மூன்றாம் வாரத்தில் வெற்றிநடைபோடும் “வி1”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய முயற்சி பாராட்டும்படி இருந்தால் அதற்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் என்றும் அளவில்லாமல் அளிப்பதில் முதன்மையானவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்களின் அன்பால் “வி1” திரைப்படம் தற்போது மூன்றாம் வாரத்தில் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.

பல எதிர்பார்ப்புகளோடு இன்று வெளியாகியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்” படம் வெளியான இந்நாளிலும் “வி1” திரைப்படம் சில திரையரங்குகளில் திரையிடப்படுவது பெரும் மகிழ்ச்சி என்கின்றனர் “வி1” படக்குழுவினர்.

இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை “வி1” படக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது புதிய பட அறிவிப்பை மிக விரைவில் “வி1” படக்குழு தெரிவிக்கவுள்ளது.

BREAKING பெருமைமிகு தமிழன் ரஜினி தமிழகத்திற்கு உதவனும்.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் ஈடு இணையற்ற நட்பு நாம் அறிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரும் கடந்த 45 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கின்றனர்.

கமல் தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். ரஜினி விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழக நலனுக்காக ஒரு வேளை நாங்கள் இணைய வேண்டிய சூழ்நிலை வந்தால் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனவரி 9ஆம் தேதி இரவு ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல பத்திரிகையாளர் என் ராம் உடன் கலந்துக் கொண்டார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் கமல்.

அப்போது அவர் பேசும்போது… என் நண்பர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் தமிழகம் அவருக்கு நிறைய உதவி செய்துள்ளது.

அவர் எங்கு பிறந்திருந்தாலும் தற்போது ஒரு பெருமைமிக்க தமிழன் ஆவார்.

இவ்வாறு கமல்ஹாசன பேசினார்.

Rajini must help tamilnadu as it done lot to him says Kamal

https://twitter.com/maiamofficial/status/1215281203030265857

BREAKING ‘தர்பார்’ படத்தில் சசிகலா டயலாக்ஸை நீக்க வேண்டும் என எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் சிறை கைதிகள் செல்போன் வைத்திருப்பார்கள். அதை ரஜினி கேட்கும்போது தென்னிந்தியாவில் கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்…” என்று மற்றொரு போலீஸ் கூறுவதாக காட்சி இருக்கும். அதற்கு ரஜினி ஓஹ்ஹோ… என கலாய்த்து இருப்பார்.

மேலும் இந்த காட்சிக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார்… ’பணம் பாதாளம் வரை பாயும். சில நேரம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கருத்து நல்ல கருத்துதான்” என ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வினய்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது..

“வினய்குமாரின் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்க தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்த வசனத்தை நீக்க வேண்டும்.

அப்படி நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதாரமின்றி அமைச்சர் ஜெயக்குமார் பேசினால் அவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Lawyer condemns Sasikala dialogue in Rajinis Darbar

MGR-ஐ புகழ்ந்து சசிகலாவை கலாய்த்த ‘தர்பார்’ ரஜினி; அமைச்சர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான தர்பார் படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகியுள்ளது.

இந்த படத்தில் ரஜினி போலீஸ் கமிஷ்னராக நடித்துள்ளார்.

இன்று படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவர் வேற லெவல் என புகழ்ந்து வருகின்றனர்.

இந்த படத்தின் சில வசனங்கள் அரசியல் கட்சி தலைவர்களை மறைமுக கலாய்துள்ளது.

ஒரு காட்சியில் எம்ஜிஆர் அவருடைய சினிமாவில் ஏன் 3 முறை அடிவாங்குவார்? என தெரியுமா? என ரஜினி கேட்பார்.

அதன்பின்னர் அவரே பதில் சொல்வார். தன் எதிரியின் பலம் என்ன? என்பதை தெரிந்துக் கொள்வதற்காக தான் அந்த அடிகளை வாங்குவார் என்பார்.

மற்றொரு காட்சியில் சிறை கைதிகள் செல்போன்களில் பேசிக் கொண்டு இருப்பார்கள்.

அப்போது ஜெயில்ல செல்போன் வச்சிருக்காங்க என்பார். தென்னிந்தியாவில் ஒரு கைதி வெளியே ஷாப்பிங் போய்ட்டு வராங்க சார் என்பார் ஒரு அதிகாரி. அதற்கு ரஜினி.. ஓஹ்ஹஉ என்று கிண்டலாக ஒரு சவுண்ட் விடுவார்.

அதுபோல் மற்றொரு காட்சியிலும் கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவை கலாய்த்து வசனங்கள் இருக்கும்.

இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதாவது…

“தர்பார் படத்தில் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற பொருளால் வரும் பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களை காட்டியுள்ளனர்.

அதாவது பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சசிகலா அவர்களை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

அதே சமயத்தில் சினிமா வாயிலாக நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என தெரிவித்தார் அமைச்சர்.

Darbar Rajini slams Sasikala Jail shopping incident

தர்பாருக்கு 4 நாட்கள்.. பிகிலுக்கு மட்டும் 1 நாள் ஏன்?; அமைச்சர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகியுள்ளது.

இந்த படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அதாவது அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இத்துடன் இன்று வியாழன் ஜனவரி 9ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதியுள்ளது தமிழக அரசு.

ஆனால் கடந்த வருடம் 2019 சமயத்தில் விஜய் நடித்த பிகில் படம் வெளியானது. இந்த படத்திற்கு ஒரு நாளைக்கு மட்டுமே சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

அதுவும் பல கட்ட பிரச்சினைக்களுக்கு பிறகு முதல் நாள் இரவு இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இன்று தர்பார் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இது குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…

“எங்களைப் பொருத்தவரை தர்பாரும் ஒன்றுதான் பிகிலும் ஒன்றுதான். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பு காட்சிகள் திரையிட அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர்.” என்று கூறினார்.

TN Minister clarify Darbar and Bigil special shows issue

இரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாது இடம்பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார். தனக்கே உரித்தான காமெடி பஞ்ச்களால் கவரும் அதே வேளையில் திரைப்படங்களில் முழு நாயகனாகவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் G கிரிஷ் இயக்கும் “டக்கர்” அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. அவரது கேரக்டர் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் அதே நேரம், வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டாவாகவும் இருக்கும். திரையில் அப்பா மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர்.

சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகியாக நடிக்கிறார். இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் “டக்கர்”.

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், யோகிபாபு, முனீஷ்காந்த், RJ விக்னேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். கௌதம் G A படத்தொகுப்பு செய்கிறார்.

More Articles
Follows