தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடிக்கும்,‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி ’.
இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத்.
அண்மையில் இதன் தொடக்கவிழா ஸ்டீடியோ கிரீன் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது.
இந்நிலையில் இதில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம்.
அவர் ஒப்பந்தம் ஆனவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
Vaibhav romance with Hanshika in Katteri movie