வந்துட்டார்ய்யா.. வந்துட்டார்ய்யா.. வடிவேலு மீண்டும் வந்துட்டார்ய்யா..

வந்துட்டார்ய்யா.. வந்துட்டார்ய்யா.. வடிவேலு மீண்டும் வந்துட்டார்ய்யா..

vadiveluதமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் சென்றாலும் வடிவேலு இடம் தனி இடம் தான்.

அவர் சினிமாவில் நடிக்காத காலம் தமிழ் ரசிகர்களுக்கு கஷ்டகாலம் தான்.

சினிமாவில் அவர் உச்சத்தில் இருந்த போதே 2011ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது தேமுதிக & அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்தார்.

திமுக-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றதால் வடிவேலுக்கு திரைப்பட வாய்ப்புகளை வழங்க எவரும் தயாராகவில்லை.

சில ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்க “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படத்தின் 2வது பாகம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாகவுள்ளதாக அறிவித்தனர்.

இந்த படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்ய வடிவேலு கோரியதால் படக்குழுவுக்குள் பிரச்சினை உருவானது துவங்கியது.

இதனால் படப்பிடிப்பில் பங்கேற்காமல் நாட்களை வடிவேலு வீணடிக்க தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

எனவே வடிவேலு இனி திரைப்படங்களில் நடிக்காத வண்ணம் ரெட் கார்டு வழங்கப்பட்டது.

இந்த பிரச்சினையே 3 வருடங்களாக பேசப்பட்டாலும் ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் களமிறங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இதன் காரணமாக ஷங்கர் வடிவேலு இடையே உடன்பாடு ஏற்படும் எனவும் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

வந்துட்டார்ய்யா.. வந்துட்டார்ய்யா.. வடிவேலு மீண்டும் வந்துட்டார்ய்யா.. என ரசிகர்கள் நிச்சயம் சொல்வார்கள்.

Vagai Puyal Vadivelu re entry in kollywood ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *