வானம் கொட்டட்டும் படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்,
சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.

சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். இறுதி கட்ட பணிகள் முடிந்து 2020 ஜனவரியில் இப்படம் வெளியிடப்படும்.

‘வலிமை’ பட சூட்டிங் தாமதத்திற்கு அஜித்தான் காரணம்; என்ன தல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிக்கவுள்ள ‘வலிமை’ படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க பாலிவுட் புரொடியூசர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

மங்காத்தா முதல் நேர் கொண்ட பார்வை படம் வரை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த அஜித் இந்த படத்திற்காக கறுப்பு நிற தலைமுடிக்கு மாறவிருக்கிறாராம்.

இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் அஜித் நடிக்கவுள்ளதால் படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து வருகிறாராம்.

அவர் தயாராகி வந்தவுடன் வருகிற நவம்பர் 24ல் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

விரைவில் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகலாம்.

Ajith making delay to start shooting for Valimai

300 கோடி வசூலில் பிகில்.; தயாரிப்பாளர் சொல்லல ரசிகர்கள் சொல்றாங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகிபாபு, கதிர், இந்துஜா, அமிர்தா, வர்ஷா பொல்லம்மா, டேனியல் பாலாஜி, ஜாக்கி செராப், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் பிகில்.

ஏஜிஎஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக். 27ல் வெளியானது.

தெறி, மெர்சல் பட கூட்டணி என்பதால் இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் படத்தின் பட்ஜெட்டும் ரூ. 180 கோடி என்பதால் பிரம்மாண்ட வரவேற்பை விஜய் ரசிகர்கள் கொடுத்தனர்.

ஆனால் படத்திற்கு முதல் நாளே கலவையான விமர்சனங்களே வந்தன.

இந்த நிலையில் படம் வெளியாகி 2 வாரங்களை கடந்துள்ள நிலையில் இந்த படம் ரூ. 300 கோடியை வசூலித்துவிட்டதாக ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் மற்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

ஒரு படத்தின் வசூலை தயாரிப்பாளர்களால் மட்டுமே சரியாக சொல்ல முடியும். ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்பதுதான் இங்கே செம காமெடி.

பிகில் படம் வரும்போது அது பற்றிய எல்லா தகவல்களையும் உடனுக்குடன் வெளியிட்டவர் அர்ச்சனா கல்பாத்தி. அவரே வசூல் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Vijay fans trending that Bigil collected Rs 300 crores

கமல்ஹாசன் 60 விழாவில் கலந்துக் கொள்ள அஜித் ஆர்வம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற நவம்பர் 17ஆம் தேதி திரையுலகில் 60 ஆண்டுகளை கடந்துள்ள கமல்ஹாசளை கௌரவிக்கும் பொருட்டு கமல் 60 நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கமலை வாழ்த்த இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் கமலின் பாடல்கள் இசைக்கப்படும் எனத் தெரிகிறது.

இதில் ரஜினி உள்ளிட்ட இந்திய திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

கமல் 60 அழைப்பிதழில் ரஜினி, இளையராஜா, விஜய், அஜித் படங்கள் உபயோகப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தான் நடித்த பட பிரமோசன்களில் கூட கலந்து கொள்ளாத நடிகர் அஜித் இந்த விழாவில் கலந்து கொள்வார் என தகவல்கள் வந்துள்ளன.

ம்ம்… இந்த தகவல் உண்மையாகுமா? என பார்ப்போம்.

Will Thala Ajith participate in Kamalhassan 60 event

அசுரன் ரீமேக் ; வெங்கடேஷ் உடன் இணையும் ஸ்ரேயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம் அசுரன்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

முதன்முறையாக தனுஷ் படம் ரூ. 100 கோடி வசூலை அள்ளியது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழில் மஞ்சு வாரியார் நடித்த கேரக்டரில் நடிகை ஸ்ரேயாவை தேர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார் என்பதை நாம் முன்பே பார்த்துவிட்டோம்.

ஏற்கெனவே தெலுங்கு படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

Shriya to star opposite Venkatesh in Asuran Telugu remake

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ டப்பிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் பட சூட்டிங்கை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினி இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் பொங்கல் சமயத்தில் வெளியாகிறது.

இதற்கான டப்பிங் பணிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் வருகிற நவம்பர் 15ம் தேதி முதல் ஒரே கட்டமாக தர்பார் பட டப்பிங்கை பேசி முடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.

Super Star Rajinis Darbar movie dubbing updates

More Articles
Follows