உதயநிதியை இயக்கும் தேசிய விருது இயக்குனர் பிரியதர்ஷன்

உதயநிதியை இயக்கும் தேசிய விருது இயக்குனர் பிரியதர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi teams up with National award winner Director Priyadarshan

ஒரு படம் முடித்துவிட்டுதான் அடுத்த படம் என்ற கொள்கையில் இருந்த உதயநிதி தற்போது மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

கௌரவ் இயக்கும் இப்படை வெல்லும் என படத்தை தொடர்ந்து, பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையில் இன்று தன் புதிய பட அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.

என்னுடைய அடுத்த படத்தை மூன்ஷாட் நிறுவனம் சார்பாக சந்தோஷ் தயாரிக்க பிரியதர்ஷன் இயக்குகிறார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மலையாளத்தில் பல விருதுகளையும், காஞ்சிவரம் படத்திற்காக தேசிய விருதையும் வென்றவர் பிரியதர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

Udhay‏Verified account @Udhaystalin
Happy to announce my next project wit Dir Priyadarshan sir! Produced by moonshot entertainment Santosh sir!

Udhayanidhi teams up with National award winner Director Priyadarshan

காலா படத்தில் கரிகாலன் கேரக்டரில் தனுஷ்…?

காலா படத்தில் கரிகாலன் கேரக்டரில் தனுஷ்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhanushரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

தனுஷ் தயாரிக்கும் இதன் சூட்டிங் தற்போது மும்மை தாராவி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் கதை, நெல்லையில் வாழ்ந்த ஒரு தமிழர், மும்பை சென்று அங்கே ஒரு தனி சாம்ராஜ்யத்தை நடத்தியாக சொல்லப்படுகிறது.

இதில் 55 வயதை தாண்டிய கேரக்டரில் ரஜினி நடிக்கிறார்.

மேலும் இதில் கபாலி படத்தை போன்று, ஒரு இளவயது கேரக்டரும் உள்ளதாம்.

அந்த இளம் வயது கரிகாலனாக தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக ஒரு பேட்டியில் தனுஷ் கூறியிருந்தார்.

ஒருவேளை இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் ரஜினியாகவே தனுஷ் நடிப்பது அவருக்கு கிடைத்த பாக்கியம்தான் என்பதில் சந்தேகமில்லை.

In Kaala movie Dhanush likely to play Young Rajini character

rajini dhanush

விஐபி2 டீசரின் ரிலீஸ் தேதியை ரன்னிங் டைம் உடன் சொன்ன தனுஷ்

விஐபி2 டீசரின் ரிலீஸ் தேதியை ரன்னிங் டைம் உடன் சொன்ன தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush tweeted VIP2 Teaser Release date with Running Timeசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, விவேக், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2.

சீன் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தை அடுத்த ஜீலை மாதம் 28ஆம் தேதி தன் பிறந்தநாளில் வெளியிடவிருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை வருகிற ஜீன் 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சற்றுமுன் இந்த டீசர் 39 நொடிகள் மட்டுமே ஓடக்கூடியது எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ்.

#VIP2 teaser will be launched on 7 th June #raghuvaranisback.very excited about this one.

Dhanush‏Verified account @dhanushkraja 14m14 minutes ago
#VIP2 teaser .. 2 more days to go #june7th a Sean Roldan musical .. Prasanna.g.k edit .. duration : 39secs @soundaryaarajni @theVcreations

Dhanush tweeted VIP2 Teaser Release date with Running Time

அறிமுகப்படுத்திய சிம்புவுடன் மோதும் சந்தானம்..?

அறிமுகப்படுத்திய சிம்புவுடன் மோதும் சந்தானம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu santhanam-விஜய் டிவியில் பிரபலமான சந்தானத்தை மன்மதன் படம் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்தார் சிம்பு.

இதனைத் தொடர்ந்து வல்லவன், சிலம்பாட்டம், வானம், ஒஸ்தி, இது நம்ம ஆளு, வாலு உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக சிம்பு படத்துடன் இவர் நாயகனாக நடித்துள்ள படம் மோதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற ஜீன் 23ஆம் தேதி சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ரிலீஸ் ஆகிறது.

இதேநாளில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தற்போது சென்சாருக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Clash between Simbu and Santhanam

’60 வயது வேலு பிரபாகரனை மணந்தது ஏன்.?’ ஷெர்லி ஓபன் டாக்

’60 வயது வேலு பிரபாகரனை மணந்தது ஏன்.?’ ஷெர்லி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velu prabakaran sherli marriageபிரபு நடித்த நாளை மனிதன் என்ற திகில் படத்தை இயக்கி தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் வேலு பிரபாகரன்

இதனைத் தொடர்ந்து, கடவுள், புரட்சிக்காரன், சிவன் உள்ளிட்ட பகுத்தறிவு படங்களையும் இயக்கியிருந்தார்.

இதில் பெரியார் ரேஞ்சுக்கு பல கருத்துக்களையும் பேசியிருந்தார். ஆனால் இதன்பின்னர் அவர் இயக்கிய படம்தான் இவரை பற்றிய கருத்துக்களை புரட்டிப்போட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இவர் இயக்கிய, வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற படம் மிகவும் பரபரப்பை உண்டாக்கியது.

இதில் ஆண்கள் போல, பெண்கள் மேலாடை இல்லாமல் இருக்கலாமே என்றார். மேலும் பொத்தி பொத்தி வைப்பதினால்தான் ஆர்வம் அதிகமாகிறது என்றும் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில் தற்போது 8 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற படம் நேற்று வெளியானது.

இதற்கான சிறப்பு காட்சி இன்று சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் திரையிடப்பட்டது.

அப்போது எவரும் எதிர்பாராத வகையில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் நடித்த நடிகை ஷெர்லியை மணந்து கொள்ளப் போவதாக அறிவித்து, அங்கேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து ஷெர்லியிடம் கேட்டபோது… “நடிப்பது பிடிக்கவில்லை. எனவே படங்களில் தொடரவில்லை. வேலு பிரபாகரனின் நேர்மை பிடித்திருந்தது. எனவே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன்” என தெரிவித்தார்.

“உங்கள் மனசாட்சிப்படி சொல்லுங்கள். இது சரியான திருமணமா?” என்று பத்திரிகையாளர் ஒருவர் வேலு பிரபாகரனிடம் கேட்க, அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நடிகை ஷெர்லிக்கு 35 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Do u know Why ‘Kadhal Kadhai’ fame Shirley married 60 aged director Velu Prabhakaran?

ஒரு இயக்குனரின் காதல் டைரி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி கீழே…

Oru-Iyakkunarin-Kadhal-Diary-Movie-Stills-15

 

60 வயதில் காதல் திருமணம் செய்த வேலு பிரபாகரன்

60 வயதில் காதல் திருமணம் செய்த வேலு பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velu Prabakaran and sherlieசர்ச்சையான படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குதர் வேலு பிரபாகரன்.

இவர் இயக்கியுள்ள ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற படம் நேற்று வெளியானது.

இதன் சிறப்பு காட்சியை இன்று திரையிட்டனர்.

அப்போது பத்திரிகையாளர்களுக்கு முன்பு திடீரென திருமணம் செய்து கொண்டார்.

அவர் இயக்கிய படத்தின் முன்னாள் நாயகியை மணந்தார்.

அந்த பெண்ணுக்கு வயது 35. இவருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows