ரஜினிக்காக லாரன்ஸ் வெளியிட்ட பாடல்.. வா தலைவா போருக்கு வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 20 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதற்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில் நாளை டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் முடிவை அறிவிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கும் வகையில் பாடல் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வா தலைவா போருக்கு வா என்று அந்த பாடல் வரிகள் இருக்கிறது.

இப்பாடல் வெளியான சில நிமிங்களிலேயே இந்தியளவில் டிரெண்ட் ஆகிவிட்டது.

நாளை என்ன சொல்லப்போகிறாரோ தலைவர்..? காத்திருப்போம்

சிவகார்த்திகேயனை அடுத்து சிம்புவை இயக்கும் மோகன்ராஜா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனி ஒருவன் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை இயக்கினார் மோகன்ராஜா.

கடந்த வாரம் வெளியான இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மோகன்ராஜாவின் அடுத்த பட தகவல்கள் கசிந்துள்ளன.

அடுத்த படத்தில் இசையை மையப்படுத்தி கதையை உருவாக்கவுள்ளாராம்.

இப்படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிம்பு தான் இயக்கும் ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு, மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை முடித்துவிட்டு மோகன்ராஜாவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா-அரசியல் எதுவானாலும் காலம் மாறும்…: ரஜினிகாந்த் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 4 நாட்களாக தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்று 4வது நாள். நாளை மறுநாள் டிசம்பர் 31ஆம் தேதியோடு இந்த நிகழ்வு நிறைவு பெற உள்ளது.

அப்ப்போது தன் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இன்று 4 ஆம் நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த்..

“அண்ணாமலை படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சமயம் அது. அப்போது ஒரு முறை நான் கோவை சென்றேன். என்னுடன் சிவாஜி சார் இருந்தார். மன்னிக்கவும். சிவாஜி சாருடன் நானும் ஒரு விமானத்தில் பயணித்து கோவை சென்றோம்.

அப்போது என் ரசிகர்கள் சொல்லவா வேண்டும். ரஜினி வாழ்க. தலைவா வாழ்க என்று கோஷம் போட்டனர்.

அப்போது சிவாஜி சார் இருக்கும்போது எனக்கு ஒருமாதிரியாக இருந்தது.

அப்போது சிவாஜி என் தயக்கத்தை புரிந்துக் கொண்டு, டேய் இங்க வாடா… நல்லா உழைக்கனும். நல்ல சினிமா கொடு.

நாங்க அப்போ அப்படி இருந்தோம். இது உன் காலம் டா. ரசிகர்கள் பார்த்து கை அசை. அவர்களுக்கு வணக்கம் சொல் என்றார்.

சில வருடங்களுக்கு பிறகு அண்மையில் கோவை சென்றேன். அப்போது என்னிடம் வந்த சிலர், சார் நீங்க இப்போ போக வேண்டாம்.

ஒரு நடிகர் வந்திருக்கிறார். அவரது ரசிகர்கள் அங்கு இருக்கிறார்கள். என்றார்.

இது அவரது காலம். இது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி காலம் மிக முக்கியம். காலம் வரும்போது எல்லாம் தானாக மாறும்.” என்று ரஜினிகாந்த் பேசினார்.

பாகுபலி பிரபாஸை இயக்கும் மெர்சல் இயக்குனர் அட்லி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடித்த மெர்சல் படத்தை இயக்கினார் அட்லி.

இதனையடுத்து அட்லியின் அடுத்த பட ஹீரோ யார்? என்ற கேள்விகள் கோலிவுட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

அவரின் புதிய படத்தில் 3 ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் அட்லியின் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மெர்சல்’ படத்துக்கு கதை எழுதிய ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் அவர்கள்தான் இப்படத்துக்கும் கதை எழுதுகிறாராம்.

ஆனால் பிரபாஸ் உடன் அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

எம்ஜிஆர் பட டீசரை பிரதமர் மோடி வெளியிடுவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக ஒய்.ஜி.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்து வருகிறார்.

இப்படத்தில் எம்ஜிஆரின் வாழ்க்கையில் நடந்த பல முக்கிய சம்பவங்களை வைக்கவுள்ளனர்.

1967 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியது.

இந்த நிகழ்வை அண்மையில் படமாக்கியுள்ளனர்.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

தற்போது தமிழக அரசால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி ஜனவரியில் இப்பட டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

எனவே பிரதமர் மோடியை சந்தித்து இப்பட டீசரை வெளியிட கோரிக்கை வைக்கவிருக்கிறார்களாம்.

சரக்கு அடிக்கலாமா? விமலுடன் விவாதிக்கும் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமல், வரலட்சுமி இணைந்து நடித்து வரும் படம் ‘காதல் மன்னன்’.

இதில் வரலட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டு மகளாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக சந்திர மவுலி நடிக்கிறார்.

சென்னை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் காட்சி ஒன்றில் சரக்கு பாட்டிலை வைத்துக் கொண்டு, இதை குடிக்கலாமா? வேண்டாமா? டாஸ்மாக், முடிவெடுக்கும் நேரமிது. என்று விமல் மற்றும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.

வரலட்சுமியின் இந்த கேள்விக்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

More Articles
Follows