ஹிந்தியை தமிழாக்கும் போனி கபூர்; அஜித்தை அடுத்து கை கொடுக்கும் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்தார் போனி கபூர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தை தான் தமிழில் ரீமேக் செய்திருந்தனர்.

தற்போது அஜித் நடிப்பில் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு சூப்பர் ஹிட்டான ஹிந்தி படத்தையும் தமிழுக்கு கொண்டு வருகிறார் போனி கபூர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. அயுஷ்மன் குரானா நடித்திருந்த இந்த படத்தில் ஏழைச்சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக கதை இருக்கும.

அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு சாதி தடங்கல்கள் வருவதும், அதனை அவர் முறியடிப்பதுமே படமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க போனி கபூர் தயாரிக்க அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் ரீமேக் தொடர்பான செய்தியை நாம் 2 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தோம்.

அதற்கான லிங்க் இதோ…

https://www.filmistreet.com/cinema-news/ajith-movie-producer-team-up-with-arunraja-kamaraj-and-udhayanidhi/

நேரு ஸ்டேடியத்தை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது.

நேற்று மட்டும் 760 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

தமிழகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,510 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே 624 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,989 கடந்துள்ளது.

இந்த நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அதிக நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்கள் அங்கு தங்க வைக்கப் படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்க இந்தியாவிலேயே இல்லைன்னு சொல்லிக்கோ..; பட்டைய கிளப்பும் க/பெ ரணசிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருமாண்டி என்பவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் க/பெ ரணசிங்கம்.

இப்பட பர்ஸ்ட் லுக்கை அடுத்து இப்பட டீசரும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நிமிடம் 40 நொடிகள் ஓடும் இந்த டீஸரில் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் கிராமத்து மக்களுக்கும் இடையே நடக்கும் தண்ணீர் பிரச்சனையை மைய்ப்படுத்தி எடுத்துள்ளனர்.

தண்ணியையும் காத்தையும் வச்சுதான் அரசியல் செய்றாங்க என்ற வசனத்தோடு இந்த பட டிரைலர் ஆரம்பிக்கிறது.

அரசாங்கமும் அரசு ஊழியர்களும் நினைத்தால் அப்பாவி மக்களை அடிமையாக ஆட்டிப் படைக்கலாம் போன்ற காட்சிகள் உள்ளது.

அதே சமயத்தில் மக்கள் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் என்பது போலவும் காட்சிகள் உள்ளது.

‘ரேஷன் கார்டுல இருந்து பேரை எடுத்துடுவிடியா.. எடுத்துக்கோ.. நாங்க இந்தியாவிலேயே இல்லைன்னு சொல்லிக்கோ போ’ என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் பேசும் வசனம் தற்போது நடக்கும் நிஜ அரசியலை மையப்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு மட்டும் ரம்ஜான் புத்தாடை வழங்கிய பினராயி விஜயன்; ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் பிறை இன்று தெரியவில்லை என்பதால் நாளை மே 25ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாப்பட உள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ஆனால் துபாய், சவுதி உள்ளிட்ட பல நாடுகளிலும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இன்று ரம்லான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தன் மாநிலத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கு ரமலான் புத்தாடை எடுத்து கொடுத்துள்ளார்.

அது ஏன் என்ற விவரம் வருமாறு…

கேரளாவில் கொரோனா சிவப்பு மண்டல பகுதியில் வசிக்கும் மக்கள், மளிகைப் பொருட்களை பெற கேரள அரசு தொலைபேசி எண் அறிவித்துள்ளது.

இதில் வயநாடு பகுதியில் வசிக்கும் ஒரு பெற்றோர், தங்களின் 2 வயது குழந்தைக்கு இது முதல் ரமலான் பண்டிகை என்பதால் புத்தாடை வேண்டும் என கேரள அரசை கேட்டு கொண்டுள்ளனர்.

அந்த கோரிக்கையை ஏற்ற கேரள அரசு, அந்த குழந்தைக்காக புத்தாடை வாங்கி டோர் டெலிவரி செய்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரம்ஜான் முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க ஆளுநர் அனுமதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பொது முடக்கத்தால் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டன.

50 நாட்களை கடந்த வேளையில் கடந்த மே 19 ஆம் தேதியே புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் கேட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் மதுபானங்கள் மீது கொரோனா (COVID 19) வரி விதிக்க கோரிய கிரண்பேடி, அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

மேலும் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு இணையாக விலையை உயர்த்தவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் நீடிக்கவே மதுப்பிரியர்களை வருத்தமடைய செய்தது.

இந்த நிலையில் கோவிட் வரி விதிப்பதற்கு புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால், மதுபான கடைகளை திறப்பது தொடர்பான முடிவுக்கு கிரண்பேடி அனுமதி அளித்தார்.

இதனையடுத்து நாளை மே 25வது நாள் ரம்ஜான் தினத்தன்று புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

செப்டம்பர் 30-க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஐகோர்ட் கெடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது.

அதாவது 1 வருடத்தை கடந்துவிட்டது. ஆனால் சங்க தேர்தல் நடைபெறவில்லை.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

எனவே சிறப்பு அதிகாரி நியமனத்தை ரத்து செய்து, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என விஷால் சார்பிலும் சங்க உறுப்பினரான ராதாகிருஷ்ணன் என்பவரின் தரப்பிலிருந்தும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு அதிகாரியின் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும் இந்தாண்டு 2020 ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை கருத்தில் கொண்டு, ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடித்து, அது குறித்த அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

More Articles
Follows