‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணையும் வடிவேலு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலு சினிமாவிலும் நடிக்காவிட்டாலும் அவர் இல்லையென்றால் ஒரு மீம்ஸ் கூட இருக்காது என்ற நிலைதான் தற்போது வரை இருக்கிறது.

அவர் மீண்டும் நடிக்க வரமாட்டாரா? என்ற லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.

இந்த நிலையில் லைகா தயாரிப்பில் கமல் நடிக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஏனென்றால் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ பட விவகாரத்தில் லைக்காவிற்கும், வடிவேலுவுக்கும் இதுவரை மோதல் நிடீத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கமலுடன் சிங்காரவேலன், தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் வடிவேலு நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vadivelu to joins Kamalhassans next

ஜெயம் ரவியை அடுத்து விக்ரமுடன் இணையும் கோமாளி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019 சுதந்திர தினத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் ‘கோமாளி’.

ஜெயம் ரவி, யோகி பாபு நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம்மை இயக்க உள்ளார்.

அஜய் ஞானமுத்துவின் படம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டாலும் அதற்குள் குறுகிய கால படமாக கோமாளி இயக்குனருடன் இணைகிறார்.

Comali directors next movie with Chiyaan Vikram

பாலா இயக்கத்தில் சூர்யா-ஆர்யா-அதர்வா மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் உள்ளிட்ட தரமான பல படங்களை இயக்கியவர் பாலா.

இதில் நான் கடவுள் படத்தில் ஆர்யாவையும், பரதேசி படத்தில் அதர்வாயும் இயக்கியிருந்தார்

இந்த நிலையில் மீண்டும் இந்த நாயகர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனோ தானோ என்ற இருந்த சூர்யா என்ற ஒரு நடிகரை அடையாளப்படுத்தியவரே பாலா தான். எனவே அவர் கேட்டால் சூர்யா மறுக்கவா போகிறார்.

Bala going to direct Suriya Arya and Atharva again

இனிமே டப்பிங் பேச கூட வெளியே வரமாட்டாராம் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் நடிக்கும் படத்திற்கு பூஜை போட்டால் கூட அதில் கலந்துக் கொள்ளாதவர் நடிகர் அஜித்.

பூஜைக்கே வராதவர் புரொமோசன், இசை வெளியீட்டு விழாவுக்கு வருவாரா?

தன் பட சூட்டிங் தவிர படம் சம்பந்தமாக எதிலும் கலந்துக் கொள்ளாதவர் அவர்.

மேலும் சினிமா தொடர்பான பொது விழாக்களிலும் அவரை பார்ப்பது அரிதான ஒன்று.

இந்த நிலையில் தனது வீட்டிலேயே சொந்தமாக டப்பிங் தியேட்டரை கட்டி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இனி மேல் தன் படத்திற்கான டப்பிங் பணிகளுக்கும் அவர் வெளியே வர மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

நடத்துங்க தல…

Dubbing theatre in Actor Ajith Home

எம்ஜிஆர் மகன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகும் மிருணாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம்.

தற்போது ‘எம்.ஜி.ஆர் மகன் என்ற தலைப்பிடப்பட்டுள்ள படத்தை இயக்குகிறார்.

இதில் சசிகுமார் நாயகனாக நடிக்க டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் , சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோரும் நடிக்கின்றனர்.

வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணிதாசன் இசையமைக்கிறார்.

Sasikumars MGR Magan has Mirnalini as the heroine

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகும் சிம்ரன் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்விஜய் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான தடம் படத்தை இயக்கியவர் மகிழ் திருமேனி.

இப்படத்திற்கு முன்பே உதயநிதியிடம் ஒரு படத்திற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தாராம் மகிழ் திருமேனி.

தற்போது அந்த படத்தில் இணைய பணியாற்ற இருவரும ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் மேகா ஆகாஷ்.

இவர் ரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரனின் மகளாக நடித்திருந்தார்.

மேலும் சிம்புவுடன் ‘வந்தா ராஜா வாதான் வருவேன்’ படத்திலும் தனுஷ் உடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது ‘சாட்டிலைட் சங்கர்’ படத்தின் மூலம் இந்தி சினிமாலும் நடிக்கவுள்ளார் மேகா ஆகாஷ்.

Megha Akash to romance with Udhayanidhi in Magizh Thirumenis film

More Articles
Follows