சட்டமன்ற தேர்தல் 2021..: சென்னையின் முக்கிய தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு

udhayanidhi stalinகலைஞரின் பேரன், மு.க.ஸ்டாலின் மகன், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் உதயநிதி.

கலைஞர் மறைவுக்கு பின்னர் திமுக.வில் முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார்.

2019-ம் ஆண்டு தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்திற்கு முன்பு அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை்

இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பமனுவை உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.

எனவே, அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Udhaya Nidhi Stalin to contest in Chepauk

Overall Rating : Not available

Latest Post