தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
25 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்திய சினிமாவில் அம்மன் பட சீசன் இருந்தது. தமிழகத்தில் இத்தனை விதமான அம்மன் சாமிகள் இருக்கிறார்களா? என்பதே அப்போதுதான் தெரிய வந்தது.
அதன்பின்னர் அம்மன் சீசன் முடிந்துவிட்டதோ என்னவோ.? தமிழ் இயக்குனர்கள் அம்மனை கண்டுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு உத்ரா என்ற பெயரில் அம்மன் படம் ஒன்று வெளியாகவுள்ளது-
இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரிக்க நவீன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். சாய்தேவ் இசை அமைக்க, ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதில் கௌசல்யா அம்மனாக நடிக்க உத்ராவாக ரக்ஷா நடிக்கிறார்.
இந்த படம் அடுத்த மாதம் டிசம்பர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கதைக்சுருக்கம்..
வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை. அங்கு திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.
அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன-? என்பதை சொல்ல இந்த படம் வருகிறது.
உத்ரா ரிலீசுக்கு பிறகு மீண்டும் அம்மன் சீசன் தொடங்குமா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Uthraa new tamil film will release on dec 10
