நரை முடிக்கு இருக்கா தீர்வு.? இதோ வந்துட்டு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ!

நரை முடிக்கு இருக்கா தீர்வு.? இதோ வந்துட்டு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V Care VIP Hair color shampoo to avoid white hairதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே..

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்..

“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான்.

நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள்.

இன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்வருகின்றனர்.

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது.

ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது.

உலகம் முழுவதிலும் இதற்கு தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே.

ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதை சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலரவைத்து அதன்பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது.

ஆனால் பெரும்பாலான மக்கள் அங்கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள்.

அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஓட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும்..

சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.

சரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக் கொண்டுவந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு.

எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும்.

இதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.

அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதை கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டு செல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.

இதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது.

ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம்.

இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது.

வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. கைகளை தண்ணீரால் ஈரமாக்கிக் கொண்டு நமக்கு தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக்கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்கு குறையாமல் நரை முடியை தெரியவிடாமல் தடுக்கும்.

இன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான்.

ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம்.

சுருக்கமாக சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” என பெருமை பொங்க கூறுகிறார் ஆர்கே.

V Care VIP Hair color shampoo to avoid white hair

vip hari color shampoo vip hari color shampoo

தமிழர்களுக்கு டம்ளரில் நீர் கொடுங்கள்; சிம்பு சொன்னதை செய்த கன்னடர்கள்

தமிழர்களுக்கு டம்ளரில் நீர் கொடுங்கள்; சிம்பு சொன்னதை செய்த கன்னடர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karnataka peoples gave water to TN peoples as per Simbu requestகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர் சங்கம் மௌன போராட்டம் நடத்தினர்.

ஆனால் அதில் நடிகர் சிம்பு கலந்துக் கொள்ளாமல் அன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பல்வேறு விஷயங்களை பேசினார்.

அந்த பேட்டியில் ஏப்ரல் 11ம் தேதி அன்று கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம் என்றார்.

இரு மாநில மக்கள் நல்லவர்கள் தான். அரசியல்வாதிகள் தான் இதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். எனவே நான் மக்களை நம்புகிறேன். அவர்கள் செய்வார்கள் என பேசினார்.

இதை சிலர் கிண்டலடித்தனர். இணையத்தில் ட்ரோல் செய்தும் பேசினர்.

ஆனால் தற்போது சிம்பு கூறியவாறே புகைப்படங்களை கன்னடர்கள் பதிந்து வருகின்றனர்.

கர்நாடகாவில் வாழும் மக்கள் தமிழ் நண்பர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போல புகைப்படங்கள் எடுத்து #Unitedforhumanity எனும் ஹேஷ்டேகில் பதிந்து வருகின்றனர்.

இந்த ஹேஷ்டேக் தற்போது வரை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இதனால் சிம்பு தரப்பில் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அரசியலுக்கு வந்துள்ள ரஜினி, கமலை விட சிம்பு யதார்த்தமாக பேசி வருகிறார் என கன்னட நடிகர் ஒருவர் கூறியுள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Karnataka peoples gave water to TN peoples as per Simbu request

simbu glass of water

ஆந்திராவை அதிர வைக்கும் ஸ்ரீ லீக்ஸ்; பாகுபலி ராணா தம்பியும் சிக்கினார்!

ஆந்திராவை அதிர வைக்கும் ஸ்ரீ லீக்ஸ்; பாகுபலி ராணா தம்பியும் சிக்கினார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Reddy accuses Ranas brother Abhiram of sexual exploitationதமிழ் சினிமாவில் நடைபெறும் அந்தரங்க விஷயங்கள் சுசீ லீக்ஸ் என்ற பெயரில் வெளியானது.

தற்போது ஆந்திராவில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் நடிகை ஸ்ரீ ரெட்டி அந்தரங்க விஷயங்களை அவிழ்த்து விட்டு வருகிறார்.

வடநாட்டு நடிகைகள் இங்குள்ள இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர்வதில் சளைத்தவர்கள் இல்லை என்றார்.

சில தினங்களுக்கு முன் மேலாடை இல்லாமல் போராட்டம் செய்தார்.

தனது குரலை எல்லோரும் கேட்கச் செய்யவும், தனது கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்க வைக்கவும் இந்த ஒரு வழி மட்டுமே மீதமிருந்தது என அப்போது தெரிவித்துள்ளார்.

”சினிமா துறையில் சிலர் என்னிடம் நிர்வாண காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு கேட்கும்போது நான் ஏன் எனது ஆடைகளை அவிழ்த்து கொண்டு பொதுமக்கள் முன் செல்லக்கூடாது? ” எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுபோல் தினம் தினம் ஒரு சர்ச்சையை உருவாக்கி வருகிறார். இதனால் சில நடிகைகள் தங்கள் படம் வெளியாகிவிடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பாகுபலி புகழ் ராணாவின் தம்பி அபிராமும் ஸ்ரீ ரெட்டியும் கிஸ் அடித்துக் கொண்டே இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் கோனா வெங்கட்டின் பெயர் ஸ்ரீரெட்டி லீக்ஸில் இடம்பெற்றது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Sri Reddy accuses Ranas brother Abhiram of sexual exploitation

actress sri reddy nude protest

தமிழ் புத்தாண்டிலும் தமிழ் சினிமாவுக்கு சோதனை காலம்தான்

தமிழ் புத்தாண்டிலும் தமிழ் சினிமாவுக்கு சோதனை காலம்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

For the first time No Tamil movie is release on Tamil new Yearதிரையரங்குகளில் படங்களை திரையிடுவதற்கு கொடுக்கப்படும் கியூப் டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க சொல்லி தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றனர்.

கட்டணங்களை குறைக்கும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என கூறி கடந்த 42 நாட்களாக திரையுலகினர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவில்லையாம்.

தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்து இப்படி ஒரு ஸ்டிரைக்கை திரையுலகினர் கண்டதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் க்யூப் இல்லாத வேறு சில டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது.

இதனால் ஸ்டிரைக் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முழுவதுமாக எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டு சில சட்டச் சிக்கல்களை முடித்து விட்டுத்தான் ஸ்டிரைக் தயாரிப்பாளர்கள் சங்கம் வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற சின்ன சின்ன ஸ்டிரைக்குகளை சினிமா உலகம் பார்த்துள்ளது.

ஆனால் பண்டிகை நாட்களில் எப்படியாவது படங்கள் வெளியாகிவிடும்

ஆனால் இந்தாண்டுதான் முதன்முறையாக தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒரு படங்கள் கூட வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஸ்டிரைக் முடியும்போது கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு மே மாதம் நிறைய படங்களை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் அவையனைத்தையும் மக்கள் ஒரே மாதத்தில் பார்ப்பார்களா? பார்க்கத்தான் முடியுமா? என்பதுதான் தற்போதைய கேள்வி.

For the first time No Tamil movie is release on Tamil new Year

பாலாவின் அடுத்த படம் முடிவானது; லென்ஸ் பட டைரக்டருடன் இணைகிறார்

பாலாவின் அடுத்த படம் முடிவானது; லென்ஸ் பட டைரக்டருடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director balaசில ஆண்டுகளாக படங்களை இயக்குவதை மட்டுமே செய்து வந்தார் பாலா.

தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார்.

நாச்சியார் படத்தை தொடர்ந்து ஒரு புதிய படத்தை தனது ‘பி ஸ்டூடியோஸ்’ சார்பில் தயாரிக்கிறார்.

லென்ஸ் பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

‘லென்ஸ்’ படத்தை தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் வாங்கி வெளியிட்டு இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விரைவில் இந்த புதிய படம் தொடங்கப்பட உள்ளது.

சமுத்திரக்கனி மற்றும் பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்

சமுத்திரக்கனி மற்றும் பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthibanபார்த்திபன் இயக்கத்தில் ஐஸ்வர்யா படு கவர்ச்சியாக நடித்து வெளியான படம் உள்ளே வெளியே.

கடந்த 1993ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறாராம்.

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் பார்த்திபன்.

ஏற்கெனவே ஜேம்ஸ் பாண்டு’, `சுயம்வரம்’ ஆகிய படங்களில் பார்த்திபன் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows