தொங்கல் உடலை பிஃட்டாக்கும் வடிவேலு; மீண்டும் வரும் இம்சை அரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.

இதனை இயக்குனர் ஷங்கர் தயாரித்து இருந்தார்.

இதன் இரண்டாம் பாகத்தையும் ஷங்கரே தயாரிக்க, வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியது.

இதன் பணிகள் தொடங்கும் நேரத்தில் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் வடிவேலு.

தற்போது அங்குள்ள காட்சிகளை முடித்துவிட்டு திரும்பிய வடிவேலு, தற்போது உடல் எடையை குறைக்க தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

விரைவில் வடிவேலுவுடன் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்பாகத்தில் அமைச்சராக நடித்த இளவரசுவிடம் அரசன் வடிவேலு தன் உடல் சற்று தொங்கலாக இருக்கும். எனவே சிக்ஸ்பேக் உடலை ஓவியமாக வரைய சொல்வார்.

தற்போது அதுபோல் வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Vadivelu working out for Imsai Arasan 23M Pulikesi Part 2

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதிரடி முடிவுகளை எடுக்க விஷால் திட்டம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா பல்வேறு விதமான பிரச்சினைகளை தினம் தினம் சந்தித்து வருகிறது.

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, திருட்டு விசிடி, பெப்சி ஊழியர்கள் பிரச்சினை என பலதரப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது.

எனவே இதுகுறித்து பேச, நாளை ஆகஸ்ட் 18ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பதாவது:
தற்போது தமிழ் திரைப்படத் துறையில் நிலவி வரும் பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியிருப்பதால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

எனவே நாம் அனைவரும் ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டியிருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vishal invited all producers to attend Urgent Producer Council meeting on 18th August 2017

 

நம் பேராசைதான் உணவை விஷமாக்கியது… உலகநாயகன் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சியை ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அமைப்பு திண்டிவனம் அடுத்த ஆவணிபூர் கிராமத்தில் வரும் 26-ம் தேதி நடத்த உள்ளது.

‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதற்கான மோஷன் போஸ்டர், இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது. அவற்றை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது:

நம் நாட்டில் சுமார் 70 சதவீத பாரம்பரிய நாட்டு விதைகள் அழிந்துவிட்டன. 30 சதவீத பாரம்பரிய விதைகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று கூறப்படுகிறது. மாற்று விதையால் உருவாகும் செடியில் பூச்சிகள் உட்காராமல் இருக்க வேரில் விஷம் பாய்ச்சுகிறோம்.

இதனால் மறைமுகமாக நாமும் விஷம்தான் உண்கிறோம். உண்மையில், உண்ணும் உணவு விஷமானதற்கு எதிரிகள் காரணமல்ல; நம் பேராசையும், உணவுப் பொருட்கள் வியாபாரமானதும்தான் காரணம். இந்த நிலை மாறவேண்டும்.

இயற்கை உரம் கொண்டு பாரம்பரிய நாட்டு விதைகளால் உருவான உணவுகளை உண்போம். எஞ்சியுள்ள 30 சதவீத பாரம்பரிய நாட்டு விதைகளைக் காக்க ஒவ்வொருவரும் விவசாயியாக மாறுவோம்.

அடிப்படையில் நானும் ஒரு விவசாயிதான். என் புதிய வீட்டின் மாடியில் இயற்கை உரங்கள் போட்டு, இயற்கை விதைகளைக் கொண்டு மாடித் தோட்டம் அமைக்கத் தொடங்கியுள்ளேன்.

உலக சாதனைக்காக மட்டுமல்ல; இயற்கை சார்ந்த உணவுக்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும். இப்பணியில் ‘மாறுவோம் மாற்றுவோம்’ குழுவினரோடு என் நற்பணி மன்றத்தினரையும் ஈடுபடுத்த உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார். நடிகர் ஆரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Kamal and Actor Aari Promotes Heirloom Seeds

தனுஷ்-சௌந்தர்யா ரஜினி கூட்டணிக்கு வெற்றியை தந்த திருவள்ளுவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், விவேக், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த வேலையில்லா பட்டதாரி2 படம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இப்படம் மாபெரும் வெற்றி பெறவே, இப்படக்குழுவினர் மற்றும் இணைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் படக்குழுவினரை சந்தித்தனர்.

அப்போது தனுஷ் பேசியதாவது…

‘வேலையில்லா பட்டதாரி 2’ கதையை முழுமையாக முடித்து செளந்தர்யாவிடம் கொடுக்கும் போதே, இப்படத்தின் வெற்றி முதல் பாகம் அளவுக்கு அல்ல, ஆனால் நன்றாக இருக்கும் என்று முதல் நாளிலேயே கூறித்தான் பணிகளைத் தொடங்கினோம்.

முதல் பாகத்தோடு தான் அனைத்து விஷயங்களையும் ஒப்பிடுவார்கள் என்பது தெரியும். ரீமேக் படங்கள் செய்யும் போதும், ஒரிஜினல் படத்தில் நடித்தவர்களின் நடிப்புதான் சிறப்பாக இருந்ததாக கருதுவார்கள். இது இயல்புதான்.

இப்படத்துக்கு என ஒரு வெற்றியை வைத்திருந்தோம். ஆனால், அதைத் தாண்டி படம் வெற்றிடையந்ததில் சந்தோஷம். நல்ல விஷயங்கள் சொல்கிறோம், இப்படத்தின் மூலம் நேர்மறையான விஷயங்களை எடுத்துரைக்கிறோம் என நினைத்தேன்.

ஒரு சிலர் திறக்குறளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கலாமே என்றார்கள். அப்படி சொல்லியிருந்தால் யாருமே அதற்கான அர்த்தம் என்னவென்று பார்த்திருக்க மாட்டார்கள்.

வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுமே திருக்குறளில் இருக்கிறது என மக்களுக்கு தெரிந்து, படித்துப் பார்க்க வேண்டும். எனது நண்பர்கள் பலர் இப்போது திறக்குறள் புத்தகம் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

எனது திரையுலக வாழ்வில் முதன்மையான 3 வெற்றிப் படங்களில் இப்படமும் இருக்கப் போகிறது. அதற்கு முக்கியமான காரணம் நேர்மறையான விஷயங்களைச் சொன்னது மட்டுமே.

அன்பைப் பரப்பியதால் மட்டுமே மக்கள் குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கிறார்கள்.

இப்படத்தின் கதையைத் தாண்டி, முதுகெலும்பு என்றால் தாணு சார் வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே. ஒரு நடிகராக எனக்கொரு மார்க்கெட் இருக்கிறது.

அதைத் தாண்டி கதையின் மீது நம்பிக்கை வைத்து செலவு செய்தார் தாணு சார். இந்தளவுக்கு பிரம்மாண்டமான வெற்றி என்பது தாணு சார் இல்லாமல் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.

எப்போதும் அன்பு மட்டுமே இந்த உலகத்திற்கு தர வேண்டும். அது மட்டுமே நிரந்தரம். ஒருவரைப் பிடித்திருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், பிடிக்கவில்லை என்றால் எதுவுமே பேசாமல் இருக்கலாம்.

பிடிக்கவில்லை என்பதற்காக வெறுப்பை விரும்ப வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக அன்பு செலுத்துங்கள், அது மட்டுமே இந்த உலகிற்கு அதிகம் தேவை. உலகம் நிறைய எதிர்மறையான விஷயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பெரிய பிரச்சினைகளைத் தாண்டி மற்றவர்களிடம் அன்பைச் செலுத்தினாலே, இயற்கை நம்மீது அன்பு செலுத்தும்.
‘வேலையில்லா பட்டதாரி 3’ கண்டிப்பாக வெளிவரும். எப்போது என்பது சரியாக தெரியவில்லை.

இரண்டாம் பாகத்துக்கு இருந்த பிரச்சினை, 3-ம் பாகத்துக்கு இருக்காது. அப்படத்தையும் நான் எழுதி முடித்தவுடன் தான் மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்.”

இவ்வாறு தனுஷ் பேசினார்.

Thirukural Thiruvalluvar is reason behind success of VIP2

தமிழ் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த இரண்டு பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

50 நாட்களுக்கு முன்பு கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதில் பங்கேற்ற நடிகை ஓவியா பிரபலமானார்.

ஆனால் இவர் தற்போது அதிலிருந்து வெளியேறிவிட்டார்.

இவரைப் போல ஜீலி, சக்திவாசு உள்ளிட்ட பலரும் வெளியேறிவிட்தால், அதன் சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை சுஜா வருணி நேற்றுமுதல் இந்த வீட்டில் நுழைந்துள்ளார்.

இவரையடுத்து நடிகர் ஹரிஷ்கல்யாண் இன்றுமுதல் இந்த வீட்டில் நுழைகிறார்.

இதனிடையில் மெட்ரோ சிரிஷ் கலந்துக் கொள்வார் என செய்திகள் வந்தன. ஆனால் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார் சிரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில போட்டியாளர்களையும் இந்த வீட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Suja varunee and Harish Kalyan entered in Tamil Bigg Boss house

ஹீரோவாகிறார் இசையமைப்பாளர் இமான்; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய மெலோடி பாடல்களுக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் இமான் என்று சொன்னால் அது மிகையல்ல.

கிட்டதட்ட 70 படங்களுக்கு மேல் இவர் இசையமைத்திருந்தாலும் முழுநேர நடிகராக ஆனதில்லை.

ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நமீதாவுடன் நடித்திருந்தார். ஒரு சில படங்களில் பாடியிருக்கிறார்.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Music composer D Imman going to act as Hero in Suseenthiran direction

More Articles
Follows