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தமிழ் – தெலுங்கு மொழிகளில் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அக்கா குருவி’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

‘மிருகம்’ படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனரான சாமி இப்படத்தின் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இவர் நம்ம ரசிகர்களுக்காக சில காட்சிகளை இணைத்துள்ளார்.

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸர் – ஆன தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி ‘ஷூ’ ஒன்று இடம்பெறுகிறது.

படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அதனருகே இயற்கை எழில் கொஞ்சும் ஊரான பூம்பாறை கிராமம் போன்ற இடங்களில் 55 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கியுள்ளார்கள்.

ஒளிப்பதிவு : உப்பல் வி.நாயனார், கலை : வீரசமர், எடிட்டிங் : மணிகண்டன் சிவகுமார்.

படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால் !!

தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா பால் தற்போது, வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால்.

“ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் ரசிக்கிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு அதோ அந்த பறவை போல, ஆடை படங்களுக்கு பிறகு கடவர் கதையை கேட்டேன். இதுவரை பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட ஒரு கதையாக இருந்தது ‘கடவர்’. நான் இந்த படத்தில் ஒரு தடய நோயியல் நிபுணராக நடிக்கிறேன். இதில் நடிக்க நான் நிறைய தயாராக வேண்டி இருந்தது. ஏனெனில் நாம் திரைப்படங்களில் பார்த்த வழக்கமான விசாரணைகள் போல இது இருக்காது. கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்
உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கதாபாத்திரத்துக்கு தயாராவதற்கு அந்த புத்தகத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலை பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன்” என்றார்.

இந்த படத்தின் ஒரு இணை தயாரிப்பாளராக மாறியது குறித்து அமலா பால் கூறும்போது, “இந்த படத்தை ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது, ஏனெனில் பல காரணிகள் உள்ளன. ஒரு நடிகையாக பின்னால் இருந்து இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். என்னை போலவே இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையையை வைத்திருந்த என் தயாரிப்பாளர்களான அஜய் பணிக்கர் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு ஆதரவாக இருக்க விரும்பினேன். என்னை ஒரு இணை தயாரிப்பாளராக ஏற்றுக் கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி. நாங்கள் பொதுவான பார்வையை பகிர்ந்து கொள்கிறோம், எங்கள் நோக்கங்கள் தெளிவாக உள்ளன. நல்ல கதை மற்றும் தயாரிப்பில் தரத்தை உயர்த்துவதற்கு இன்னும் பல படங்களை இணைந்து செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளனர். அவர்களின் முன் தயாரிப்பு முயற்சிகளால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்து விடுவோம் என நம்புகிறேன். எங்களது முதல் தயாரிப்பு பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளை செய்யும் என நிச்சயமாக சொல்ல முடியும். இப்படி ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பளித்த APJ ஃபிலிம்ஸ் அஜய் பணிக்கர் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் பிரதீப் ஆகியோருக்கு நன்றி” என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் அமலா பால்.

இந்த படத்தில் நான் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவேன், ரசிகர்களுக்கு அது ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்கிறார் அமலா பால்.

அதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் (ராட்சசன் புகழ்) மற்றும் சில பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். துருவங்கள் 16 புகழ் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராட்சசன் புகழ் ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கையாள்கிறார். ராகுல் கருப்பையா கலை இயக்குனராக பணிபுரிய, விக்கி (உறியடி, ராட்சசன்) சண்டைப்பயிற்சி அளிக்கிறார்.

கோலிவுட் ஸ்பீடு டைரக்டருடன் இணையும் ஜெயம் ரவி..?

கோலிவுட் ஸ்பீடு டைரக்டருடன் இணையும் ஜெயம் ரவி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director hariபத்து நிமிட காட்சிகளை ஒரு நிமிடத்தில் சொல்லி முடிப்பவர் டைரக்டர் ஹரி. இதனால் இவருக்கு கோலிவுட்டில் ஓவர் ஸ்பீடு டைரக்டர் என்ற பெயரும் உண்டு.

மேலும் டாடா சுமோ இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது எனவும் கூறியிருந்தார். குறைந்த பட்சம் 50 கார்களையாவது பறக்க விடுவார்.

விக்ரம், சூர்யா ஆகியோருக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் முதன்முறையாக ஜெயம் ரவியை இயக்கவுள்ளாராம்.

சிங்கம் பட பாணியில் அதிரடி ஆக்சன் படமாக இது உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி. பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படம் ஜூன் 21-ல் திரைக்கு வருகிறது.

இப்படத்தை முடித்துவிட்டு தனி ஒருவன் 2.. அதன்பின்னர் ஹரி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பார் என கூறப்படுகிறது.

Director Hari and Jayam Ravi team up for new venture

More Articles
Follows